ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
Kambu Kanji
குழந்தைகளுக்கான கம்பு பவுடர் மிக்ஸ் ரெசிபி
8 மாத குழந்தைக்கான சிறந்த உணவு கம்பு பவுடர் மிக்ஸ்.
ஐந்து நிமிடங்களில் செய்யக்கூடிய ஆரோக்கிய உணவு. நீண்ட நேரம் பசியைத் தாங்கும். எனர்ஜி கொடுக்கும். அதேசமயம் ஊட்டச்சத்துகள் நிறைந்தது. இதை நீங்கள் இன்ஸ்டன்ட் மிக்ஸாகவும் பயன்படுத்தலாம். பயணத்துக்கு செல்வோர்கூட தங்கள் குழந்தைக்காக எடுத்துச் செல்லலாம். ஈஸி, ஹெல்தி..
‘கம்பு தரும் தெம்பு’ என்று பலரும் சொல்லக் கேட்டிருப்போம். உண்மையில், கம்பு தெம்பை அள்ளித் தரும். கம்பு, ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. அதுபோல, கிராமப்புறங்களில் இதன் மகத்துவம் தெரிந்து பெரும்பாலானோர் கம்பங்கூழ் செய்து சாப்பிடுவோர் பலர். அத்தகைய சிறப்பு வாய்ந்தது கம்பு. நாம் அரிசி, கோதுமைக்கு மாறினதால் கம்பு போன்ற சிறுதானியங்களை மறந்து விட்டோம். மறக்கப்பட்ட தானியங்களில் கம்பும் ஒன்று.
கம்பில் ஏராளமான சத்துகள் நிறைந்துள்ளன. புரதம், நார்ச்சத்து, விட்டமின் இ, கே, பி6, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், ஜின்க், செலினியம் போன்ற சத்துகள் உள்ளன.
8 மாத குழந்தைக்கான சிறந்த உணவு கம்பு பவுடர் மிக்ஸ்.
கம்பு பவுடர் மிக்ஸ் செய்வது எப்படி?
- கம்பு – 50 கிராம்
- சிறு பருப்பு (பயத்தம் பருப்பு) – 20 கிராம்
- எள்ளு – 10 கிராம்
தயாரிக்கும் நேரம் : 2 மணி நேரம்
சமைக்கும் நேரம் : 5 நிமிடங்கள்
முழு நேரம் : 2 மணி நேரம் 5 நிமிடங்கள்
செய்முறை
- கம்பு, பருப்பு, எள்ளு ஆகியவற்றைக் கல், தூசு இல்லாமல் சுத்தம் செய்துக்கொள்ளுங்கள்.
- கம்பு, பருப்பு, எள்ளு ஆகியவற்றை நன்றாக வறுத்துக்கொள்ளுங்கள்.
- அதை ஆற வைத்து, தனித்தனியாக அரைத்துக்கொள்ளவும்.
- தனித்தனியாக அரைத்தவற்றைச் சேர்த்துக்கொள்ளவும்.
- இந்தப் பவுடரை சுத்தமான, உலர்ந்த, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.
கம்புக் கஞ்சி செய்வது எப்படி?
- வெந்நீரில் ஒரு டேபிள்ஸ்பூன் கம்பு மிக்ஸ் பவுடரைக் கலந்து நன்கு கலக்கி, சில நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.
- இளஞ்சூடாகக் குழந்தைக்கு கொடுக்கலாம்.
100 கிராம் கம்பு பவுடரில் கிடைக்கும் சத்துக்கள்
கலோரிகள் 385
புரதம் 12.53 கி
இரும்புச்சத்து 5.71 கி
கால்சியம் 8 கி
இதுபோல் தயாரிப்பது உங்களுக்கு சிரமமாக இருக்கிறதா? கவலை வேண்டாம்… சுத்தமான முறையில் நாங்கள் தயாரித்த பொருளை உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து தருகிறோம்…
கம்பு பற்றி தெரிந்து கொள்வோமா:
கம்பு பவுடரால் தயாரித்த உணவைக் குழந்தைக்கு கொடுத்தால் எனர்ஜி கிடைக்கும்.
நீண்ட நேரம் பசி எடுக்காது.
உடலில் நடக்கும் வளர்சிதை மாற்றங்கள் சீராக நடைப்பெறும்.
செரிமானம் சீராகச் செயல்படும். அஜீரணக் கோளாறு குழந்தைக்கு வராது.
அமினோ அமிலங்கள், ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளதால் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும்.
உடலில் நீர்ச்சத்து சரியான அளவில் பராமரிக்கப்படும்.
உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.
பயணத்துக்கு இதை நீங்கள் எடுத்துச் செல்லலாம். பயணத்தால் ஏற்படக்கூடிய சோர்வு குழந்தைக்கு வராது. கம்பு, பர்ஃபெக்ட் டிராவல் உணவு.
இதுபோன்ற பயணத்துக்குத் தேவையான உணவுகளை, லிட்டில் மொப்பெட் பிளாகில் பார்க்கலாம்.
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply