Go Back

சக்கரை வள்ளி கிழங்கு பிரவுனி கேக்

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சக்கரை வள்ளி கிழங்கு பிரௌனி.

Ingredients

  • வேகவைத்து மசித்த சக்கரவள்ளி கிழங்கு- 1 கப்
  • கோதுமை மாவு- அரை கப்
  • கோகோ பவுடர்- 2 டேபிள் ஸ்பூன்
  • நாட்டு சக்கரை - கால் கப்
  • வெண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்
  • பால்- கால் கப்
  • நறுக்கிய நட்ஸ்- 1 டேபிள் ஸ்பூன்

Notes

செய்முறை
  1. சக்கரைவள்ளி கிழங்கினை வேகவைத்து அதன் தோலை நீக்கி நன்கு மசித்து கொள்ளவும்.
  2. ஒரு பவுலில் மசித்த சக்கரவல்லி கிழங்கு, நாட்டு சக்கரை மற்றும் பட்டர் சேர்க்கவும்.
  3. அதனுடன் கோதுமை மாவ, கோகோ பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.
  4. சிறிதளவு பால் சேர்த்து மாவு பதத்திற்கு அதனை கலக்கவும்.
  5. கேக்கினை பேக் செய்யும் ட்ரேயில் இந்த மாவினை பரப்பி சமமாக்கவும்.
  6. 20 முதல் 25 நிமிடங்களுக்கு 180 டிகிரி செல்சியஸ் அளவிற்கு பேக் செய்யவும்.
  7. நறுக்குவதற்கு முன்னால் ஆறவிடவும்.