Go Back

மக்கானா ரசமலாய்

குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோருக்கும் பிடிக்கும் ரசமலாய் ரெசிபி.

Ingredients

  • மக்கானா- அரை கப்
  • முந்திரி- 2 டே.ஸ்பூன்
  • தர்பூசணி விதைகள்-1டே.ஸ்பூன்
  • பிஸ்தா- 2 டே.ஸ்பூன்
  • ஏலக்காய்- அரை டீ.ஸ்பூன்
  • குங்குமப்பூ -1சிட்டிகை
  • பால் அல்லது தண்ணீர்- 1/2 கப்
  • நாட்டு சக்கரை- 2 டே. ஸ்பூன்
  • வறுத்த பாதாம்- 1 டே.ஸ்பூன்
  • உலர்ந்த ரோஜா இதழ்கள்- மேலே தூவ

Notes

கால் கப் மக்கானா விதைகள், முந்திரி, தர்பூசணி விதைகள்,பிஸ்தா,ஏலக்காய் தூள் போன்றவற்றை இரண்டு மணி நேரத்திற்கு தண்ணீரில் ஊற வைக்கவும். குங்குமப்பூவை பால் அல்லது தண்ணீரில் ஊற வைக்கலாம்.
இவை எல்லாவற்றையும் மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக அரைக்கவும்.
மீதியுள்ள கால் கப் மக்கானாவை மிதமான தீயில் வைத்து மொறு மொறுப்பாக மாறும்வரை வறுக்கவும்.
ஏற்கனவே தயாரித்து வைத்த ரசமலாய் மிக்சரில் இந்த மக்கானாவினை போட்டு நன்கு கலக்கவும்.
இதனுடன் வருத்து மற்றும் பொடியாக சீவிய பாதாம் மற்றும் பிஸ்தா சேர்க்கவும்.
1 முதல் 2 மணி நேரத்திற்கு பிரிட்ஜில் வைக்கவும். சுவையான மக்கானா ரசமலாய் ரெடி.
உலர்ந்த ரோஜா இதழ்களை மேலே தூவி பரிமாறலாம்.