Tharpoosani smoothie
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
தர்பூசணி பழம் வெயில் காலத்தில் எளிதில் கிடைக்கும் ஒன்று.இந்த கோடை காலத்திற்கு இதமாக உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. ஆனால் குழந்தைகள் தர்பூசணியை அப்படியே சாப்பிட விரும்ப மாட்டார்கள்.நீங்கள் தர்பூசணி ஸ்மூத்தியை செய்து பாருங்களேன்.கண்டிப்பாக விரும்பி குடிப்பார்கள்.
தர்பூசணி பழத்துடன் பால் மற்றும் தயிர் கலந்த இதனது ருசி சுவைப்பதற்கு நன்றாக இருக்கும்.இதை 8 மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பால் கலக்காமல் கொடுக்கலாம்.ஒரு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு பால் மற்றும் தயிர் கலந்து கொடுக்கலாம்.
Tharpoosani smoothie
தேவையானவை
- தர்பூசணி பழம் (கோட்டை நீக்கி சிறிதாக வெட்டியது)- 3 கப்
- பால் – 1 கப்
- தயிர் – 1/2 கப்
- தேன்- 3 டே.ஸ்பூன்
செய்முறை
1.தர்பூசணியை கொட்டை நீக்கி சிறிது சிறிதாக வெட்டவும்.
2.உங்களுக்கு குளுமையான ஸ்மூத்தி வேண்டுமானால் தர்பூசணி பழத்தை 2 மணி நேரத்திற்கு முன்னால் பிரிட்ஜில் வைக்கவும்.
3.ஜூஸ் ஜாரில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் சேர்த்து அரைக்கவும்.
4.ஜில்லென்ற தர்பூசணி ஸ்மூத்தி ரெடி.
5.தேனிற்கு பதிலாக டேட்ஸ் சிரப்பையும் சேர்க்கலாம்.
இதே போல் குழந்தைகளுக்கு தேவையான ஈஸியான ரெஸிபிகளை நீங்கள் இந்த லிட்டில் மொப்பெட் பிளாகில் நீங்கள் காணலாம். மேலும் குழந்தைகளுக்கு தேவையான, அனைத்து பயனுள்ள தகவல்களையும் இந்த பிளாகில் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
இதையும் படிங்க:
கோடை காலத்தில் குழந்தைகளை பராமரிக்க எளிய வழிகள்
மற்ற லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.
Leave a Reply