Ragi Mor Drink for Babies:கோடைகாலத்தில் பொதுவாக உடலினை குளிர்ச்சியாக வைத்து கொள்ள வித விதமான குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகள் அருந்துவது வழக்கம். கோடைகாலத்தில் உடலினை குளிர்ச்சியாக வைத்து கொள்ள நம் முன்னோர்கள் கேப்பைக்கூழ் மற்றும் கம்மங்கூழ் அருந்துவது வழக்கம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆனால் நம் குழந்தைகளை சாப்பிட வைப்பதற்குள் பெரும்பாடாகிவிடும். ஆனால் இந்த சுவையான ராகி மோரினை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி குடிப்பர். இதை செய்வதும் மிக எளிது. எல்லாவற்றிற்கும் மேலாக வளரும் குழந்தைகளுக்கு தேவையான எண்ணற்ற ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது ராகி.
ராகி உண்பதால் ஏற்படும் நன்மைகள்:
- கால்சியம் சக்தி தான் உடலின் பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மைக்கு அவசியமானதாக இருக்கிறது. கேழ்வரகில் இந்த கால்சியம் சக்தி அதிகம் உள்ளது. வாரம் ஒரு முறை அல்லது இருமுறை கேழ்வரகு உணவுகளை சாப்பிட்டு வருவது, பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகரிக்கும்.
- புரதச்சத்து அதிகமுள்ளதால் உடல் உறுப்புகளை சீராக இயங்கச்செய்கிறது.
- நார்சத்து அதிகமுள்ளதால் குழந்தைகளுக்கு எளிதில் செரிமானம் ஆகக்கூடியது.
- கோடைகாலத்தில் உடல்உஷ்ணம் அதிகரிப்பதை தடுத்து உடலை குளிரச்செய்யும்.
கோடைக்கேற்ற ராகி மோர்
- ஆர்கானிக் ராகி மாவு -1/4 கப்
- மோர் -2 கப்
- கடுகு – 1/2 டீ.ஸ்பூன்
- உளுந்து -1/2 டீ .ஸ்பூன்
- கடலைப்பருப்பு -1/2 டீ .ஸ்பூன்
- எண்ணெய் -1 டீ.ஸ்பூன்
- உப்பு- சுவைக்கேற்ப
Ragi Mor Drink for Babies:
செய்முறை
1.ஒரு பவுலில் ராகி மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக கரைக்கவும்.
2.ஒரு பானில் ராகி பேஸ்ட் மற்றும் தண்ணீர் சேர்த்து கலவை கட்டியாகும் வரை சமைக்கவும்.கலவையினை ஆறவிடவும்.
இதையும் படிங்க: கோடை காலத்தில் குழந்தைகளுக்கு குளிர்ச்சி தரும் உணவுகள்
3.ராகி கலவையுடன் மோர் மற்றும் உப்பு சேர்த்து ஒன்றாக கலக்கவும்.
4.கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்க்கவும்.
5.உளுந்து மற்றும் கடலை பருப்பு சேர்த்து கடலைப்பருப்பு பொன்னிறமாகும்வரை வறுக்கவும்.
6.அதனுடன் ராகி மோர் கலவை சேர்த்து நன்றாக கலக்கவும்.
`
இதையும் படிங்க: குழந்தைகளுக்கான மலச்சிக்கலை போக்கும் ஹோம் மேட் ஜூஸ்
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply