Jackfruit Ice cream : இந்த வெயில் காலத்தில் எல்லோர் வீட்டிலும் பொதுவாக குழந்தைகள் கேட்டு அடம் பிடிக்கும் ஒரு விஷயம் என்றால் அது கண்டிப்பாக ஐஸ்கிரீம் தான். அடிக்கடி ஐஸ்கிரீம் கேட்டு நச்சரிக்கும் குழந்தைகளை நாம் வெயில் காலத்தில் வாங்கி தருகிறோம் என்று சொல்லி தான் சமாதானப்படுத்தி இருப்போம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அதற்காகவே வெயில் காலம் எப்பொழுது வருகிறது என்று காத்திருந்து நம்மிடம் அழகாக கேட்கும் குழந்தைகளை மறுக்க மனசு வராது.
ஆனாலும் ஒரு பக்கம் ஐஸ்கிரீமில் என்னென்ன உட்பொருள்கள் கலந்து உள்ளார்களோ? என்று யோசிக்கும் பொழுது நாமே நம் குழந்தைக்கு ஆரோக்கியம் இல்லாததை கொடுக்கின்றோமோ என்ற சந்தேகம் ஏற்படும்.
அதனால் இப்பொழுது கோடை காலம் வந்தவுடன் ஹோம் மேட் ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்ற வீடியோ தான் எங்கு பார்த்தாலும் வந்து கொண்டிருக்கின்றது. நாமும் அதிலே சற்று வித்தியாசமாக இன்று பார்க்க போகும் ரெசிபி தான் பலாப்பழ ஐஸ் கிரீம்.
இது பலாப்பழம் சீசன் என்பதால் ஐஸ்கிரீம்முடன் பலாப்பழத்தின் நன்மையும் குழந்தைகளுக்கு கிடைக்கும் என்ற திருப்தியுடன் இந்த ரெசிபியை நாம் செய்து கொடுக்கலாம்.
நட்ஸ் மற்றும் பழங்களை வைத்து செய்யும் விதவிதமான ஐஸ்கிரீம்கள் தற்பொழுது பிரபலமாகி வரும் நேரத்தில் நாம் பலாப்பழத்தை வைத்து வித்தியாசமாக இந்த ஆரோக்கியமான ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
Jackfruit Ice cream:

Jackfruit Ice cream:
இதை பார்ப்பதற்கு முன்னால் பலாப்பழத்தின் நன்மைகளை பார்க்கலாம்:
- பலாப்பழத்தில் இயற்கையாகவே வைட்டமின்கள் A,C மற்றும் B காம்ப்ளக்ஸ் போன்றவை நிறைந்துள்ளது.
- இந்த வைட்டமின்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கும். கூர்மையான கண்பார்வைக்கும் உதவுகின்றது.
- பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்துக்கொள்ள உதவுகின்றது. எனவே வளரும் குழந்தைகளை நோய் தொற்றிலிருந்து பார்ப்பதற்கு பலாப்பழத்தில் இருக்கும் சத்துக்கள் உதவுகின்றது.
- பலாப்பழத்தில் இயற்கையாகவே இருக்கும் நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியது.
- பலாப்பழத்தில் இயற்கையாகவே இருக்கும் சக்கரைகள் குழந்தைகளுக்கு தேவையான எனர்ஜியை தரவல்லது. எனவே குழந்தைகள் சுறுசுறுப்புடன் இயங்குவதற்கு உதவுகின்றது.
- பலாப்பழத்தில் அதிகமாக மெக்னீசியம் மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- பலாப்பழத்தில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை தெளிவான கண் பார்வைக்கு உதவுகின்றது.
- பலாப்பழத்தில் இயற்கையாகவே ஆன்டி-ஆக்சிடென்ட் இவை செல்களின் வளர்ச்சிக்கு உதவி செய்து மினுமினுப்பான சருமத்திற்கும் உதவி செய்கின்றது.
Jackfruit Ice cream
- பழுத்த பலாப்பழம்- ஒரு கப் (விதை நீக்கி நறுக்கியது)
- பிரஷ் கிரீம்- ஒரு கப்
- கண்டன்ஸ்டு மில்க்- அரை கப்
- டிரை ஃப்ரூட்ஸ்– 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கிய பாதாம், முந்திரி)
- குங்குமப்பூ- ஒரு டேபிள் ஸ்பூன் (வெதுவெதுப்பான பாலில் ஊற வைத்தது)
Jackfruit Ice cream:
செய்முறை
- பலாப்பழத்தை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு பவுலில் பிரஷ் கிரீமினை எடுத்துக் கொள்ளவும்.
- அதில் கண்டன்ஸ்டு மில்க், பலாப்பழ விழுது, குங்குமப்பூவில் ஊற வைத்த பால், மற்றும் வெட்டி வைத்த டிரை ஃப்ரூட்ஸ்கள் சேர்க்கவும்.
- எல்லாவற்றையும் நன்றாக கிளறவும்.
- ஒரு கப்பில் வைத்து ஃப்ரீசரில் ஒருநாள் இரவு முழுவதும் வைக்கவும்.
- குழந்தைகளுக்கு பரிமாறவும்.
குறிப்பு: சிறு குழந்தைகளுக்கு கொடுக்கும்பொழுது டிரை ஃப்ரூட்ஸ்களை நறுக்கி போடாமல் நன்றாக அரைத்து கொடுக்கவும்.
மற்ற ஐஸ்கிரீம்களை காட்டிலும் பலாப்பழ ஐஸ்கிரீம் ஆனது சற்று வித்தியாசமான சுவையுடன் இருக்கும். பலாப்பழத்தின் சுவை இயற்கையாகவே இனிப்பு சுவையுடன் உண்பதற்கு சுவையாக இருக்கும்.
அதனுடன் ஐஸ்கிரீம், பால் மற்றும் கிரீம் ஆகியவை சேர்த்து கொடுக்கும் பொழுது கண்டிப்பாக குழந்தைகளுக்கு விருப்பமான ஐஸ்கிரீமாக இது இருக்கும்.
மேலும் பலாப்பழத்தை சாப்பிடாத குழந்தைகளும் இப்படி ஐஸ்கிரீமாக சேர்த்து கொடுத்தால் அதன் நன்மைகள் குழந்தைகளுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் கடைகளில் விற்கும் ஐஸ்கிரீம்களை கேட்டு குழந்தைகள் அச்சடிக்காமல் ஆரோக்கியமான ஐஸ்கிரீமை சாப்பிடுவார்கள்.
Jackfruit Ice cream
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Jackfruit Ice cream:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஒரு வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு இந்த ஐஸ்கிரீமை கொடுக்கலாமா?
இதில் பால் மற்றும் பால் பொருட்கள் சேர்த்துள்ளதால் ஒரு வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு இந்த ஐஸ்கிரீமினை கொடுக்கக் கூடாது.
இந்த ஐஸ்கிரீமினை டிரை ஃப்ரூட்ஸ் சேர்க்காமல் செய்யலாமா?
நீங்கள் வேண்டாம் என்று விருப்பப்பட்டால் டிரை ஃப்ரூட்ஸ் சேர்க்காமலும் செய்து பார்க்கலாம். குங்குமப்பூ என்பது நல்ல வாசனைக்கு மட்டுமே சேர்ப்பது என்பதால் அதை சேர்க்காமலும் செய்து பார்க்கலாம்.
பலாப்பழத்திற்கு பதிலாக வேறு பழம் சேர்க்கலாமா?
வேறு பழங்கள் சேர்க்கலாம். ஆனால் பலாபழமானது ஐஸ்கிரீம் செய்வதற்கு ஏற்ற சுவையுள்ள பழமாகும் என்பதால் பலாப்பழம் மட்டுமே சேர்ப்பது நன்கு சுவையாக இருக்கும்
Leave a Reply