ஆவியில் வேக வைத்த தோசை
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
காலை சிற்றுண்டி என்றாலே காலை டிபன் என்றாலே நம் நினைவிற்கு வருவது இட்லியும் தோசையும் தான் அந்த அளவிற்கு இட்லியும் தோசையும் நம் வாழ்வில் இரண்டறக் கலந்துள்ளன. ஆறு மாத காலத்தில் இருந்து குழந்தைகளுக்கு முதல் உணவு கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது நம் வீட்டில் குழந்தைகளுக்கு பெரும்பாலும் கொடுப்பது இட்லி தான்.
அரிசியும் உளுந்தும் சேர்ந்து ஆவியில் வேகவைத்த உணவு என்பதால் உடல் நலத்திற்கு அதைவிட நல்ல உணவு எதுவும் கிடையாது. அதனால்தான் தோசையை விட எல்லாரும் இட்லியை விரும்புவது உண்டு. ஆனால் குழந்தைகள் ஒன்று அல்லது இரண்டு இட்லி சாப்பிடும் வேளையில் அவர்களுக்கு என்று மெனக்கிட இட்லி செய்ய வேண்டிய சூழ்நிலையில் நீங்கள் ஆரோக்கியமாக தோசை வார்த்து கொடுக்க விரும்பினால் இந்த ஆவியில் வேகவைத்த தோசை உங்களுக்கு கைகொடுக்கும்.
தோசையை எப்படி ஆவியில் வேக வைக்கலாம் என்று தானே கேட்கிறீர்கள். நாம் பொதுவாக தோசை செய்யும்போது தோசை மொறுமொறுப்பாக வர வேண்டுமென்று அதிக அளவு எண்ணெய் சேர்த்து கொடுப்பதால்தான் இட்லி குணம் தோசைக்கு இருப்பதில்லை. ஆனால் உண்மையில் எண்ணெய் சேர்க்காமல் இந்த மாதிரி தோசை வார்த்துக் கொடுத்தால் இட்லி போன்ற எளிமையான உணவாக இந்த தோசை அமையும்.
- தோசை மாவு – ஒரு கரண்டி
- நெய் – ஒரு டீஸ்பூன்
தோசை மாவை தயாரிப்பது எப்படி?
தோசை மாவை தயாரிப்பது எளிதானது. இதனை 2 வழிகளில் நீங்கள் செய்யலாம்.
முறை 1:
- இட்லி அரிசி – 4 கப்
- முழு உளுந்து – ஒரு கப்
- வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்
- அரிசி மற்றும் உளுந்தை தனித்தனியாக 3 மணி நேரம் ஊறவைத்து தனித்தனியாகவே அரைத்துக் கொள்ளவும். ஒருவேளை முழு உளுந்து உங்களுக்கு சரியாக வரவில்லை என்றால் பாதியாக உடைத்த உளுந்தை பயன்படுத்துங்கள்.
- முதலில் உளுந்தை நன்றாக அரைத்துவிட்டு அதன்பிறகு அரிசியை அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு இரண்டையும் ஒன்றாக சேர்த்துக் கொள்ளவும்.
- தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும்.
- மாவு பொங்கி வரும் என்பதால் இதனை பெரிய அளவிலான பாத்திரத்தில் வைக்கவும். மிதமான வெப்பநிலை உள்ள இடத்தில் 6 முதல் 8 மணி நேரம் வரை வைத்து மாவு நன்றாக பொங்கி வந்த பிறகு பயன்படுத்தவும்.
முறை 2:
இட்லி அரிசி கிடைக்கவில்லை என்றால் சாதாரண அரிசியை பயன்படுத்தலாம்.
- அரிசி – 3 கப்
- உளுந்து – 1 கப்
- அவல் – 2 டேபிள் ஸ்பூன்
- வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
- அரிசியை வெந்நீரில் ஊறவைத்துக் கொள்ளுங்கள்.
- உளுந்தை சாதாரண நீரில் ஊறவைத்து மேற்கண்ட முறையை பின்பற்றி அரைத்துக் கொள்ளுங்கள்.
- அரைப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன் அவலை ஊறவைத்தால் போதுமானது
தோசை செய்முறை:
தோசை செய்வதற்கு பயன்படுத்தும் பாத்திரங்கள் மற்றும் சாப்பிடும் பாத்திரங்கள் அனைத்தையும் வெந்நீரை கொண்டு நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றி மாவை சிறிய அளவில் வட்டமாக ஊற்றிக் கொள்ளுங்கள்.
தோசையில் துளைகள் வரும் போது நெய்யை ஊற்றி மேலாக ஊற்றி அதனை மூடி போட்டு வேக விடவும்.
சில நிமிடங்கள் ஆனபிறகு மூடியை எடுத்துவிட்டால் மிருதுவான தோசை கிடைக்கும்.
குழந்தைகளுக்கு தோசையை முதலில் கொடுக்கும் போது வெந்நீரை கலந்து மசித்து தரலாம். 7 மாதங்களுக்கு பிறகு சட்னி பொடி அல்லது தக்காளி வெங்காய சட்னி ஆகியவையுடன் சேர்த்து தோசையை கொடுக்கலாம்…
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply