பேரிச்சை புரோட்டீன் பர்பி
சர்க்கரை, மைதா போன்றவை சேர்க்காமல் ஸ்வீட் செய்வது எப்படி என்று தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.
- கடலை பருப்பு- 1 கப்
- பேரிச்சை-10
- நெய்- 2 டீ.ஸ்பூன்
- பால்- 1-2 டே.ஸ்பூன்
செய்முறை
கடலைப்பருப்பை மிதமான தீயில் வைத்து இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு நன்றாக வறுத்து பின்பு ஆற வைக்கவும்.
இதனை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைக்கவும்.
கொட்டை நீக்கிய பேரிச்சம் பழத்தை இதனுடன் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
அதனுடன் நெய் மற்றும் சிறிதளவு பால் சேர்த்து மாவு பதத்திற்கு வரும் அளவிற்கு அரைக்கவும்.
இந்த கலவையை ஒரு ட்ரெயில் போட்டு நன்றாக பரப்பவும்.
கரண்டியை வைத்து நன்றாக அழுத்தி மேலே நட்ஸ் தூவவும்.
உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் நறுக்கி குழந்தைகளுக்கு கொடுக்கவும்