ஏலக்காய் சேர்த்த சம்பா கோதுமை கஞ்சி பொடி ரெசிபி
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
நீங்கள் தினமும் கேழ்வரகு கஞ்சியை உங்கள் குழந்தைக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் போது அது நிச்சயம் தன் முகத்தை திருப்பிக் கொள்வதை பார்த்திருப்பீர்கள். நீங்கள் தினமும் ஒரே வகையான உணவை கொடுத்துக் கொண்டிருந்தால் அது நிச்சயம் உங்கள் குழந்தைக்கு போரடித்து விடும். இதற்கு தீர்வு வேண்டுமானால் உங்கள் குழந்தைக்கு புதுவிதமான ருசியில் கொடுத்துப் பாருங்கள். உங்கள் குழந்தை அதனை ருசித்து சாப்பிடும். அதை பார்த்தபிறகு நீங்களே புதுப்புது சுவையில் கஞ்சி என விதவிதமாக செய்து கொடுத்து அசத்துவீர்கள்…
குழந்தைகளுக்காக உடனடியாக செய்து கொடுக்கும் கஞ்சி பொடி குறித்த ரெசிபிகள் தான் எங்கள் வலைதளத்தில் அதிகம் பாப்புலரான பதிவுகள். ஏனெனில் குழந்தையின் ஆரம்ப காலத்தில் கொடுக்க வேண்டிய உணவு வகை என்பதால் இதற்கு பெரும்பாலானோர் வரவேற்பு அதிகம் தெரிவித்துள்ளனர். குழந்தைகளுக்கான கஞ்சி வகையில் சம்பா கோதுமையில் செய்யப்படும் ரெசிபி குறித்து பலரும் கேட்டதால் இங்கு அதனை வழங்கியிருக்கிறோம். ஏலக்காய் சேர்த்த சம்பா கோதுமை கஞ்சி பொடி குறித்து இப்போது பார்க்கலாம்…
இந்த கஞ்சியானது கொஞ்சம் திடமாகவும் கட்டிகள் போலும் இருக்கும் என்பதால் 8 மாத குழந்தைகளுக்கு வழங்க ஏற்றது.
ஏலக்காய் சேர்த்த சம்பா கோதுமை கஞ்சி பொடி
- சம்பா கோதுமை 40 கிராம்
- வறுத்த பொட்டுக்கடலை 20 கிராம்
- ஏலக்காய் 2 முதல் 3
செய்முறை
1. முதலில் பொருட்களை எல்லாம் தனித்தனியாக வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.
2. வறுத்த பொருட்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்து பொடியாக்கி கொள்ளுங்கள்.
3. காற்றுப்புகாத டப்பாவில் இதனை போட்டு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். ஈரமில்லாமல், சுத்தமாக உள்ள இடத்தில் இருந்தால் ஒரு மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம்.
வீட்டில் இதை செய்வதற்கு உங்களுக்கு நேரமில்லையா?? கவலை வேண்டாம்… சுத்தமான முறையில் நாங்கள் தயாரித்த பொருளை உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து தருகிறோம்…
ஏலக்காய் சேர்த்த சம்பா கோதுமை கஞ்சி செய்வது எப்படி?
1. சூடு தாங்கும் தன்மை கொண்ட ஒரு கிண்ணத்தில் 4 டேபிள் ஸ்பூன் நீங்கள் செய்த சம்பா கோதுமை பொடியை எடுத்துக் கொள்ளுங்கள்.
2. இத்துடன் நன்றாக கொதிக்க வைத்த 100 மிலி தண்ணீரை சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளுங்கள்.
3. கூடுதல் சுவை மற்றும் சக்திக்காக ஒரு டீஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆறிய பிறகு, இதனை உங்கள் குழந்தைக்கு ஸ்பூன் மூலம் கொடுக்கலாம். பருப்பு, தண்ணீர், கிரேவி மற்றும் பால் ஆகியவற்றுடன் சேர்த்தும் தரலாம். மேலும் மசித்த வாழைப்பழம், சப்போட்டா, பப்பாளி, மாம்பழம் போன்ற பழங்களுடன் சேர்த்து இந்த கஞ்சியை கலந்து கொடுத்தால் சத்தான உணவாக இருக்கும். இதனால் விதவிதமான சுவையில் இருக்கும் உங்கள் கஞ்சி குழந்தைக்கு சாப்பிடும் ஆர்வத்தை தூண்டும்….
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply