Go Back

ஜவ்வரிசி உருளைக்கிழங்கு பன்னீர் கட்லட்

ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகள் கொடுப்பது என்றால் எதைத்தான் கொடுப்பது? என்று யோசிக்கும் அம்மாக்களுக்கான ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் தான் இந்த ஜவ்வரிசி உருளைக்கிழங்கு பன்னீர் கட்லெட்.

Ingredients

  • தேவையானவை
  • ஜவ்வரிசி- அரை கப்
  • வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு- 2
  • பன்னீர்- கால் கப்
  • சீரகம்- அரை டீஸ்பூன்
  • மிளகுத்தூள்- கால் டீஸ்பூன்
  • உப்பு- தேவையான அளவு
  • நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
  • நெய்- 2 டீஸ்பூன்

Notes

செய்முறை
  1. ஜவ்வரிசியினை 8 மணி நேரத்திற்கு தண்ணீரில் ஊற வைக்கவும்.
    பன்னீரை துருவிக் கொள்ளவும்.
  2. ஒரு பவுலில் ஊற வைத்த ஜவ்வரிசி, வேகவைத்து மசித்த
  3. உருளைக்கிழங்கு மற்றும் துருவிய பன்னீர் ஒன்றாக சேர்க்கவும்.
  4. மசாலா பொருட்களை சேர்த்து நன்கு மசித்து கொள்ளவும்.
  5. தேவையான வடிவத்திற்கு உருட்டிக் கொள்ளவும்.
  6. கடாயில் நெய் ஊற்றி கட்டிலட்டினை பொறிக்க ஆரம்பிக்கவும்.
  7. பொன்னிறமானதும் அடுத்த பக்கம் திருப்பி போடவும்.
  8. தக்காளி சாஸ் உடன் குழந்தைகளுக்கு பரிமாறலாம்.