Strawberry Lassi in Tamil:குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பிளேவர்களில் முதன்மையானது ஸ்ட்ராவ்பெரி பிளேவர். அதற்கு முதல் காரணம் குழந்தைகளை கவரும் பிங்க் கலர். இரண்டாவது அதன் மணம் மற்றும் சுவை. ஸ்ட்ராவ்பெர்ரி பிளேவர் என்றாலே குழந்தைகள் கேட்டு நச்சரிப்பது ஐஸ்கிரீம் தான்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆனால், அடிக்கடி ஐஸ்கிரீம்கள் கொடுப்பது உடல் நலத்திற்கு கேடல்லவா? அதே சமயம் ஸ்ட்ராவ்பெர்ரி பிளேவரில் ஹெல்த்தியான டேஸ்டியான லஸ்ஸி செய்து கொடுத்தால் குழந்தைகள் வேண்டாமென்றா சொல்வார்கள். நமக்கும் திருப்தியாக இருக்குமல்லவா. இதோ உங்களுக்கான ஸ்ட்ராவ்பெரி லஸ்ஸி.

ஸ்ட்ராவ்பெர்ரி லஸ்ஸி
- ஸ்ட்ராவ்பெரிஸ் – 2 கப்
- தயிர் – 1கப்
- நாட்டு சர்க்கரை அல்லது தேன்- 1-2 டே.ஸ்பூன்.
இதையும் படிங்க: கோடை காலத்தில் குழந்தைகளுக்கு குளிர்ச்சி தரும் உணவுகள்.
Strawberry Lassi in Tamil:
செய்முறை
1.மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்சி ஜாரில் எடுத்து கொள்ளவும்.
2.கட்டிகள் இல்லாமல் 3-4 முறை நன்கு அரைக்கவும்.
3.நமக்கு தேவையான ஸ்ட்ராவ்பெர்ரி லஸ்ஸி ரெடி.
ஸ்ட்ராவ்பெரி பழத்தின் நன்மைகள்:
- ஸ்ட்ராவ்பெரி பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் என்று சொல்லப்படும் செல் அழிவை தடுக்கும் தன்மை உள்ளது.
- ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி, தையமின், ஃபோலிக் ஆசிட்,வைட்டமின் ஏ, வைட்டமின் கே போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
- இவை தவிர காப்பர், மாங்கனீசு, அயோடின், பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.
இதனுடன் தயிரும் சேரும் பொழுது கோடைகாலத்திற்கு குளிர்ச்சியளிக்கக்கூடியது.இதனை குழந்தைகளுக்கு எட்டாவது மாதத்திலிருந்து கொடுக்கலாம்.ஆனால், சர்க்கரை மற்றும் தேன் சேர்க்கக்கூடாது.
இதையும் படிங்க: மல்டி மில்லட் பன்னீர் பரோட்டா
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply