Fruit Custard recipe in Tamil :
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
பழங்கள் உண்ணாத குழந்தைகளையும் விரும்பி உண்ண வைக்கும் ஈசி கஸ்டர்ட் பழ சாலட் ரெசிபி!
“தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் செல்ல தேவையில்லை” என்பது ஆங்கில பழமொழி.பழங்கள் நம் உடலுக்கு தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கியவை.குறிப்பாக குழந்தைகளின் மூளை மற்றும் ஆரோக்கியமான உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றது.ஆனால் குழந்தைகள் பழங்களை விரும்பி உண்ணுவதில்லை என்பதே எல்லா தாய்மார்களின் ஒரே கவலை.அதற்கான தீர்வுதான் ஈசி கஸ்டர்ட் பழ சாலட் ரெசிபி.
ஈசி கஸ்டர்ட் பழ சாலட்
Fruit Custard recipe in Tamil :
இதையும் படிங்க: கோடை காலத்தில் குழந்தைகளை பராமரிக்க எளிய வழிகள்
Fruit Custard recipe in Tamil :
தேவையானவை
பயன்படுத்திய அளவு 1 கப் – 200 மி.லி
- பால் – 2 கப்
- தேன் – 2 டே.ஸ்பூன்
- கஸ்டர்டு பவுடர் – 2 டே.ஸ்பூன்
- மாதுளம்பழம்- ¼ கப்
- திராட்சை- ¼ கப்
- ஆப்பிள்(நறுக்கியது)- ¼ கப்
- பப்பாளி (நறுக்கியது)- ¼ கப்
- மாம்பழம் (நறுக்கியது)- ¼ கப்
செய்முறை
1.ஒரு பவுலில் கஸ்டர்டு பவுடர் மற்றும் 1/4 கப் குளிர்ந்த பால் சேர்த்து நன்றாக கலக்கவும். .
2.மீதி பாலை பானில் ஊற்றி சூடுபடுத்தவும். பால் கொதித்ததும் கஸ்டர்டு பவுடர் மிக்ஸை சிறிது சிறிதாக சேர்க்கவும். கஸ்டர்டு மிக்ஸை மிதமான தீயில் வைத்து 5-7 நிமிடங்களுக்கு கிரீம் பதத்திற்கு வரும்வரை இடைவிடாமல் கலக்கவும்.
3.அடுப்பை அணைக்கவும்.கஸ்டர்டு மிக்ஸை ஆறவிடவும். பின்பு கலவையில் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும்.கலவையை பிரிட்ஜில் வைக்கவும்.
4.ஏற்கனவே வெட்டி வைத்த பழங்களை ஒரு பவுலில் எடுத்து கொள்ளவும்.
5.பிரிட்ஜில் இருந்த கஸ்டர்டு கலவையை எடுத்து ஒருமுறை நன்றாக கலக்கவும். கலவையை வெட்டிவைத்த பழங்களில் ஊற்றி நன்றாக கலக்கவும்.ஜில்லென்று பரிமாறவும்.
- கலவையின் சூடு நன்றாக ஆறியதும் தேனை ஊற்றவும்.
- சிட்ரஸ் வகை பழங்களை சேர்த்தால் கலவை கசப்பாக மாறும்.
- வெஜிடேரியன் என்றால் பாலிற்கு பதிலாக பாதாம் பால் அல்லது சோயா பால் சேர்க்கவும்.
- செயற்கை பிளேஃவர் மற்றும் நிறங்கள் சேர்க்காத கஸ்டர்டு பவுடர் பயன்படுத்தவும்.
- பழங்களை பொடி பொடியாக நறுக்கினால் குழந்தைகள் சாப்பிட வசதியாக இருக்கும்.
- தேனிற்கு பதிலாக கோகோநட் சுகர் சேர்க்கலாம்.
இதையும் படிங்க: ஹோம் மேட் பீனெட் பட்டர் ரெசிபி
Leave a Reply