கேரட், பீட்ரூட் சூப்
(குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்)
- கேரட் – ஒன்று
- பீட்ரூட் – ஒன்று
செய்முறை:
1.கேரட் மற்றும் பீட்ரூட்டை கழுவி தோல் உரித்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்!!!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
2.பின் இதனை பிரஷர் குக்கரில் வைத்து 4 முதல் 5 விசில் வரை வேக விடவும்.
பீட்ரூட் வேக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதன்பிறகு இதனை ஆறவைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
இத்துடன் சீரகத்தூளை சேர்த்துக் கொண்டால் ருசியாக இருக்கும்.
வெதுவெதுப்பாக உள்ள நிலையில் இதனை குழந்தைக்கு தரலாம்.
தெரிந்து கொள்ள வேண்டியது:
- கேரட்டை வாங்கும் போது ப்ரெஷ்ஷாக இருக்கவேண்டும். அதன் மேல் எந்த வித கறைகளும், கருப்பு நிறமான புள்ளிகளும் இருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
- கடைகளில் பீட்ரூட் வாங்கும்போது ப்ரெஷ்ஷாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.
- பீட்ரூட்டின் மேல்பகுதி அழுக்காக இருந்தால் பரவாயில்லை. ஆனால் அது கெட்டியாக இருக்க வேண்டும்.
- இதை சாப்பிட்ட குழந்தைகள் சிவப்பு நிறத்திலேயே சிறுநீர் மற்றும் மலம் கழிப்பார்கள். அதனால் அதைப்பற்றி கவலைப்படாதீர்கள்.
- குழந்தைகளின் உடலில் வைட்டமின் ஏ சத்துகளை உருவாக்கும் பீட்டா கரோட்டீன் என்ற சத்து கேரட்டில் இருக்கிறது
- குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் தன்மை கேரட்டிற்கு உண்டு
- செரிமானம் மற்றும் குடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு பீட்ரூட் நல்ல தீர்வாக இருக்கும்.
- குழந்தைகளுக்கு சளி தொந்தரவுகளை போக்கும் எதிர்ப்பு சக்தியை பீட்ரூட் கொடுக்கிறது.
- பீட்ரூட்டில் கால்சியம்,பொட்டாசியம், மாங்கனீஸ், நார்ச்சத்து உள்ளிட்ட பல்வேறு சத்துகள் உள்ளன.
மற்ற சூப் வகைகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்
ரெசிபிகளை காண வேண்டுமா? இங்கே சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்..
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு எங்களை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply