உங்கள் செல்லக்குழந்தை இப்போது எட்டாவது மாதத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் வேளையில் பல்வேறு புதிய சவால்களையும் நீங்கள் சந்திக்க வேண்டிய நேரமிது…
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
உங்கள் குழந்தை தற்போது தவழ்ந்து கொண்டிருப்பதால் வெவ்வேறு புதிய விஷயங்களில் கவனம் செலுத்தும். அதனால் உணவின் மீதான நாட்டம் குறைந்து பொருட்களை தூக்கி எறிவது, ஸ்பூனால் ஊட்டும் உணவை நிராகரிப்பது என தொடர்ந்து கொண்டிருக்கும்.
8வது மாதத்தில் குழந்தையால் யாருடைய உதவியும் இன்றி உட்கார முடியும் . மேலும் தங்கள் கைகள் மற்றும் கட்டைவிரலை கொண்டு பொருட்களை எடுப்பது, உணர்வது போன்ற குணாதிசயங்கள் இருக்கும் என்பதால் அவர்கள் கையில் சில உணவுப் பொருட்களை கொடுத்து சாப்பிட பழக்கலாம்…
8வது மாதத்திற்கு பிறகு குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டும் வகையிலான உணவுகளை கொடுப்பது அவசியம். 8 வது மாதம் முடிந்த பிறகு நீங்கள் கீழ்க்கண்ட உணவுகளை தர ஆரம்பிக்கலாம்…
1. முட்டையின் மஞ்சள் கரு
2. சிக்கன்
3. சீஸ்
4. யோகர்ட்
5. சோயா பனீர்
6. காலிப்ளவர்
7. ப்ரக்கோலி
8. கிவி பழம்
9. மீன்
10. பிரெட் ஸ்டிக்
கவனிக்க :
பொதுவாக குழந்தைகளுக்கு பசும்பால் வேண்டாம் என சொல்லும் போது சீஸ், யோகர்ட் கொடுக்கலாம் என கூறுவது ஏன்? என நீங்கள் யோசிக்கலாம். ஆனால் சீஸ் மற்றும் யோகர்ட்டில் லாக்டோஸின் அளவு குறைந்திருப்பதுடன் எளிதில் செரிமானம் ஆகும் தன்மையும் உள்ளது. ஆனால் பசும்பாலில் இந்த தன்மை இல்லை. அதனால் தான் மேற்கண்ட இரண்டு உணவுகளை பரிந்துரைத்துள்ளோம்…
குழந்தைகளுக்கு என்னென்ன உணவுகளை கொடுப்பது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. குழந்தை நன்றாக உட்காரும் நிலைக்கு வரும் போது
2. குழந்தையானது தன்னுடைய நாக்கை வெளியே உந்தி தள்ளும் போது
3. குழந்தைகள் தங்கள் கைகளில் உணவை தொட்டு அதனை வாய்க்கு கொண்டு போகும் நிலைக்கு வரும் போது.
4. குழந்தையின் கண் மற்றும் கைகளின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டும்.
இப்போது தொடங்குங்கள் :
1. குழந்தைக்கு உணவு ஊட்டுவதற்கு முன்பாக அதனை உயரமான இருக்கையில் அமரவைத்து ஊட்டுவது நல்லது. ஏனெனில் குழந்தை சாப்பிடும் உணவை வீணாக்குவதும், விளையாண்டு கொண்டே சாப்பிடுவதை கட்டுப்படுத்த இது உதவியாக இருக்கும்.
நாம் வீட்டில் சாப்பிடும் அனைத்து வகையான உணவுகளை கொடுக்கலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்தியாவை பொறுத்தவரை நாம் சாப்பிடும் சில உணவுகள் குழந்தைகளுக்கு ஒத்துக் கொள்ளாது என்பதால் நாம் குழந்தைகளுக்கென பிரத்யேக உணவை கொடுக்க வேண்டும்.
வேகவைத்த காய்கறிகளை எல்லாம் நீளமாக வெட்டிக் கொடுக்கலாம். மேலும் ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை சதுர வடிவில் வெட்டி கொடுக்கலாம்.
3. குழப்பங்களை எதிர்கொள்ள தயாராக இருங்கள்.
4. குழந்தைகளிடம் ஊட்டியே ஆக வேண்டும் என்ற அணுகுமுறையை விட்டுவிட்டு அவர்களை தங்கள் கைகளால் எடுத்து சாப்பிட பழக்குங்கள்.
5. ஒரு வேளைக்கு ஒரு உணவை கொடுத்து பழக்குங்கள். உதாரணத்திற்கு ஒரு நாள் ஆப்பிள் கொடுக்கும் போது மற்றொரு நாள் பேரிக்காயை கொடுங்கள். இதன் மூலம் குழந்தைகளுக்கு பழங்களின் சுவையும் தெரியும். அதிலுள்ள சத்துகளும் குழந்தைகளுக்கு பலனைத் தரும்.
6. பாஸ்ட் புட் மற்றும் அதிகம் சர்க்கரை சேர்த்த உணவுகளை தவிர்த்து விடவும்.
7. குறிப்பிட்ட நேரத்தில் சரியாக சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்ற வரைமுறை வேண்டாம். குழந்தைகளின் நடைமுறை, பசிக்கும் நேரம் மற்றும் நீங்கள் பாலூட்டும் நேரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உணவு கொடுக்கும் நேரத்தை அமைத்துக் கொள்ளுங்கள்.
8. குழந்தைகள் தானாக சாப்பிடும் கட்டம் வரும் போது அவர்களுக்கு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொடுங்கள். பெரிய அளவிலான பழங்கள், காய்கறிகளை நீங்கள் கொடுத்தால் அது அவர்களின் வாயில் மாட்டிக் கொண்டு விழுங்கவும் முடியாமல் வெளியே துப்பவும் முடியாமல் அவஸ்தைப்படுவார்கள்.
9. குழந்தைக்கு உணவை உடனே ஊட்டி விட வேண்டும் என அவசரம் வேண்டாம். உணவை கொடுப்பதில் நிதானமும் பொறுமையும் தேவை. இதை கருத்தில் கொள்ளுங்கள்.
10. ஏற்கனவே தவிர்த்த உணவுகளை சில நாட்களுக்கு பிறகு முயற்சி செய்து பாருங்கள். அது அவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
11. சாப்பிடும் போது சில நேரங்களில் அவர்களுக்கு உணவுக்குழாயில் செல்வதில் சிரமம் ஏற்பட்டு அடைத்துக் கொள்ளும். எனவே அந்த நேரங்களில் குழந்தையை தனியாக விடாதீர்கள்.
8 மாத குழந்தையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அவர்களின் பசியை முற்றிலும் பூர்த்தி செய்யும் வகையில் உணவு பட்டியலை தயாரித்துள்ளேன். முடிந்த அளவு இதனை நீங்கள் பின்பற்றி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்…
- காலை உணவு 9 மணி
- காலை நேர ஸ்நாக்ஸ் 11 மணி
- மதிய உணவு 1 மணி
- மதிய நேர ஸ்நாக்ஸ் 4 மணி
- இரவு உணவு 7 முதல் 9 மணிக்குள்
இதற்கிடையில் குழந்தைக்கு அவ்வப்போது தாய்ப்பாலையும் கொடுங்கள். குழந்தையின் உடலுக்கு தேவையான எல்லா சத்துகளையும் தாய்ப்பால் வழங்கும் என்பதால் அதனை நிறுத்திவிட வேண்டாம்…
முதல் வாரம்:
நாள் | காலை உணவு | காலை ஸ்நாக்ஸ் | மதிய உணவு | மாலை ஸ்நாக்ஸ் |
திங்கள் | வேகவைத்த தோசை | காய்கறி சூப் | பருப்பு சாதம் | துண்டாக நறுக்கிய பழங்கள் |
செவ்வாய் | ரவை கீர் | முட்டையின் மஞ்சள் கரு அல்லது நறுக்கிய காய்கறி | பொங்கல் | திராட்சை ஜூஸ் |
புதன் | இட்லி | ஆப்பிள் ஜூஸ் | கேரட் சாதம் | நறுக்கிய காய்கறிகள் |
வியாழன் | பான் கேக் | ப்ரெட் ஸ்டிக் | நெய் சாதம் | சப்போட்டா கூழ் |
வெள்ளி | வீட்டில் தயாரித்த அரிசி கஞ்சி | நறுக்கிய காய்கறி | ஏதேனும் ஒரு பொங்கல் வகை | வாழைப்பழ கூழ் |
சனி | கோதுமை கீர் | மாம்பழ யோகர்ட் | காய்கறி சாதம் | நறுக்கிய காய்கறி |
ஞாயிறு | வாழைப்பழ பான்கேக் | முட்டையின் மஞ்சள் கரு அல்லது நறுக்கிய காய்கறி | தக்காளி சாதம் | நறுக்கிய காய்கறி |
2வது வாரம் :
நாள் | காலை உணவு | காலை ஸ்நாக்ஸ் | மதிய உணவு | மாலை ஸ்நாக்ஸ் | இரவு உணவு |
திங்கள் | ராகி கஞ்சி | சீஸ் | பரங்கிக்காய் சாதம் | நறுக்கிய காய்கறி | கோதுமை கஞ்சி |
செவ்வாய் | ஆப்பிள் பான் கேக் | முட்டையின் மஞ்சள் கரு அல்லது பிரெட் துண்டுகள் | சர்க்கரை பொங்கல் | நறுக்கிய காய்கறி | பருப்பு சாதம் |
புதன் | ஓட்ஸ் கீர் | ஆப்பிள் யோகர்ட் | மிளகு நெய் சாதம் | பிரெட் ஸ்டிக் | வேகவைத்த தோசை |
வியாழன் | வீட்டில் தயாரித்த அரிசி கஞ்சி | சிக்கன் அல்லது காய்கறி சூப் | கீரை சாதம் | நறுக்கிய காய்கறி | வீட்டில் தயாரித்த சத்துமாவு கஞ்சி |
வெள்ளி | பான்கேக் | சீஸ் ஸ்டிக் | மசாலா பொங்கல் | நறுக்கிய காய்கறி | மசித்த ரொட்டி |
சனி | ஓட்ஸ் வாழைப்பழ கஞ்சி | யோகர்ட் | உருளைக்கிழங்கு சாதம் | நறுக்கிய காய்கறி | கோதுமை கஞ்சி |
ஞாயிறு | சோயா பன்னீர் உணவு | வேகவைத்த சிக்கன் அல்லது நறுக்கிய காய்கறி துண்டு | காய்கறி சாதம் | பிரெட் ஸ்டிக் | இட்லி |
3வது வாரம் :
நாள் | காலை உணவு | காலை ஸ்நாக்ஸ் | மதிய உணவு | மாலை ஸ்நாக்ஸ் | இரவு உணவு |
திங்கள் | கேழ்வரகு அல்வா | கேரட் பால்ஸ் | பருப்பு சாதம் | பிரெட் ஸ்டிக் | பார்லி கஞ்சி |
செவ்வாய் | வீட்டில் தயாரித்த சத்துமாவு கஞ்சி | மிளகு கலந்த முட்டை அல்லது நறுக்கிய காய்கறி | பாலக்கீரை சாதம் | தக்காளி ஜூஸ் | வேகவைத்த தோசை |
புதன் | கோதுமை பான்கேக் | சேப்பங்கிழங்கு வறுவல் | முட்டை மஞ்சள் கரு சாதம் | ஸ்நாக் பார் | மாவு ரொட்டி |
வியாழன் | ஓட்ஸ் கஞ்சி | நறுக்கிய காய்கறி | நெய் சாதம் | தக்காளி சாதம் | ரவை கஞ்சி |
வெள்ளி | கேழ்வரகு தோசை | சிக்கன் அல்லது காய்கறி சூப் | காய்கறி பொங்கல் | நறுக்கிய காய்கறி துண்டுகள் | ஜவ்வரிசி கஞ்சி |
சனி | மினி இட்லி | யோகர்ட் | பொங்கல் | காலிப்ளவர் ப்ரை | ஓட்ஸ் கஞ்சி |
ஞாயிறு | பான்கேக் | சீஸ் | சுரைக்காய் சாதம் | கேழ்வரகு லட்டு | பொங்கல் |
4வது வாரம் :
நாள் | காலை உணவு | காலை ஸ்நாக்ஸ் | மதிய உணவு | மாலை ஸ்நாக்ஸ் | இரவு உணவு | ||
திங்கள் | பாஸ்தா | நறுக்கிய காய்கறி துண்டுகள் | தக்காளி சாதம் | சுரைக்காய் கூழ் | மூன்று வண்ணங்களில் இட்லி | ||
செவ்வாய் | காய்கறி | தோசை | தர்பூசணி ஸ்மூத்தி | மசாலா பொங்கல் | பாலக் கீரை சூப் | ஓட்ஸ் கஞ்சி | |
புதன் | கேழ்வரகு கேக் | சீஸ் | பரங்கிக்காய் சாதம் | பட்டர்ப்ரூட் கூழ் | வீட்டில் தயாரித்த அரிசி கஞ்சி | ||
வியாழன் | வாழைப்பழ பான்கேக் | முட்டை அல்லது நறுக்கிய காய்கறி | சிக்கன் அல்லது சாதம் | காய்கறி வேகவைத்த நீர் | ரவை கீர் | ||
வெள்ளி | வீட்டில் தயாரித்த சத்துமாவு | பழ யோகர்ட் | சுரைக்காய் சாதம் | கேரட் கீர் | கோதுமை பாதாம் கஞ்சி | ||
சனி | பழம் மற்றும் ஓட்ஸ் கஞ்சி | சிக்கன் பிரை அல்லது காய்கறி துண்டுகள் | சர்க்கரை பொங்கல் | ஆப்பிள் ஸ்மூத்தி | மசாலா தோசை | ||
ஞாயிறு | முட்டை சேர்க்காத பான்கேக் | பீட்ரூட் அல்வா | காய்கறி சாதம் | சீஸ் | காய்கறி சாதம் |
குறிப்பு :
நறுக்கிய காய்கறிகளை நீங்கள் சிறிதாக நறுக்கி சாப்பிட தரலாம். மேலும் பான் கேக் என்பது முழு கோதுமையில் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.
முதலில் காய்கறி துண்டுகளை கொடுக்கும் போது 2 அல்லது 3 துண்டுகளை கொடுக்கவும். அதன் பிறகு அளவை அதிகரித்துக் கொள்ளலாம். கையில் காய்கறி அல்லது பழங்களை கொடுத்த உடனே அவர்கள் அதை சாப்பிட வேண்டும் என நினைக்காதீர்கள். அவர்களுக்கு அந்த சுவை பிடித்துப் போனால் தானாகவே சாப்பிட தொடங்குவார்கள்…
குழந்தைக்கு உணவு கொடுக்கும் முன்னர் பட்டியலை தயார் செய்து அதற்கேற்றார் போல் கொடுங்கள்.
மேலும் குழந்தையின் உணவுகள் குறித்த ஒரு டயரியை வைத்து அதில் குறித்து வாருங்கள். அதில் குழந்தைக்கு பிடித்தமான உணவு மற்றும் அலர்ஜியை ஏற்படுத்தும் உணவுகள் என எல்லாம் பட்டியலிட்டு வைத்திருப்பது உதவியாக இருக்கும்…
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply