Mango Kozhukattai : வீட்டில் நாம் பாரம்பரியமாக குழந்தைகளுக்கு செய்து தரும் ரெசிப்பிகளில் கொழுக்கட்டை மற்றும் பிட்டு போன்றவை இன்றியமையாத இடம் பெறும். கொழுக்கட்டையை நாம் ஆவியில் வேகவைத்து தேங்காய் துருவல் சேர்த்து கொடுப்போம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அப்படி இல்லை என்றால் தேங்காய் மற்றும் நாட்டுச்சக்கரை போன்றவற்றை பூரணமாக உள்ளே வைத்து குழந்தைகளுக்கு அவித்துக் கொடுப்பது வழக்கம். ஆனால் இன்று நாம் பார்க்கவிருக்கும் ரெசிபி முற்றிலும் வித்தியாசமான மாம்பழக் கொழுக்கட்டை ரெசிபி.
Mango Kozhukattai
மாம்பழ சீசன் வரும் பொழுது குழந்தைகளுக்கு மாம்பழ மில்க் ஷேக், மாம்பழ ஜூஸ் போன்றவை செய்து கொடுக்கும் பொழுது மாம்பழ கொழுக்கட்டையும் செய்து கொடுக்கலாம். இதன் சுவையும் வித்தியாசமாக இருப்பதுடன் மாம்பழத்தின் ஆரோக்கியமும் குழந்தைகளுக்கு கிடைக்கும் என்பதால் நீங்களும் வீடுகளில் இந்த ரெசிபியை செய்து பாருங்கள்.
இதில் இயற்கையாகவே மாம்பழக் கூழ் சேர்த்திருப்பதால் நீங்கள் தனியாக சீனி மற்றும் சக்கரை போன்றவை சேர்க்க தேவையில்லை. பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு நீங்கள் வித்தியாசமாக ஏதாவது செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் தாராளமாக இந்த மாம்பழ கொழுக்கட்டையை செய்து கொடுக்கலாம்.
இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் மாம்பழத்தில் நிறைந்துள்ள நன்மைகளை பார்க்கலாம்:
Mango Kozhukattai

- மாம்பழத்தில் அதிகமான சுவை மட்டுமல்லாமல் அத்தனை சத்துக்களும் நிறைந்திருப்பதால் தான் அதனை பழங்களின் அரசன் என்று கூறுவது உண்டு.
- மாம்பழத்தில் வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் பார்வை தோல் போன்றவற்றுக்கு நன்மை அளித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது.
- வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் இதில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கி கிருமிகளுக்கு எதிராக போராட உதவுகின்றது.
- நார் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் இதில் நிறைந்து இருக்கும் கனிம பொருட்கள் மலச்சிக்கல் வராமல் தடுக்கக்கூடியது.
- மாம்பழத்தில் இயற்கையாகவே நிறைந்திருக்கும் இனிப்பு சத்துக்கள் மெதுவாக ஆற்றலை வெளியிடுவதால் இது குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு தேவையான சத்துக்களை அளிக்கிறது.
- மாம்பழத்தில் நிறைந்திருக்கும் போலேட் எனப்படும் சத்துக்கள் மூளை வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை வழங்குகின்றது.
- இதில் நிறைந்திருக்கும் வைட்டமின் ஏ சி மற்றும் இ போன்றவை ஆரோக்கியமான சருமத்திற்கும் மற்றும் தசை வளர்ச்சிக்கும் உதவுகின்றது.
- இதில் நிறைந்திருக்கும் பீட்டா கரோட்டின் செல்களுக்கு நன்மை அளிக்கக் கூடியது.
- மேலும் இதில் தண்ணீர் சத்தும் நிறைந்திருப்பதால் கோடைகாலத்தில் குழந்தைகள் நீர்ச்சத்துடன் இருக்க இதனை கொடுக்கலாம்.
Mango Kozhukattai
- அரிசி மாவு- 1 கப்
- அரைத்த மாம்பழ கூழ் – 1 கப்
- நெய்- 1 டீ.ஸ்பூன்
பூரணமாக வைப்பதற்கு
- துருவிய தேங்காய் -1 கப்
- நாட்டுச்சக்கரை- 2-3 டேபிள் ஸ்பூன் (ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு) அல்லது டேட்ஸ் பவுடர்
- ஏலக்காய் தூள் – கால் டீ.ஸ்பூன்
- நெய்- 1 டீ.ஸ்பூன்
Mango Kozhukattai
செய்முறை
- கடாயை சூடாக்கி அதில் அரைத்து விழுதாக்கி வைத்திருந்த மாம்பழக் கூழ் ஊற்றி மிதமான தீயில் இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு சூடாக்கவும்.
- அதனுடன் நெய் மற்றும் அரிசி மாவு சேர்த்து தொடர்ச்சியாக கொழுக்கட்டை மாவு பதத்திற்கு வரும் வரை கிளறி கொண்டே இருக்கவும்.
- மாவினை 10-15 நிமிடங்களுக்கு ஊற விடவும்.
- மற்றொருபுறம் பானில் நெய் ஊற்றி சூடாக்கி துருவி வைத்த தேங்காய் சேர்த்து வதக்கவும்.
- மேலும் அதனுடன் ஏலக்காய் தூள் மற்றும் இனிப்பு சுவைக்கு தேவையான டேட்ஸ் பவுடர் அல்லது நாட்டுச்சக்கரை சேர்த்து நன்கு கிளறவும்.
- உள்ளங்கையில் சிறிதளவு நெய் தடவி கொழுக்கட்டை மாவு போன்ற உருட்டவும். அதனை நடுவில் குழியாக்கி தயாரித்து வைத்திருந்த பூரணத்தை உள்ளே வைத்து மூடவும்.
- இட்லி பாத்திரத்தில் இதனை வேக வைத்து எடுக்கவும்.
- 10 முதல் 15 நிமிடங்களில் சுவையான கொழுக்கட்டை ரெடி.
எல்லா நாட்களிலும் இந்த ரெசிபியை செய்து தர முடியாது என்பதால் மாம்பழ சீசன் வரும் பொழுது கண்டிப்பாக குழந்தைகளுக்கு இந்த ரெசிபியை செய்து கொடுத்துப் பாருங்கள். வழக்கமான கொழுக்கட்டை சாப்பிட்டு பழகிய குழந்தைகளுக்கு இந்த கொழுக்கட்டை சற்று வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள பெரியோர்களும் மாலை நேரத்தில் சிற்றுண்டி சாப்பிட இந்த கொழுக்கட்டையை சாப்பிடலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Mango Kozhukattai

சுவையான மாம்பழ கொழுக்கட்டை
Ingredients
- அரிசி மாவு- 1 கப்
- அரைத்த மாம்பழ கூழ் - 1 கப்
- நெய்- 1 டீ.ஸ்பூன்
- பூரணமாக வைப்பதற்கு
- துருவிய தேங்காய் -1 கப்
- நாட்டுச்சக்கரை- 2-3 டேபிள் ஸ்பூன் ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு
- அல்லது டேட்ஸ் பவுடர்
- நெய்- 1 டீ.ஸ்பூன்
- ஏலக்காய் தூள் - கால் டீ.ஸ்பூன்
Notes
10 முதல் 15 நிமிடங்களில் சுவையான கொழுக்கட்டை ரெடி.











Leave a Reply