Vegetable Omelette for Babies
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
முட்டையை வைத்து விதவிதமான ரெசிபிக்களை செய்யலாம் என்பதே முட்டையின் சிறப்பியல்பு.குறிப்பாக நமது குழந்தைகளுக்கு முட்டையை வைத்து கஸ்டர்டு,பான் கேக், கேக் மற்றும் முட்டை டிக்கிஸ் போன்ற சத்தான பல ரெசிபிக்களை செய்யலாம்.உங்கள் குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் முட்டையின் மஞ்சள் கருவினை வேக வைத்து கொடுத்திருப்பீர்கள். இப்பொழுது சற்றே வித்யாசமான அதே நேரம் சத்தான முட்டை மஞ்சள் கரு ஆம்லெட் ரெசிபியை காணலாம்.
Vegetable Omelette for Babies
தேவையானவை
- மஞ்சள் கரு- 1
- 1 டீ.ஸ்பூன்-நன்கு துருவிய கேரட்
- ½ டீ.ஸ்பூன்-நன்கு துருவிய பீட்ரூட் –
- ½ டீ.ஸ்பூன்-நன்கு நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
- கருப்பு மிளகு தூள்- இம்மியளவு
- பட்டர்- ¼ டீ.ஸ்பூன்
Vegetable Omelette for Babies
செய்முறை
- மஞ்சள் கருவினை கலக்கியால் நன்றாக கலக்கவும்.
- கடாயில் பட்டரை ஊற்றி முட்டை மஞ்சள் கருவினை ஊற்றவும்.
- துருவிய காய்கறிகளை அதில் போடவும்.
- மிளகு த் தூளை தூவவும். துருவிய காய்கறிகளை கரண்டியால் மெதுவாக அழுத்தவும்.
- ஆம்லெட் வெந்தவுடன் திருப்பி போடவும்.
- சிறிது ஆறியதும் குழந்தைகளுக்கு பரிமாறலாம்.
இதிலுள்ள காய்கறிகள் சத்துக்கள் தருவதோடல்லாமல் பார்க்க வண்ண மயமாக உள்ளதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள். உங்கள் குழந்தை மிளகை உண்ணவில்லையென்றால் வறுத்த சீரகப்பொடியை சேர்க்கலாம். ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு உப்பு சேர்ப்பதை தவிர்க்கவும். இந்த ஆம்லேட்டை ருசித்தால் குழந்தைகள் காலை உணவு உண்பதை தவிர்க்கவே மாட்டார்கள். நீங்க ளும் உங்கள் வீட்டில் இந்த ஆம்லேட்டை செய்து பாருங்களேன்.லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply