Will Drinking saffron Milk During My Pregnancy Make My Baby Fair?
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குங்குமப்பூ கலந்த பாலை கர்ப்ப காலத்தில் தாய் மார்கள் குடித்து வந்தால் குழந்தை சிவப்பாக பிறக்கும்! இது நம்மில் பலரும் கொண்டுள்ள திடமான நம்பிக்கை ஆகும் .
நம்மில் பலர் இன்றும் அதனை தவறாமல் பின் பற்றி வருகின்றனர். கீழ்கண்ட பதிவு உங்கள் கேள்விக்கு தெளிவான பதிலை தரும் என நம்புகிறேன். சில மாதங்களுக்கு முன்னர் என் நெருங்கிய தோழி பிரசவித்து இருந்தாள்.
எனவே ,அவளை பார்க்க நான் மருத்துவ மனைக்கு சென்று இருந்தேன். அவள் அழகான குழந்தையை ஆரோக்கியமாக பெற்று இருந்தாள்.அவளது உறவினர் ஒருவரும் குழந்தையை பார்க்க மருத்துவமனைக்கு வந்திருந்தார்.
அப்பொழுது குழந்தை கருப்பாக இருந்ததை கவனித்தார் .“நீங்கள் குங்குமப்பூ கலந்த பால் கொடுக்கவில்லையா?” என்று என் தோழியின் அன்னையை பார்த்து கேட்டார். மேலும், என் மகளுக்கு குங்குமப்பூ கலந்த பாலை கொடுத்தேன்.
அதனால் தான் குழந்தை சிவப்பாக பிறந்தது என்றும் பெருமிதம் கொண்டார். அவளது இந்த உரையாடல் என் தோழியின் மனதை புண்படுத்தியது.அப்பொழுதுதான் நான் குழந்தை சிவப்பாக பிறப்பதற்கும் குங்குமப்பூவிற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றேன். அது ஏன் என்ற உண்மையை அங்கு இருந்தவர்களுக்கு விளக்கினேன்.இந்த உண்மையை உங்களுக்கும் சொல்ல விளைகின்றேன்.
மரபணு காரணங்கள்
முதலில் தோலின் நிறம் எப்படி உருவாகின்றது என்று பார்ப்போம்.குழந்தையின் நிறம் என்பது கீழ்க்கண்ட காரணங்களை கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது.
- குழந்தையின் பெற்றோர்
- பெற்றோரின் மரபணுக்கள்
- தோலில் உள்ள மெலனின்
மேலும்,மெலனின் அதிகமாக இருப்பவர்கள் கருமையாக காணப்படுவார்கள். மெலனின் குறைவாக உள்ளவர்கள் சிவப்பாக காணப்படுவார்கள். இரண்டாவதாக , சூரியனும் நம் நிறத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. சூரியனிடம் இருந்து வரும் புறஊதாக்கதிர்களிடம் இருந்து மெலனின் நம்மை பாதுகாக்கின்றது. அதனால் தான் பூமத்திய ரேகைக்கு மிக அருகில் உள்ளவர்கள் கருமையாக காணப்படுகிறார்கள். மிக தொலைவில் உள்ளவர்கள் வெண்மையாகவும் காணப்படுகிறார்கள்.
எடுத்துகாட்டாக மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களை சொல்லலாம். உலகில் முதன் முதலாக பிறந்த மனிதன் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள ஆப்பிரிக்காவில் பிறந்தவனாவான். அவன் மிகவும் கருமையாக பிறந்தான் . அதன் பிறகு மக்கள் குடி பெயர்தல், கலப்புத்திருமணம், மரபணு மாற்றங்கள் முதலியவை மனிதன் நிற மாற்றத்திற்க்கு காரணமாகின. இதற்க்கு குங்குமப்பூ காரணம் அல்ல. மேலும், நிறத்தால் உயர்வு தாழ்வு கொள்வது என்பது வருத்தமான செயல். இதை அவர்களுக்கு தெளிவாக உணர வைத்தேன். பாரதியாரின் முரசு பாடல் அந்த கணம் என் மனதில் ஒலித்தது
“வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில்
மானுடர் வேற்றுமை யில்லை;
எண்ணங்கள் செய்கைக ளெல்லாம் – இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்”.
இதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியமே பெற்றோரின் முதல் நோக்கமாக வேண்டும்.மேலும் பிரசவித்த பெண்ணின் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் உறவினர்களின் துணை தேவை.
குழந்தைகளுக்கு தேவையான, அனைத்து பயனுள்ள தகவல்களையும் இந்த பிளாகில் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
ரெசிபிகளை காண வேண்டுமா? இங்கே சப்ஸ்க்ரைப் செய்ய கிளிக் செய்யுங்கள்…
மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply