Which bed is safe for babies in Tamil
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
தாயின் வயிற்றில் பாதுகாப்பாக இருந்த குழந்தைக்கு வெளியில் வந்ததும் நம் சுற்றுப்புற சூழ்நிலைகள் எல்லாம் வித்தியாசமானதாக இருக்கும். உங்கள் குழந்தைக்கு எந்த தொட்டில் சிறந்தது?அவர்களை எப்படி தூங்க வைக்க வேண்டும்? எப்படி தூங்கினால் சவுகரியமானதாக உணர்வார்கள் என்பதை காண்போம்.
உங்கள் குழந்தைக்கு எந்த தொட்டில் சிறந்தது?
குழந்தைகள் தாயின் வயிற்றில் இருந்த வரை பனிக்குடத்தில் பாதுகாப்பாக இருந்திருப்பார்கள்.பனிக்குடம் என்பது திரவங்கள் சூழ்ந்துள்ள பகுதி என்பதால் குழந்தைகள் ஏறத்தாழ அதில் மிதந்து கொண்டுதான் இருந்திருப்பார்கள்.ஆனால் நம் குழந்தைகள் பூமிக்கு வந்ததும் சந்திப்பது முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலை.எனவே குழந்தைகள் மிகவும் அசவுகரியமானதாக உணர்வார்கள். ஆகவே குழந்தை தூங்குவதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கி கொடுக்க வேண்டியது நம் கடமை.குழந்தைகள் தாயின் அரவணைப்பில் இருப்பது நல்லது என்று ஆய்வுகள் கூறுகின்றன.ஆனால் எந்த நேரமும் தாய் அருகிலே இருக்க முடியாது அல்லவா.தாய்ப்பால் குடிக்கும் நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் எப்படி படுக்க வைப்பது என்பதே கவனத்தில் கொள்ள வேண்டியவை . நம்மில் பெரும்பாலானோர் தற்பொழுது மரத்தால் ஆனா விதவிதமான தொட்டில்களில் படுக்க வைப்பது மற்றும் மெத்தைகளில் படுக்க வைப்பதையே விரும்புகிறார்கள்.அதையே கவுரவம் என்று நினைக்கிறார்கள்.ஆனால் அது தவறு. நமது முன்னோர்கள் பாரம்பரியமாக பின்பற்றும் தூளி முறையே சிறந்தது.
ஏனென்றால் குழந்தையின் முதுகெலும்பு மிகவும் மிருதுவானதாக இருக்கும்.எனவே சமதளமான பரப்பில் படுப்பதற்கு குழந்தைக்கு சிரமமாக இருக்கும்.குழந்தையால் அதை வெளிப்படையாக சொல்லவும் முடியாது.அழுது கொண்டே இருப்பார்கள்.ஆனால் நாம் தூளியில் படுக்க வைக்கும் பொழுது குழந்தையின் அசைவிற்கு ஏற்றவாறு தொட்டில் துணி வளைந்து கொடுக்கும். இது ஏறத்தாழ தாயின் கருவறையில் உள்ள உணர்வை தரும்.
குழந்தைக்கு தூளி கட்டுவதால் ஏற்படும் நன்மைகள்:
- தாயின் அருகில் இருப்பதை போன்று நெருக்கத்தை தரும்.
- குழந்தையின் முதுகெலும்பை பாதுகாக்கும்.
- பூச்சி, வண்டு போன்றவற்றிலிருந்து பாதுகாப்பளிக்கும்.
- குழந்தைகள் புரண்டு படுக்கும் பொழுது கீழே விழும் பாதிப்புகள் இல்லை.
- தூளி ஆட்டும் பொழுது தாயின் முகத்தின் குழந்தை பார்ப்பதால் மாறுகண் பிரச்சனை ஏற்படாது.
- குழந்தை சிறுநீர் கழிக்கும் பொழுது சிறுநீர் துணியின் வழியே வெளியேறி விடுவதால் குழந்தைக்கு எரிச்சல் ஏற்படாது.
- தொட்டிலில் நிழலில் குழந்தை அதிக நேரம் தூங்கும்.
தூளி கட்டும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை
- தூளி கட்டும் துணி சுத்தமான பருத்து துணியாக இருக்க வேண்டும்.
- தூளியில் குழந்தை தூங்கும் பொழுது தலை பகுதி சற்று உயரத்தில் இருக்க வேண்டும்.எனவே வாந்தி எடுத்தால் மூக்கிற்குள் செல்லாது.
- குழந்தையின் உடலுக்கு மேல் துணியை போர்த்த கூடாது.ஏனென்றால் குழந்தை கை, காலை அசைக்கும் பொழுது துணி குழந்தை முகத்தை மறைத்து மூச்சு திணறலை ஏற்படுத்த கூடும்.
- தூளி கட்டும் பொழுது கவனமாக அவிழ்ந்து விடாதவாறு கட்ட வேண்டும்.
- குழந்தையை அடிக்கடி கண்காணிக்க வேண்டும்.
- ஸ்ப்ரிங் பயன்படுத்தாமல் கையால் காட்டுவதே சிறந்தது.
- மேலும் மிதமான வேகத்தில் ஆட்ட வேண்டும்.குழந்தையை ஒவ்வொருமுறை தொட்டிலில் போடும் பொழுது தொட்டிலை நன்றாக உதறி சுத்தம் செய்த பின்பு குழந்தையை போட வேண்டும்.
- தொட்டிலின் மேல் அலங்காரத்திற்காக பொம்மை போன்ற பொருட்கள் கட்டும் பொழுது அதில் கூர்மையான பொருட்கள் ஏதேனும் இருக்குகின்றதா எனப்பார்க்க வேண்டும். ஏனென்றால் அவை எதிர்பாராதவிதமாக குழந்தைகளை காயப்படுத்தக்கூடும்.
நம் பாரம்பரியமான தூளியில் இவ்வளவு நன்மைகள் இருக்கும் பொழுது மெத்தை வேண்டாமே.நம் குழந்தைகளை ஒரு வயது வரை தூளியில் பாதுகாப்பாக தூங்க வைத்து நிம்மதியான தூக்கத்திற்கு வழி வகுப்போம்.
இதையும் படிக்கவும்: பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய சத்தான உணவுகள்.
Leave a Reply