Go Back

சத்தான பாசிப்பயிறு ட்ரிங்க்

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு கொடுப்பது என்பது அம்மாக்களுக்கு ஒரு பெரிய விஷயம் என்றால் அதைவிட சவாலான விஷயம் குழந்தைகளுக்கு குடிப்பதற்கு சத்தான ட்ரிங்க் என்ன கொடுப்பது என்பதுதான்.

Ingredients

  • பாசிப்பயறு- கால் கப்
  • துருவிய தேங்காய்- கால் கப்
  • பாதாம் அல்லது முந்திரி- 5 - 6
  • ஏலக்காய்- 2
  • உப்பு- தேவையான அளவு
  • நாட்டு சக்கரை - 2-3 டே.ஸ்பூன்
  • சப்ஜா விதைகள் அல்லது சியா விதைகள்- 1 டீ.ஸ்பூன்
  • தண்ணீர்- 2-3 கப்

Notes

செய்முறை
பாசிப்பருப்பை மிதமான தீயில் வைத்து நல்ல நறுமணம் வரும் வரை வறுக்கவும். பின்பு அதனை ஆறவிடவும்.
வறுத்த பாசிப்பயறு துருவிய தேங்காய் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸி ஜாரில் நன்றாக அரைக்கவும். .
அரைத்து வைத்த விழுதை காட்டன் துணியில் வடிகட்டி சக்கையை மட்டும் தனியாக பிழிந்து எடுக்கவும்.
வடிகட்டி வைத்துள்ள பாலில் நாட்டு சக்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்.
சப்ஜா அல்லது சியா விதைகளை தண்ணீரில் 15 நிமிடங்கள் வரை ஊற வைத்து பின்பு இந்த பாலுடன் சேர்க்கவும்.
பிரிட்ஜில் வைத்து பரிமாறவும்.