Makhana Rasamalai : மக்கானா மிகவும் புரோட்டின் சத்து மிகுந்தது என்பதால் இதுவரை மக்கானாவை வைத்து மக்கானாகீர், மக்கானா ரோஸ்ட் என்று நாம் பலவகையான ரெசிபிகளை இதுவரை பார்த்து விட்டோம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆனால் இன்று நாம் மக்கானாவை வைத்து செய்யக்கூடிய ஒரு வித்தியாசமான ஸ்வீட் ரெசிபி தான் பார்க்கப் போகின்றோம். அதுவும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோருக்கும் பிடிக்கும் ரசமலாய் ரெசிபி.
ஆம். நாம் மக்காவை வைத்து ரசமலாய் போன்ற டேஸ்ட்டில் மக்கானா ரசமலாய் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
இதில் சீனி, செயற்கையான நிறங்கள், எந்த விதமான பிரசர்வேட்டிவ்ஸ் போன்றவை சேர்க்கப்படாததால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஸ்வீட்டை வீட்டில் செய்து கொடுத்த திருப்தி ஏற்படும்.
இந்த ரெசிபி கடைகளில் விற்கும் ரசமலாய் போன்ற டேஸ்டை தருவதோடு மட்டுமல்லாமல் குழந்தைகள் ஜீரணிப்பதற்கு எளிதாகவும் இருக்கும்.
வாயில் வைத்தாலே கரையும் அளவிற்கு கிரீம் பதத்திற்கு இருப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதன் சுவையை என்ஜாய் செய்வார்கள்.
Makhana Rasamalai

மக்கானா ரசமலாய் ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் இதில் நிறைந்துள்ள நன்மைகளை பார்க்கலாம்:
- மக்கானா மற்றும் பால் ஆகிய இரண்டுமே இந்த ரெசிபியில் சேர்ந்து இருப்பதால் குழந்தைகளின் எலும்புகள் மற்றும் பற்கள் வளர்வதற்கு தேவையான சத்துக்களை அளிக்கின்றது.
- இதில் சீனிக்கு பதிலாக நாட்டு சர்க்கரை மற்றும் டேட்ஸ் ஆகியவை சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கான ஆற்றல் நிறைந்த உணவாக இது இருக்கும்.
- மக்கானா வயிற்றுக்கு இலகுவாக இருக்கும் என்பதால் குழந்தைகளுக்கு உணவு எளிதில் செரிமானம் ஆவதற்கு உதவுகின்றது.
- இதில் சேர்க்கப்பட்டிருக்கும் பாதாம் மற்றும் பிஸ்தா ஆகிய இரண்டிலுமே இயற்கையான கொழுப்புகள் நிறைந்துள்ளதால் குழந்தைகள் நீண்ட நேரம் விளையாடுவதற்கு தேவையான ஆற்றலை அளிக்கின்றது.
- மக்கானா மற்றும் நட்ஸ் ஆகிய இரண்டிலுமே ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளதால் இவை மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் உதவி புரிகின்றது.
- இதில் சேர்க்கப்பட்டிருக்கும் ஏலக்காய், குங்குமப்பூ, இயற்கையான இனிப்பு சுவை போன்றவை குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகின்றன.
Makhana Rasamalai
- மக்கானா- அரை கப்
- முந்திரி- 2 டே.ஸ்பூன்
- தர்பூசணி விதைகள்-1டே.ஸ்பூன்
- பிஸ்தா- 2 டே.ஸ்பூன்
- ஏலக்காய்- அரை டீ.ஸ்பூன்
- குங்குமப்பூ -1சிட்டிகை
- பால் அல்லது தண்ணீர்- 1/2 கப்
- நாட்டு சக்கரை- 2 டே. ஸ்பூன்
- வறுத்த பாதாம்- 1 டே.ஸ்பூன்
- உலர்ந்த ரோஜா இதழ்கள்- மேலே தூவ.
Makhana Rasamalai
செய்முறை
- கால் கப் மக்கானா விதைகள், முந்திரி, தர்பூசணி விதைகள்,பிஸ்தா,ஏலக்காய் தூள் போன்றவற்றை இரண்டு மணி நேரத்திற்கு தண்ணீரில் ஊற வைக்கவும். குங்குமப்பூவை பால் அல்லது தண்ணீரில் ஊற வைக்கலாம்.
- இவை எல்லாவற்றையும் மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- மீதியுள்ள கால் கப் மக்கானாவை மிதமான தீயில் வைத்து மொறு மொறுப்பாக மாறும்வரை வறுக்கவும்.
- ஏற்கனவே தயாரித்து வைத்த ரசமலாய் மிக்சரில் இந்த மக்கானாவினை போட்டு நன்கு கலக்கவும்.
- இதனுடன் வருத்து மற்றும் பொடியாக சீவிய பாதாம் மற்றும் பிஸ்தா சேர்க்கவும்.
- 1 முதல் 2 மணி நேரத்திற்கு பிரிட்ஜில் வைக்கவும். சுவையான மக்கானா ரசமலாய் ரெடி.
- உலர்ந்த ரோஜா இதழ்களை மேலே தூவி பரிமாறலாம்.
இந்த மக்கானா ரசமலாய் ரெசிபி குழந்தைகளுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் அள்ளித்தரும் ஒரு சுவையான இனிப்பு வகையாகும்.
இதில் சேர்க்கப்பட்டிருக்கும் நட்ஸ் வகைகள் மற்றும் குங்குமப்பூ ஆக இரண்டுமே ஸ்வீட்டிற்கான நல்ல சுவையை தரும் என்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
ஃப்ரிட்ஜில் வைத்து குளுகுளுப்பாக பரிமாறப்படுவதால் இந்த வெயிலுக்கு ஏற்ற இதமான ரெசிபியாக இருக்கும். கடைகளில் விற்கும் விதவிதமான ஐஸ்கிரீம்கள் கொடுப்பதை காட்டிலும் இந்த மாதிரியான இயற்கையான ரசமலாய் செய்து கொடுக்கலாம்.

உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Makhana Rasamalai
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஒரு வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு மக்கானா ரசமலாய் கொடுக்கலாமா?
இதில் பால் மற்றும் நட்ஸ் சேர்க்கப்பட்டிருப்பதால் ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு கொடுப்பதுதான் சிறந்தது.
பால் இல்லாமல் இந்த ரெசிபியை செய்யலாமா?
தாராளமாக செய்யலாம். பாலுக்கு பதிலாக தண்ணீரோ அல்லது மற்ற தாவரங்களிலிருந்து கிடைக்கக்கூடிய பாலோ செய்யலாம்.
குழந்தைகளுக்கு அலர்ஜி இருந்தால் நட்ஸ் இல்லாமல் இந்த ரெசிபியை செய்யலாமா?
நட்ஸ் அலர்ஜியை ஏற்படுத்தும் என்றால் குழந்தைகளுக்கு தர்பூசணி விதைகள் மற்றும் பூசணி விதைகள் போன்றவற்றை வைத்து செய்து கொடுக்கலாம்.
மக்கானா ரசமலாய்
Ingredients
- மக்கானா- அரை கப்
- முந்திரி- 2 டே.ஸ்பூன்
- தர்பூசணி விதைகள்-1டே.ஸ்பூன்
- பிஸ்தா- 2 டே.ஸ்பூன்
- ஏலக்காய்- அரை டீ.ஸ்பூன்
- குங்குமப்பூ -1சிட்டிகை
- பால் அல்லது தண்ணீர்- 1/2 கப்
- நாட்டு சக்கரை- 2 டே. ஸ்பூன்
- வறுத்த பாதாம்- 1 டே.ஸ்பூன்
- உலர்ந்த ரோஜா இதழ்கள்- மேலே தூவ











Leave a Reply