curd and fruit salad in tamil
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகள் விரும்பும் பலவகை வண்ணங்களுடனும் சுவையாகவும் இருப்பதால் உங்கள் குழந்தைகள் நிச்சயம் இந்த தயிர் பழக்கலவை பர்ஃபைட்டை விரும்பி உண்பார்கள். இதில் தயிர் ,பழங்கள் மற்றும் நட்ஸின் நற்குணங்கள் இருப்பதால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சிற்றுண்டியாக இருக்கும்.கோடை காலத்தில் குழந்தைகளின் உடலிற்கு குளிர்ச்சியாகவும் இருக்கும். இந்த தயிர் பழக்கலவை பர்ஃபைட் கிவி, திராட்சை, மாதுளை மற்றும் ஆரஞ்சு ஆகிய பழங்களினால் தயாரிக்கப்பட்டது.நீங்கள் உங்களுக்கு விருப்பமான பழங்களை சேர்த்து கொள்ளலாம். அதே போல் நான் இங்கு வால்நட்ஸை பயன்படுத்தியுள்ளேன்.நீங்கள் உங்கள் செல்ல குழந்தைகளுக்கு விருப்பமான நட்ஸை பயன்படுத்தி கொள்ளலாம். இப்பொழுது நாம் ரெசிபியை பார்க்கலாம்.
தேவையானவை
- நறுக்கிய பழங்கள்- 1 கப்
- பழங்கள் – கிவி, திராட்சை, மாதுளை, ஆரஞ்சு
- 1/2 கப் – வால் நட்ஸ்
- ஸ்ட்ராவ்பெரிஸ் – 8-10
- 1 ½ கப் – தயிர்
- 2 டே .ஸ்பூன் – தேன்
curd and fruit salad in tamil
செய்முறை
- முதலில் தேனை தயிருடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- ஸ்ட்ராவ்பெரியை பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் நைசாக அரைக்கவும்.
3. வால்நட்ஸை ஜிப் பேஃகில் போட்டு நொறுக்கவும். பொடியாகாமல் பார்த்து கொள்ளவும்.
4. நமது பர்ஃபைட்டை ரெடி செய்வதற்கு அழகான குவளையை எடுத்து கொள்ளவும்.
5. முதலில் 2 ஸ்பூன் ஸ்ட்ராவ்பெரி ப்யூரியை குவளையில் எடுத்து கொள்ளவும்.
6. 2-3 டே.ஸ்பூன் தயிரினை அதற்கு மேல் ஊற்றி நறுக்கி வாய்த்த பழங்களை போடவும்.
7.அடுத்து ஸ்ட்ராவ்பெரி ப்யூரி,வால்நட்ஸ் மற்றும் பழங்களை அடுத்தடுத்து குவளை நிரம்பும் வரை நிரப்பவும்.
- கடைசியாக ஸ்ட்ராபெரி துண்டுகள் மற்றும் வால்நட்ஸ் கொண்டு அலங்கரிக்கவும்.
9.இப்பொழுது சுவையான தயிர் பழக்கலவை பர்ஃபைட் ரெடி.
பர்ஃபைட் என்ற பிரெஞ்சு வார்த்தையின் தமிழ் அர்த்தம் பொருத்தம் என்பதாகும்.அதற்கேற்றவாறு ஆரோக்கியம் மற்றும் சுவையிலும் நம் குழந்தைகளுக்கு பொருத்தமாக இருக்கும் இந்த தயிர் பழக்கலவை பர்ஃபைட். மேலும் பழங்கள் மற்றும் நட்ஸ் விரும்பாத குழந்தைகளும் இதை நீங்கள் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவர்.
Leave a Reply