வயது-குழந்தையின் 7வது மாதத்தில் இருந்து கொடுக்கலாம்
குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்!!!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளுக்கான ஜவ்வரிசி கீர்
Javvarisi Kheer/Sago kheer
(குழந்தையின் 7வது மாதத்தில் இருந்து கொடுக்கலாம்)
- ஜவ்வரிசி – 2 டேபிள் ஸ்பூன்
- பனங்கல்கண்டு அல்லது வெல்லப்பாகு – 1 டீஸ்பூன்
- ஏலக்காய் தூள் – சிறிது
- பாதாம் தூள் – சிறிது
செய்முறை :
- ஜவ்வரிசியை நன்றாக கழுவிக் கொள்ளவும்.
- ஜவ்வரிசியின் வகையை பொறுத்து அதனை ஊறவைத்துக் கொள்ளலாம். சில ஜவ்வரிசி வகையை கால் மணி நேரம் ஊறவைத்தால் போதும். சில வகை இரவு முழுவதும் ஊறினால் தான் நன்றாக இருக்கும்.
- நன்றாக ஊறிய ஜவ்வரிசியை கொதிக்கும் நீரில் போட்டு நன்றாக கொழகொழப்பாக ஆகும் வரை வேகவிடவும்.
- இத்துடன் பனங்கல்கண்டு தூள் அல்லது வெல்லப்பாகு கலந்து கொள்ளவும்.
- இதில் ஏலக்காய் தூள் மற்றும் பாதாம் தூளை சேர்த்து குழந்தைக்கு கொடுக்கலாம்…
தெரிந்து கொள்ள வேண்டியது :
பொதுவாக ஜவ்வரிசி குழந்தைகளுக்கு ஒத்துக் கொள்ளாது என்ற நம்பிக்கை உள்ளது.
ஆனால் ஜவ்வரிசி கீர் செய்து 7 மாத குழந்தைக்கு கொடுக்கும் போது அது அவர்களின் வயிற்றுக்கு போதுமானதாக இருக்கும்.
இதில் ஸ்டார்ச் சத்து நிரம்பியிருக்கிறது. ஆனால் சத்துகள் இதில் குறைவு தான்.
மலச்சிக்கல் பிரச்சினைக்கு ஜவ்வரிசி தீர்வளிக்கும்.
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply