Cholam Chia Pudding: இதுவரை ஆரோக்கியமான விதவிதமான இனிப்பு வகை ரெசிபிகளை நாம் பார்த்து வந்தோம். ஆனால் இன்று நாம் பார்க்கவிருக்கும் ரெசிப்பியானது சற்றே வித்தியாசமான கார வகையைச் சேர்ந்ததாகும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
புட்டிங் என்று சொன்னாலே பொதுவாக இனிப்பு வகை தான் நமக்கு ஞாபகம் வரும் ஆனால் நாம் பார்க்கவிருக்கும் ரெசிப்பியானது சிறியவர்கள் மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள பெரியோர்களும் பருகக்கூடிய புரோட்டின் நார்ச்சத்து கால்சியம் மற்றும் பலவிதமான சத்துக்கள் நிறைந்த ரெசிபி ஆகும்.
இதனுடன் சத்தான வெள்ளைச் சோளம், சியா விதைகள், தயிர் மற்றும் காய்கறிகள் சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கு காலை உணவாக கொடுப்பதற்கும் மிகவும் ஏற்ற ரெசிபியாகும்.
பொதுவாக சிறுதானியத்தை குழந்தைகளை சாப்பிட வைப்பது சற்று கடினமான விஷயம் தான். ஆனால் இந்த ஆரோக்கியமான சோள புட்டிங் சற்று வித்தியாசமாக அனைவரும் ரசித்து சாப்பிடும் ரெசிபியாக இருக்கும்.
காலை உணவாக மட்டுமல்லாமல் இரவு நேரத்தில் மிகவும் எளிதான உணவு சாப்பிட விரும்பினால் இதனை சாப்பிடலாம். மேலும் பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் ஆகவும் செய்து கொடுக்கலாம்.
Cholam Chia Pudding
இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் இதில் நிறைந்துள்ள நன்மைகளை பார்க்கலாம்:

- சோளத்தில் இயற்கையாகவே நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு உணவு எளிதில் செரிமானமாக உதவி மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது.
- சோளத்தில் இயற்கையாகவே கார்போஹைட்ரேடுகள் நிறைந்துள்ளதால், குழந்தைகளுக்கு தேவையான ஆற்றலை மெதுமெதுவாக வெளியிட்டு நீண்ட நேரத்திற்கு தேவையான எனர்ஜியை கொடுக்கின்றது.
- சோளத்தில் புரோட்டின் நிறைந்துள்ளதால் இது தசைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகின்றது. பொதுவாக புரோட்டீனுக்கு நாம் முட்டை கொடுப்போம் அப்படி முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த சோளத்தை கொடுக்கலாம்.
- இதில் நிறைந்துள்ள இரும்பு சத்துக்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றது. மேலும் ஹீமோகுளோபின் அளவு குறையாமலும் பார்த்துக் கொள்கின்றது.
- சோளத்தில் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளதால் இவை எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- சோளத்தில் க்ளோரின் இல்லை என்பதால் க்ளோட்டின் ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கும் சோளத்தை நாம் தாராளமாக கொடுக்கலாம்.
- இது நிறைந்துள்ள வைட்டமின் பி குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவி புரிந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது.
Cholam Chia Pudding
- வெள்ளைச் சோளம்- அரை கப்
- தயிர்- 1 கப்
- சியா விதைகள்- 2 டேபிள்ஸ்பூன்
- வெதுவெதுப்பான தண்ணீர்- 1 கப்
- துருவிய கேரட் -2 டேபிள் ஸ்பூன்
- பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய்- 2 டேபிள் ஸ்பூன்
- பொடியாக நறுக்கிய குடைமிளகாய் -1 டேபிள் ஸ்பூன்
- வறுத்த சீரகத்தூள்- கால் டீ.ஸ்பூன்
- மிளகுத்தூள்- கால் டீ.ஸ்பூன்
- நறுக்கிய கொத்தமல்லி இலைகள்- 1 டே.ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
Cholam Chia Pudding
செய்முறை
- சோளத்தை நன்றாக கழுவி 8 முதல் 10 மணி நேரங்களுக்கு அல்லது ஒரு நாள் இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- தண்ணீரை நன்றாக வடிகட்டி குக்கரில் நன்றாக மென்மையாக ஆகும் அளவிற்கு வேக வைக்கவும். பின்பு ஆறவிடவும்.
- அதே நேரம் சியா விதைகளை 20 நிமிடங்களுக்கு ஜெல் போன்ற படத்திற்கு வருமாறு ஊற வைக்கவும்.
- ஒரு பெரிய பாத்திரத்தில் வேக வைத்த சோளம், சியா விதைகள், தயிர், துருவிய கேரட், நறுக்கிய வெள்ளரிக்காய் குடைமிளகாய், சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
- நன்றாக இவற்றை கிளறவும்.
- 20 முதல் 30 நிமிடங்களுக்கு கிரீம் பதத்திற்கு வரும் அளவிற்கு ஃப்ரீசரில் வைக்கவும்.
- கொத்தமல்லி இலைகளை மேலே தூவி மற்றும் மாதுளை விதைகளை தூவி பரிமாறலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Cholam Chia Pudding

Cholam Chia Pudding
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
எந்த வயதில் இருந்து குழந்தைகளுக்கு இந்த ரெசிபியை கொடுக்கலாம்?
சோளத்தை ஒரு எதிர்க்கும் மேலே உள்ள குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பிக்கலாம். ஆனால் சோளம் நன்றாக வெந்துள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
எவ்வளவு நேரத்திற்கு சோளத்தை ஊற வைக்கலாம்?
10 மணி நேரம் அல்லது ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்கலாம். இது நன்றாக வெந்து குழந்தைகளுக்கு செரிமானம் ஆவதற்கு உதவும்.
வேறு ஏதேனும் காய்கறிகள் சேர்க்கலாமா?
ஆம். நீங்கள் தேவைப்பட்டால் பீட்ரூட் ஸ்வீட் கான் போன்ற காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
சியா விதைகள் சேர்க்காமல் இதனை செய்யலாமா?
சியா விதைகள் சேர்க்காமல் செய்து கொள்ளலாம் செய்து கொள்ளலாம் போன்றவற்றை தருவதால் மிகவும் நல்லதாகும்.
சோளம் சியா புட்டிங் ( புரோட்டின் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது)
Ingredients
- வெள்ளைச் சோளம்- அரை கப்
- தயிர்- 1 கப்
- சியா விதைகள்- 2 டேபிள்ஸ்பூன்
- வெதுவெதுப்பான தண்ணீர்- 1 கப்
- துருவிய கேரட் -2 டேபிள் ஸ்பூன்
- பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய்- 2 டேபிள் ஸ்பூன்
- பொடியாக நறுக்கிய குடைமிளகாய் -1 டேபிள் ஸ்பூன்
- வறுத்த சீரகத்தூள்- கால் டீ.ஸ்பூன்
- மிளகுத்தூள்- கால் டீ.ஸ்பூன்
- நறுக்கிய கொத்தமல்லி இலைகள்- 1 டே.ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு











Leave a Reply