Nannari Sarbath recipe in tamil : நன்னாரி சர்பத் கோடைகாலத்தில் நாம் விரும்பி பருகும் பானங்களில் ஒன்றாகும். கோடை காலம் ஆரம்பிக்கும் பொழுதே நன்னாரி சர்பத் கடைகள் கலை கட்ட ஆரம்பித்து விடும்.நன்னாரி சர்பத் என்பது உண்மையில் நன்னாரி வேரை வைத்து செய்ய கூடிய ஒரு வகை பானம் ஆகும்.ஆனால் இப்பொழுது சுத்தமான நன்னாரி சர்பத் கிடைப்பது அரிதாகி விட்டது.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
செயற்கை நிறமூட்டிகள் மற்றும் ப்ரெசர்வேடிவ்ஸ் சேர்க்கப்பட்டவை மட்டுமே கிடைக்கின்றன.அவற்றை அருந்தும் பொழுது நன்னாரியினால் கிடைக்கும் நன்மைகள் கிடைக்காது மாறாக இதில் கலந்துள்ள நிறமூட்டிகள் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை.இப்பொழுது நாம் நன்னாரி வேரை வைத்து இயற்கையான முறையில் சர்பத் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
நன்னாரிவேரின்மருத்துவ குணங்கள்:
- உடல் சூட்டை தணிக்கின்றது.
- ரத்தத்தை சுத்திகரிக்கின்றது.
- தோல் நோய்கள் அண்டாமல் தடுக்கும்.
- செரிமான பிரச்சனைகளை சரி செய்கிறது.
- சிறுநீர் சம்மந்தப்பட்ட பிரச்னைகளுக்கு நல்ல மருந்தாகும்.
- நன்னாரி வேர் – 50 கிராம்
- கற்கண்டு – 200 கிராம்
- லெமன் ஜூஸ்- 1 டீ.ஸ்பூன்
- தண்ணீர் – 3 கப்
இதையும் படிங்க: குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவு.
Nannari sarbath recipe in Tamil
நன்னாரி சர்பத் செய்முறை
1.நன்னாரி வேரை நீரில் நன்றாக கழுவவும்.
2. சுத்தமான துணியால் வேரை நன்றாக துடைத்து எடுக்கவும்.
3.நன்னாரி வேரை நறுக்கி பிரவுன் நிறப்பகுதி மற்றும் வெள்ளை நிறப்பகுதி இரண்டையும் தனியாக பிரித்து எடுக்கவும். நாம் பிரவுன் நிற பகுதியை மட்டுமே பயன்படுத்தப்போகின்றோம்.வெள்ளை நிற பகுதியை நீக்கி விடவும்.
4.வேரை சிறுசிறு துண்டுகளாக இடித்து கொள்ளவும்.
5. 3 கப் தண்ணீரை பானில் ஊற்றி சூடு படுத்தவும்.தண்ணீரில் சிறிது நுரை வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். நன்னாரி வேரின் பிரவுன் நிறபாகங்களை தண்ணீரில் போடவும்.
6.பாத்திரத்தை மூடியால் மூடி 6 மணிநேரம் அல்லது ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே வைக்கவும்.
7.அடுத்த நாள் வேருடன் சேர்த்து தண்ணீரை 5 நிமிடம் சூடு படுத்தவும். சுத்தமான முஸ்லின் துணியால் ஜுஸையும் வேரையும் பிரித்து எடுக்கவும்.
8.கற்கண்டை ஜுஸுடன் சேர்த்து மிதமான தீயில் சூடாக்கவும்.கற்கண்டு நன்றாக கரைந்து கம்பி பதத்திற்கு வரும்வரை சூடாக்கவும்.
9.அடுப்பை அணைக்கவும்.லெமன் ஜுஸை அதனுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.நன்றாக ஆறியவுடன் காற்று புகாத சீசாவில் அடைக்கவும்.
10. 2 முதல் 3 டே.ஸ்பூன் நன்னாரி சர்பத்தை ஒரு டம்ளர் குளிர்ந்த நீருடன் சேர்த்து நன்றாக கலக்கி பரிமாறவும். தேவைப்பட்டால் லெமன் ஜூஸ் சேர்த்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: ஆறு மாத குழந்தைக்கான ஹெல்த்தி ஆர்கானிக் உணவுகள்.
இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட நன்னாரி சர்பத் உடல் சூட்டை தனித்து மேலே கூறப்பட்ட அனைத்து நன்மைகளையும் உடலுக்கு அளிக்கும். முக்கியமாக குழந்தைகளுக்கு ஏற்ற இயற்கையான ஜூஸ்.
Leave a Reply