Dates Protein Barbi: குழந்தைகளுக்கு பிடித்தவாறு ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் செய்து கொடுப்பது என்பது உண்மையாகவே அம்மாவிற்கு சவாலான விஷயம் தான். அதிலும் சர்க்கரை, மைதா போன்றவை சேர்க்காமல் ஸ்வீட் செய்வது எப்படி என்று தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளுக்கு இரும்பு சத்தினை அள்ளித் தரக்கூடிய ஒரு அற்புதமான பேரிச்சம்பழம் பர்பி ரெசிபியை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். பேரிச்சம்பழத்தின் நன்மைகள் மட்டுமல்லாமல் புரோட்டினும் நிறைந்துள்ள ரெசிபியை எப்படி செய்யலாம் என்பதை நாம் பார்க்கலாம்.
Dates Protein Barbi:
இதை பார்ப்பதற்கு முன்னால் பேரிச்சம் பழத்தில் நிறைந்துள்ள நன்மைகளை பார்க்கலாம்:

- பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இது பயன்படுகின்றது.
- பேரிச்சம் பழத்தில் இயற்கையாகவே நிறைந்துள்ள இனிப்புகள் குழந்தைகளுக்கு தேவையான எனர்ஜியை கொடுக்கின்றன.
- பேரிச்சம் பழத்தில் நார் சத்துக்கள் நிறைந்துள்ளதால் மலச்சிக்கல் வராமல் தடுக்கக்கூடியது.
- இதில் சேர்க்கப்பட்டுள்ள நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவை குழந்தைகளுக்கு தேவையான புரோட்டினை தருகின்றன.
- மேலும் இதில் நிறைந்துள்ள வைட்டமின்கள்,மினரல்கள், ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் போன்றவை ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
Dates Protein Barbi
- கடலை பருப்பு- 1 கப்
- பேரிச்சை-10
- நெய்- 2 டீ.ஸ்பூன்
- பால்- 1-2 டே.ஸ்பூன்
- நட்ஸ்- பொடியாக நறுக்கியது
Dates Protein Barbi
செய்முறை
- கடலைப்பருப்பை மிதமான தீயில் வைத்து இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு நன்றாக வறுத்து பின்பு ஆற வைக்கவும்.
- இதனை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைக்கவும்.
- கொட்டை நீக்கிய பேரிச்சம் பழத்தை இதனுடன் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- அதனுடன் நெய் மற்றும் சிறிதளவு பால் சேர்த்து மாவு பதத்திற்கு வரும் அளவிற்கு அரைக்கவும்.
- இந்த கலவையை ஒரு ட்ரெயில் போட்டு நன்றாக பரப்பவும்.
- கரண்டியை வைத்து நன்றாக அழுத்தி மேலே நட்ஸ் தூவவும்.
- உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் நறுக்கி குழந்தைகளுக்கு கொடுக்கவும்.
Dates Protein Barbi:

பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ற ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ஆகவும் மேலும் குழந்தைகளுக்கு பள்ளிகளுக்கு கொடுத்து அனுப்புவதற்கு ஏற்ற ஸ்னாக்ஸ் ஆகவும் இது இருக்கும். இதில் சீனி சேர்க்கவில்லை மேலும் சமைக்கவும் தேவையில்லை என்பதால் எளிதில் சில நிமிடங்களில் செய்துவிடலாம்.
குழந்தைகளின் விருப்பம் மற்றும் வயதிற்கு ஏற்றவாறு என்னென்ன டிரை ஃப்ரூட்ஸ் சேர்க்க வேண்டும் என்பதை நாம் முடிவு செய்து கொள்ளலாம். மேலும் மிகவும் சிறிய குழந்தைகளுக்கு செய்து கொடுக்கும் பொழுது உருண்டையாக உருட்டி லட்டு போன்று செய்து கொடுக்கலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
பேரிச்சை புரோட்டீன் பர்பி
Ingredients
- கடலை பருப்பு- 1 கப்
- பேரிச்சை-10
- நெய்- 2 டீ.ஸ்பூன்
- பால்- 1-2 டே.ஸ்பூன்











Leave a Reply