Pachai Payaru Drink : குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு கொடுப்பது என்பது அம்மாக்களுக்கு ஒரு பெரிய விஷயம் என்றால் அதைவிட சவாலான விஷயம் குழந்தைகளுக்கு குடிப்பதற்கு சத்தான ட்ரிங்க் என்ன கொடுப்பது என்பதுதான்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
வழக்கமாக குழந்தைகளுக்கு காலை, மாலையும் பால் கொடுப்போம். வெயில் காலம் என்றால் குழந்தைகளுக்கு பிரஷ்ஷான ப்ரூட்ஸ் ஜூஸ் கொடுப்போம்.
இதைத் தாண்டியும் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு வித்தியாசமாக என்ன ட்ரின்க் உள்ளது என்று நீங்கள் யோசித்தால் அதற்கான சரியான தீர்வு தான் இந்த பாசிப்பயறு ட்ரின்க்.
பொதுவாக பாசிப்பயிறை குழந்தைகளுக்கு சுண்டலாக வேகவைத்து தருவது வழக்கம். சில வீடுகளில் கிரேவியாக வைத்து சாப்பிடுவதுண்டு.
பாசிப்பருப்பை வைத்து பலவிதமான ஸ்வீட் ரெசிபிகள் மற்றும் பாயாசம் ரெசிபிகள் கூட நாம் கேள்விப்பட்டிருப்போம் ஆனால் இந்த பாசிப்பயிறு ட்ரிங்க் என்பது நாம் கேள்வி படாத ஒன்றாகும்.
Pachai Payaru Drink
ஆனால் இதில் பாசிப்பயறுடன் தேங்காய் மற்றும் நட்ஸ்களின் நன்மைகள் நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு காலை நேர டிபன் சாப்பிட்ட சத்துக்களை இந்த ஒரே ட்ரிங் கொடுத்து விடும். இந்த ரெசிபி பார்ப்பதற்கு முன்னால் இதில் நிறைந்துள்ள நன்மைகளை பார்க்கலாம்:

- பாசிப்பயறில் புரோட்டின் சத்து நிறைந்துள்ளதால் அசைவ உணவில் நிறைந்துள்ள புரதத்திற்கு இணையான புரோட்டினை இது கொண்டுள்ளது. இது தசைகளுக்கு வலிமை அளிக்க கூடியது.
- மேலும் குழந்தைகளுக்கு எளிதில் செரிமானமாக கூடிய பருப்பு இதுவாகும்.
- இதில் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளதால் குழந்தைகள் சுறுசுறுப்பாக விளையாடுவதற்கு தேவையான சக்தியை இது அளிக்கின்றது.
- மேலும் குழந்தைகளுக்கு நல்ல ரத்த ஓட்டத்தை கொடுத்து சோர்வை போக்குகின்றது.
- இதில் நிறைந்துள்ள சத்துக்கள் உடலை நன்கு பராமரித்து குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் தடுக்கக்கூடியது.
- மேலும் இதில் ஆண்டி ஆக்சிடென்ட்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்க வல்லது.
Pachai Payaru Drink
- பாசிப்பயறு- கால் கப்
- துருவிய தேங்காய்- கால் கப்
- பாதாம் அல்லது முந்திரி- 5 – 6
- ஏலக்காய்- 2
- உப்பு- தேவையான அளவு
- நாட்டு சக்கரை – 2-3 டே.ஸ்பூன்
- சப்ஜா விதைகள் அல்லது சியா விதைகள்- 1 டீ.ஸ்பூன்
- தண்ணீர்- 2-3 கப்
Pachai Payaru Drink
செய்முறை
- பாசிப்பருப்பை மிதமான தீயில் வைத்து நல்ல நறுமணம் வரும் வரை வறுக்கவும். பின்பு அதனை ஆறவிடவும்.
- வறுத்த பாசிப்பயறு துருவிய தேங்காய் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸி ஜாரில் நன்றாக அரைக்கவும். .
- அரைத்து வைத்த விழுதை காட்டன் துணியில் வடிகட்டி சக்கையை மட்டும் தனியாக பிழிந்து எடுக்கவும்.
- வடிகட்டி வைத்துள்ள பாலில் நாட்டு சக்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்.
- சப்ஜா அல்லது சியா விதைகளை தண்ணீரில் 15 நிமிடங்கள் வரை ஊற வைத்து பின்பு இந்த பாலுடன் சேர்க்கவும். பிரிட்ஜில் வைத்து பரிமாறவும்.
இதில் நார்ச்சத்துக்கள், புரோட்டீன் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
பச்சைப் பயறு, தேங்காய், நட்ஸ் மற்றும் ஏலக்காய் போன்றவை குழந்தைகளுக்கு தேவையான புரோட்டின் நார் சத்துக்கள் மற்றும் வைட்டமின்களை கொடுக்கின்றன.
மேலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள சப்ஜா விதைகள் குழந்தைகளின் உடலுக்கு குளிர்ச்சியை தருகின்றது.
எனவே குழந்தைகளுக்கு கடைகளில் விற்கும் விதவிதமான கூல்ட்ரிங்க்கள் வாங்கி கொடுப்பதை காட்டிலும்
இதுபோன்று சத்தான ட்ரிங்குகளை செய்து கொடுத்தால் குழந்தைகள் வீட்டிலேயே சாப்பிடுவர்.
Pachai Payaru Drink

உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
சத்தான பாசிப்பயிறு ட்ரிங்க்
Ingredients
- பாசிப்பயறு- கால் கப்
- துருவிய தேங்காய்- கால் கப்
- பாதாம் அல்லது முந்திரி- 5 - 6
- ஏலக்காய்- 2
- உப்பு- தேவையான அளவு
- நாட்டு சக்கரை - 2-3 டே.ஸ்பூன்
- சப்ஜா விதைகள் அல்லது சியா விதைகள்- 1 டீ.ஸ்பூன்
- தண்ணீர்- 2-3 கப்
Notes
பாசிப்பருப்பை மிதமான தீயில் வைத்து நல்ல நறுமணம் வரும் வரை வறுக்கவும். பின்பு அதனை ஆறவிடவும். வறுத்த பாசிப்பயறு துருவிய தேங்காய் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸி ஜாரில் நன்றாக அரைக்கவும். . அரைத்து வைத்த விழுதை காட்டன் துணியில் வடிகட்டி சக்கையை மட்டும் தனியாக பிழிந்து எடுக்கவும். வடிகட்டி வைத்துள்ள பாலில் நாட்டு சக்கரை சேர்த்து நன்றாக கலக்கவும். சப்ஜா அல்லது சியா விதைகளை தண்ணீரில் 15 நிமிடங்கள் வரை ஊற வைத்து பின்பு இந்த பாலுடன் சேர்க்கவும். பிரிட்ஜில் வைத்து பரிமாறவும்.











Leave a Reply