Lassi Recipe in Tamil: குழந்தைகளுக்கு தேவையான கால்சியம் சத்தினை கொடுத்து எலும்பினை வலுவாக வல்லது தயிர். இது எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவும் கூட. ஆனால் என் பையனுக்கு தயிர் என்ற வார்த்தையை கேட்டாலே அலர்ஜி.எனவேதான் நான் அவனுக்கு இந்த சுவையான லஸ்ஸியினை செய்து கொடுக்க ஆரம்பித்தேன்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
முதலில் சுவைக்க மறுத்த அவன் லஸ்ஸியினை ஒரு முறை சுவைத்ததும் இப்பொழுது அடிக்கடி கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறான். இதை நாம் கடைகளில் வாங்குவதை விட வீட்டிலேயே செய்யும் போது சீனி சேர்க்காமல் நாட்டு சர்க்கரை குங்குமப்பூ ,ஏலக்காய் மற்றும் குழந்தைகளுக்கு விருப்பமான நட்ஸ் சேர்த்து சுவையாக செய்து கொடுக்கலாம். இதை செய்வதும் மிக மிக எளிது.

Lassi Recipe in Tamil:
- குங்குமப்பூ – ஐந்து இதழ்கள்
- தயிர்- ¼ கப்
- நாட்டுச்சர்க்கரை- 2 டீஸ்பூன்
- ஏலக்காய்த்தூள் – ¼ டீஸ்பூன்
இதையும் படிங்க: நிலக்கடலை லட்டு
குழந்தைகளுக்கான குங்குமப்பூ லஸ்ஸி
செய்முறை
1.குங்குமப்பூவினை தண்ணீரில் 5 நிமிடம் ஊறவைக்கவும்
2.மிக்ஸியில் தயிர்,நாட்டுச் சர்க்கரை, குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
3.குளிர்ச்சியாக அல்லது இதமாக பரிமாறவும்.
இதையும் படிங்க: சத்துமாவு பர்பி
கோடை காலத்தில் இதை தினமும் குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது உடலுக்கு குளிர்ச்சி தரும்.குளிர்காலத்தில் வாரம் ஒரு முறை பிரிட்ஜில் வைக்காமல் அப்படியே கொடுக்கலாம்.
தயிரின் நன்மைகள்:
- தயிரில் உள்ள புரோட்டீன் எளிதில் செரிமானம் ஆகிவிடும்.
- உடலுக்கு குளிர்ச்சியினை அளிக்கவல்லது.
- தயிரில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளுக்கு பலமளிக்கக்கூடியது.
- உடலின் நோய் எதிர்ப்புசக்தியினை அதிகரிக்கவல்லது.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply