Go Back

டிரை ஃப்ரூட்ஸ் பர்பி

சில குழந்தைகள் டிரை ஃப்ரூட்ஸ் அப்படியே சாப்பிட மாட்டார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கான ரெசிபி தான் இந்த டிரை ஃப்ரூட்ஸ் பர்பி.

Ingredients

  • கொட்டை நீக்கிய பேரிச்சை- ஒரு கப்
  • பாதாம்- கால் கப்
  • முந்திரி- கால் கப்
  • வால்நட் -2 டேபிள் ஸ்பூன்
  • ஏலக்காய் தூள்- 1 சிட்டிகை
  • நெய் -1 டீ.ஸ்பூன்

Notes

பாதாம், முந்திரி மற்றும் வால்நட் போன்றவற்றை இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு மிதமான தீயில் வறுக்கவும்.
நன்கு ஆறவிடவும்.
மிக்ஸி ஜாரில் போட்டு ஒன்று இரண்டாக அரைக்கவும். ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
தேவைப்பட்டால் சிறிதளவு நெய் சேர்த்து நன்கு பிசைந்து தட்டில் பரப்பி
தேவையான வடிவத்திற்கு நறுக்கிக் கொள்ளவும்.