Go Back

சுவையான மாம்பழ கொழுக்கட்டை

இன்று நாம் பார்க்கவிருக்கும் ரெசிபி முற்றிலும் வித்தியாசமான மாம்பழக் கொழுக்கட்டை ரெசிபி.

Ingredients

  • அரிசி மாவு- 1 கப்
  • அரைத்த மாம்பழ கூழ் - 1 கப்
  • நெய்- 1 டீ.ஸ்பூன்
  • பூரணமாக வைப்பதற்கு
  • துருவிய தேங்காய் -1 கப்
  • நாட்டுச்சக்கரை- 2-3 டேபிள் ஸ்பூன் ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு
  • அல்லது டேட்ஸ் பவுடர்
  • நெய்- 1 டீ.ஸ்பூன்
  • ஏலக்காய் தூள் - கால் டீ.ஸ்பூன்

Notes

கடாயை சூடாக்கி அதில் அரைத்து விழுதாக்கி வைத்திருந்த மாம்பழக் கூழ் ஊற்றி மிதமான தீயில் இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு சூடாக்கவும்.
அதனுடன் நெய் மற்றும் அரிசி மாவு சேர்த்து தொடர்ச்சியாக கொழுக்கட்டை மாவு பதத்திற்கு வரும் வரை கிளறி கொண்டே இருக்கவும்.
மாவினை 10-15 நிமிடங்களுக்கு ஊற விடவும்.
மற்றொருபுறம் பானில் நெய் ஊற்றி சூடாக்கி துருவி வைத்த தேங்காய் சேர்த்து வதக்கவும்.
மேலும் அதனுடன் ஏலக்காய் தூள் மற்றும் இனிப்பு சுவைக்கு தேவையான டேட்ஸ் பவுடர் அல்லது நாட்டுச்சக்கரை சேர்த்து நன்கு கிளறவும்.
உள்ளங்கையில் சிறிதளவு நெய் தடவி கொழுக்கட்டை மாவு போன்ற உருட்டவும்.
அதனை நடுவில் குழியாக்கி தயாரித்து வைத்திருந்த பூரணத்தை உள்ளே வைத்து மூடவும்.
இட்லி பாத்திரத்தில் இதனை வேக வைத்து எடுக்கவும்.
10 முதல் 15 நிமிடங்களில் சுவையான கொழுக்கட்டை ரெடி.