Mango paruppu kulambu for Babies:ஆறு மாத காலத்திற்கு பின் திட உணவு உட்கொள்ள ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கென பல்வேறு விதமான பிரத்தியேக உணவு வகைகளை நாம் இதுவரை பார்த்துவிட்டோம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அவற்றில் காய்கறிக்கூழ்,பழக்கூழ்,சாத வகைகள்,இட்லி வகைகள் ஏன் தோசை வகைகளைக் கூட நாம் பார்த்துவிட்டோம்.ஆனால் குழந்தைகளுக்கான குழம்பு வகைகள் நம்மிடம் குறைவுதான்.நம் வீட்டிலும் கூட பருப்பு,சாம்பார்,ரசம் ஆகியவற்றை தவிர குழந்தைகளுக்கு வேறு எதுவும் நாம் கொடுக்க மாட்டோம்.
இனி மாம்பழ சீசனில் இந்த மாங்காய் பருப்பு குழம்பையும் உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள். இதனை கொடுத்தால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமாக மட்டுமல்லாமல்,சுவையானதாகவும் இருக்கும்.
குழந்தைகளுக்கு ஆறு மாத காலத்திற்கு பின்பு நீங்க சாத வகைகளை கொடுக்கஆரம்பித்த பின்பு இந்த குழம்பை சாதத்துடன் பிசைந்து கொடுக்க ஆரம்பிக்கலாம். மாம்பழத்தில் இயற்கையாகவே ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைய உள்ளதால் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது. மேலும் உணவினை நன்கு செரிமானம் அடைய செய்வதோடு அல்லாமல் கண்கள்,கேசம் மற்றும் சருமத்திற்கும் நன்மை பயப்பது.
இந்த குழம்பினை சாதத்துடன் பிசைந்து குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு தேவையான இரும்புச்சத்து,கால்சியம் புரோட்டீன் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்துக்கள் கிடைக்கும்.

Mango paruppu kulambu for Babies
- மாங்காய்-1
- துவரம் பருப்பு-1/2 கப்
- மஞ்சள்தூள்-1/2 டீ-ஸ்பூன்
- உப்பு
தாளிக்க தேவையானவை
- நெய் – 1 டே. ஸ்பூன்
- கடுகு -1/4 டீஸ்பூன்
- வத்தல் -1
- கறிவேப்பிலை- சிறிதளவு
Mango paruppu kulambu for Babies
செய்முறை
1.துவரம் பருப்பை நன்றாகக் கழுவி,ஊற வைக்கவும்.
2.மாங்காயை கழுவி,தோலினை நீக்கி துருவவும்.
3.குக்கரில் துருவிய மாங்காய்,துவரம்பருப்பு, உப்பு சேர்க்கவும்.
4.சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.
5. 4-5 விசில் வருமளவிற்கு குக்கரில் வைக்கவும்.
6.நன்றாக மசிக்கவும்.
தாளிக்கும் முறை
1.கடாயில் நெய் ஊற்றி சூடாக்கவும்.
2.கடுகினை போட்டு வெடிக்க விடவும்.
3.வத்தல் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
4.இதனை தயாரித்து பருப்பில் ஊற்றவும்.
5.இதனை சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சேர்த்து உண்ணலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
குழந்தைகளுக்கான மாங்காய் பருப்பு குழம்பு
Ingredients
- 1 மாங்காய்
- 1/2 கப் துவரம்பருப்பு
- 1/2 டீ.ஸ்பூன் மஞ்சள்தூள்
- உப்பு
- 1 டே. ஸ்பூன் ·நெய்- 1 · -1· -சிறிதளவு
- 1/4 டீ.ஸ்பூன் கடுகு-
- 1 வத்தல்
- சிறிதளவு கறிவேப்பிலை
Notes
- துவரம் பருப்பை நன்றாகக் கழுவி,ஊற வைக்கவும்.
- மாங்காயை கழுவி,தோலினை நீக்கி,
- துருவவும். குக்கரில் துருவிய மாங்காய்,துவரம்பருப்பு, உப்பு சேர்க்கவும்.
- சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.
- 4-5 விசில் வருமளவிற்கு குக்கரில் வைக்கவும்.
- நன்றாக மசிக்கவும்.
- கடாயில் நெய் ஊற்றி சூடாக்கவும்.
- கடுகினை போட்டு வெடிக்க விடவும்.
- வத்தல் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
- இதனை தயாரித்து பருப்பில் ஊற்றவும்.
- இதனை சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சேர்த்து உண்ணலாம்.
Leave a Reply