குழந்தைகளுக்கான மாங்காய் பருப்பு குழம்பு
குழந்தைகளுக்கு ஆறு மாத காலத்திற்கு பின்பு நீங்க சாத வகைகளை கொடுக்கஆரம்பித்தபின்பு இந்த குழம்பை சாதத்துடன் பிசைந்து கொடுக்கஆரம்பிக்கலாம்.
Keyword 6 months baby food, kulambu for babes in tamil, mango kulambu for babies
Prep Time 10 minutes minutes Cook Time 10 minutes minutes
- 1 மாங்காய்
- 1/2 கப் துவரம்பருப்பு
- 1/2 டீ.ஸ்பூன் மஞ்சள்தூள்
- உப்பு
- 1 டே. ஸ்பூன் நெய்-
- 1/4 டீ.ஸ்பூன் கடுகு-
- 1 வத்தல்
- சிறிதளவு கறிவேப்பிலை
செய்முறை
- துவரம் பருப்பை நன்றாகக் கழுவி,ஊற வைக்கவும்.
- மாங்காயை கழுவி,தோலினை நீக்கி,
- துருவவும். குக்கரில் துருவிய மாங்காய்,துவரம்பருப்பு, உப்பு சேர்க்கவும்.
- சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.
- 4-5 விசில் வருமளவிற்கு குக்கரில் வைக்கவும்.
- நன்றாக மசிக்கவும்.
தாளிக்கும் முறை
- கடாயில் நெய் ஊற்றி சூடாக்கவும்.
- கடுகினை போட்டு வெடிக்க விடவும்.
- வத்தல் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
- இதனை தயாரித்து பருப்பில் ஊற்றவும்.
- இதனை சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சேர்த்து உண்ணலாம்.