
குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்!!!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி.சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி.சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
முதல் வாரம் :
திங்கள் | நாளொன்றுக்கு ஒரு டேபிள் ஸ்பூன் வீதம்( முதன்முதலில் கொடுக்க வேக வைத்து மசித்த ஆப்பிள் ஏற்றது) இத்துடன் தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் சேர்த்து தரலாம்… |
செவ்வாய் | வேகவைத்து மசித்த ஆப்பிளை 2 டேபிள் ஸ்பூன் வீதம் 2 முறை கொடுக்க வேண்டும் |
புதன் | வேகவைத்து மசித்த ஆப்பிளை 3 டேபிள் ஸ்பூன் வீதம் 2 முறை கொடுக்க வேண்டும் |
வியாழன் | ஆப்பிளுக்கு பிறகு நீங்கள் காய்கறிகளை கொடுக்க ஆரம்பிக்கலாம். அதில் கேரட் குழந்தைக்கு ஏற்ற உணவு. கேரட்டை வேக வைத்து மசித்தோ அல்லது ஜூஸாகவோ ஒரு டேபிள் ஸ்பூன் என ஒருவேளை தரலாம்… |
வெள்ளி | வேகவைத்து மசித்த கேரட் அல்லது ஜூஸை 2 டேபிள் ஸ்பூன் வீதம் 2 முறை தரவும் |
சனி | வேகவைத்து மசித்த கேரட் அல்லது ஜூஸை 3 டேபிள் ஸ்பூன் என 2 வேளை தரவும். |
ஞாயிறு | காலையில் வேகவைத்து மசித்த ஆப்பிள்… மாலையில் வேகவைத்து மசித்த கேரட் அல்லது ஜூஸ்… |
2வது வாரம்:
குழந்தைக்கு உணவு கொடுக்கும் நேரத்தை உங்கள் வசதிக்கேற்ற படி அமைத்துக் கொள்ளலாம்… பொதுவாக காலையில் 11 மணிக்கும், பிற்பகல் 3 மணிக்கும் உணவு கொடுப்பது நல்லது..நாள் | 11AM | 3PM |
திங்கள் | வேகவைத்து மசித்த கேரட் | அரிசி கஞ்சி |
செவ்வாய் | ரவை கீர் | வேகவைத்து மசித்த ஆப்பிள் |
புதன் | வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு | பார்லி கஞ்சி |
வியாழன் | வேகவைத்து மசித்த பருப்பு | வேகவைத்து மசித்த பேரிக்காய் |
வெள்ளி | சப்போட்டா கூழ் | கேரட் பீட்ரூட் சூப் |
சனி | கேரட் ஜூஸ் | வேகவைத்து மசித்த கேரட்பேரிக்காய் |
ஞாயிறு | வேகவைத்து மசித்த பரங்கிக்காய் | திராட்சை ஜூஸ் |
3வது வாரம்:
நாள் | 11AM | 3PM |
திங்கள் | அரிசி கஞ்சி | ஆப்பிள் கூழ் |
செவ்வாய் | பார்லி வேகவைத்த நீர் | வேகவைத்து மசித்த சுரைக்காய் |
புதன் | கேரட் ஜூஸ் | வேகவைத்து மசித்த பீட்ரூட் |
வியாழன் | உருளைக்கிழங்கு சூப் | ஏதேனும் தானிய வகை |
வெள்ளி | சர்க்கரைவள்ளி கிழங்கு மசித்தது | ஓட்ஸ் கஞ்சி |
சனி | ஆரஞ்ச் ஜூஸ் | வேகவைத்து மசித்த புடலங்காய் |
ஞாயிறு | மசித்த வாழைப்பழம் | அரிசி கஞ்சி |
4வது வாரம்:
நாள் | 11AM | 3PM |
திங்கள் | துவரம்பருப்பு பூண்டு மசியல் | பீட்ரூட் உருளைக்கிழங்கு மசித்தது |
செவ்வாய் | மசித்த அரிசி சாதம் | வேகவைத்து மசித்த சுரைக்காய் |
புதன் | ஓட்ஸ் கீர் | வேகவைத்து மசித்த பேரிக்காய் |
வியாழன் | வேகவை-த்து மசித்த கேரட் உருளை | கோதுமை கஞ்சி |
வெள்ளி | வேகவைத்து மசித்த காய்கறிகள் | திராட்சை ஜூஸ் |
சனி | பார்லி கஞ்சி | வேகவைத்து மசித்த புடலங்காய் |
ஞாயிறு | கேரட் ஜூஸ் | ரவை கீர் |
6 months baby food chart in tamil:
குறிப்பு :
6 மாத குழந்தைக்கு என்னென்ன உணவு வகைகளை எல்லாம் கொடுக்கலாம் என்பதற்கான சாம்பிள் தான் இது. இந்த பட்டியலை தான் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயமில்லை…இந்த உணவு வகைகள் எல்லாம் உங்கள் குழந்தைக்கு ஒத்துக் கொள்கிறதா? என்பதை முதலில் பரிசோதிக்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் உணவை எல்லாம் குழந்தை சாப்பிட வேண்டும் என நீங்கள் நினைப்பது கூடாது. இதில் பொறுமை ரொம்பவே முக்கியம். தனக்கு ஏற்ற உணவை குழந்தை முழுமையாக சாப்பிட கூடுதலாக 2 மாதங்கள் கூட ஆகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்- குழந்தைக்கு உணவு ஒத்துக் கொள்ளவில்லை என்பதை எப்படி கண்டறிவது? நீங்கள் கொடுக்கும் உணவு குழந்தைக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் கீழ்கண்ட உபாதைகள் ஏற்படும்…- வயிற்றுப்போக்கு
- மலச்சிக்கல்
- வாந்தி
- தோல் தடித்தல்
- இடைவிடாத அழுகை(வயிற்று வலியின் காரணமாக)
Leave a Reply