ragi buttermilk benefits: வெயில் காலத்தில் சூட்டின் கோரத்தாண்டவம் இப்பொழுதே ஆரம்பித்து விட்டது. இந்த காலகட்டத்தில் குழந்தைகளுக்கு தண்ணீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
கோடைகாலத்தில் பொதுவாக தண்ணீர் சத்துள்ள பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை குடிக்க கொடுப்பதோடு சேர்த்து தண்ணீரையும் அதிகம் கொடுக்க வேண்டும்.
தண்ணீரோடு மட்டுமல்லாமல் மோர் போன்ற நீராகாரங்களையும் கொடுப்பது குழந்தைகளில் உடல் நலனுக்கு நல்லது. அந்த வகையில் இன்று நாம் பார்க்க போகும் ரெசிபி கோடை காலத்திற்கு ஏற்ற ராகி மோர் எனப்படும் கேழ்வரகு மோர்.
ராகி கஞ்சி தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். அது என்ன ராகி மோர் என்று பார்க்கின்றீர்களா. ராகியின் நற்குணங்களும், மோரின் குளிர்ச்சியும் சேர்ந்த ஒரு அற்புதமான ரெசிபி தான் இந்த ராகி மோர்.
பொதுவாக ராகியினை களியாக கிண்டி கொடுக்கும் பொழுது அதனை குழந்தைகள் உண்ண மறுப்பர். இப்படி மோருடன் சேர்ந்து சுவையாக கொடுக்கும் பொழுது ராகியினை உண்ணாத குழந்தைகளும் விரும்பி உண்ண ஆரம்பிப்பர்.
Ragi buttermilk benefits:
ராகியின் நன்மைகள்
- ராகி மோரில் குழந்தைகளுக்கு தேவையான கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் டி மற்றும் பிஆகிய சத்துக்கள் இணைந்துள்ளதால் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கிய ரெசிபி ஆகும்.
- ராகியானது குழந்தைகளுக்கு எளிதில் செரிமானமாக கூடிய ஒரு தானியமாகும். மேலும் மோரில் கலந்துள்ள ப்ரோபையோட்டிக்குகள் குழந்தைகளுக்கு எளிதில் செரிமானமாக செய்கின்றது.
- ராகியில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது. எனவே இதனை குழந்தைகளுக்கு கொடுக்க கொடுக்கும் பொழுது பல்வேறு நோய்களிலிருந்து விடுபட உதவும்.
- ராகியில் கால்சியம் சத்துக்கள் அதிகம் இருப்பதால் குழந்தைகளின் பற்களுக்கும், எலும்புகளுக்கும் வலுவளிக்க கூடியது.எனவே குழந்தைகளின் ஆரோக்கியமாக எலும்பு வளர்ச்சிக்கு இது உதவுகின்றது.
- ராகியில் கலோரிகளும்,கார்போஹைட்ரேடுகளும் அதிகம். எனவே குழந்தைகளின் ஆரோக்கியமான எடை வளர்ச்சிக்கு இது உதவுகின்றது. மேலும் இதில் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் குறைவு.
ragi buttermilk benefits:
தேவையானவை
• ராகி மாவு- 1/2 கப்
• மோர்- 2 கப்
• கடுகு -1/2 டீ.ஸ்பூன்
• உளுந்தம் பருப்பு -1/2 டீ.ஸ்பூன்
• கடலைப்பருப்பு- 1/2 டீ.ஸ்பூன்
• எண்ணெய் -தேவையான அளவு
ragi buttermilk benefits:
செய்முறை
- ஒரு பானில் ராகி மாவுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- சட்டியை அடுப்பில் வைத்து கலவை கெட்டி ஆகும் வரை கட்டிகள் இல்லாமல் நன்றாக கிளறி கொண்டே இருக்கவும்.
- ஒரு ஜாரில் கிளறிய ராகி மற்றும் மோர் சேர்த்து நன்றாக ஒரு அடி அடிக்கவும்.
பானில் எண்ணெயை சுட வைத்து அதில் கடுகு சேர்க்கவும். - கடுகு வெடித்ததும் அதன் பின் உளுந்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
- தயாரித்து வைத்த மோரினை அதில் ஊற்றி பரிமாறவும்.
ragi buttermilk benefits:
மொத்தத்தில் கோடை காலத்தில் விதவிதமான கூல்ட்ரிங்ஸ் அருந்துவதை காட்டிலும் மிகவும் ஆரோக்கியமானது இந்த ராகி மோர் ரெசிபி. நீங்களும் வீட்டில் செய்து குழந்தைகளுக்கு கொடுத்துப் பாருங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை அறிய 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
குழந்தைகளுக்கு எப்பொழுதில் இருந்து ராகி கொடுக்க ஆரம்பிக்கலாம் ?
குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முடிவடைந்த உடன் முதல் முதலாக உணவு கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது ராகி பால், ராகி கஞ்சி ஆகியவற்றினை கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு முதல் முதலாக கொடுக்கும் பொழுது சிறிது கொடுத்து செயல்பாடுதபின் பின்பு படிப்படியாக அதன் அளவினை அதிகரிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு ராகியினை எப்படி கொடுக்க வேண்டும்?
முதல் கொடுக்கும் பொழுது ராகியினை வறுத்து பொடி செய்து சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனுடன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கஞ்சி போன்று கிளறி கொடுக்கலாம்.
ராகி குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது சர்க்கரை சேர்க்கலாமா?
குழந்தைகளுக்கு ஒரு வயது வரை சீனி, சர்க்கரை போன்றவை சேர்க்க கூடாது என்பதால் சர்க்கரை சேர்க்காமலேயே கொடுப்பது நல்லது.
குழந்தைகளுக்கு ராகி தினமும் கொடுக்கலாமா?
ஆம். நீங்கள் தாராளமாக குழந்தைகளுக்கு ராகி கஞ்சி,ராகி மோர் ஆகியவற்றை தினமும் கொடுக்கலாம்.
கோடைக்கேற்ற ராகி மோர்
Ingredients
- ராகி மாவு- அரை கப்
- மோர்- இரண்டு கப்
- கடுகு -அரை டீ.ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு -அரை டீ. ஸ்பூன்
- கடலைப்பருப்பு- அரை டீ.ஸ்பூன்
- எண்ணெய் -தேவையான அளவு
Notes
- ஒரு பானில் ராகி மாவுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- சட்டியை அடுப்பில் வைத்து கலவை கெட்டி ஆகும் வரை கட்டிகள் இல்லாமல் நன்றாக கிளறி கொண்டே இருக்கவும்.
- ஒரு ஜாரில் கிளறிய ராகி மற்றும் மோர் சேர்த்து நன்றாக ஒரு அடி அடிக்கவும்.
- பானில் எண்ணெயை சுட வைத்து அதில் கடுகு சேர்க்கவும்.
- கடுகு வெடித்ததும் அதன் பின் உளுந்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
- தயாரித்து வைத்த மோரினை அதில் ஊற்றி பரிமாறவும்.
Leave a Reply