சோளம் சியா புட்டிங் ( புரோட்டின் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது)
சத்தான வெள்ளைச் சோளம், சியா விதைகள், தயிர் மற்றும் காய்கறிகள் சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கு காலை உணவாக கொடுப்பதற்கும் மிகவும் ஏற்ற ரெசிபியாகும்.
- வெள்ளைச் சோளம்- அரை கப்
- தயிர்- 1 கப்
- சியா விதைகள்- 2 டேபிள்ஸ்பூன்
- வெதுவெதுப்பான தண்ணீர்- 1 கப்
- துருவிய கேரட் -2 டேபிள் ஸ்பூன்
- பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய்- 2 டேபிள் ஸ்பூன்
- பொடியாக நறுக்கிய குடைமிளகாய் -1 டேபிள் ஸ்பூன்
- வறுத்த சீரகத்தூள்- கால் டீ.ஸ்பூன்
- மிளகுத்தூள்- கால் டீ.ஸ்பூன்
- நறுக்கிய கொத்தமல்லி இலைகள்- 1 டே.ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
செய்முறை
சோளத்தை நன்றாக கழுவி 8 முதல் 10 மணி நேரங்களுக்கு அல்லது ஒரு நாள் இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.
தண்ணீரை நன்றாக வடிகட்டி குக்கரில் நன்றாக மென்மையாக ஆகும் அளவிற்கு வேக வைக்கவும். பின்பு ஆறவிடவும்.
அதே நேரம் சியா விதைகளை 20 நிமிடங்களுக்கு ஜெல் போன்ற படத்திற்கு வருமாறு ஊற வைக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் வேக வைத்த சோளம், சியா விதைகள், தயிர், துருவிய கேரட், நறுக்கிய வெள்ளரிக்காய் குடைமிளகாய், சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
நன்றாக இவற்றை கிளறவும்.
20 முதல் 30 நிமிடங்களுக்கு கிரீம் பதத்திற்கு வரும் அளவிற்கு ஃப்ரீசரில் வைக்கவும்.
கொத்தமல்லி இலைகளை மேலே தூவி மற்றும் மாதுளை விதைகளை தூவி பரிமாறலாம்.