Banana Coconut French Toast :குழந்தைகளுக்கு ஒரே விதமான ஸ்னாக்ஸ் கொடுத்து போர் அடித்து விட்டதா? நாம் வழக்கமாக கொடுக்கும் ஸ்னாக்சிற்கு பதிலாக ஹெல்தியான வாழைப்பழ பிரெஞ்சு டோஸ்டை கொடுத்து பாருங்க. பொதுவாக பிரெட் டோஸ்ட் என்றால் நாம் முட்டை சேர்த்து செய்வது வழக்கம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த ஹெல்தியான வாழைப்பழ பிரெஞ்சு டோஸ்டை கொடுக்கலாம்.தேங்காய்ப்பால் சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது.மாட்டுப்பால் ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கும், சைவ பிரியர்களுக்கும் இந்த பிரெஞ்சு டோஸ்டை செய்து கொடுக்கலாம்.
இதையும் படிங்க: சளி இருமலை போக்கும் மிட்டாய்
பனானா கோகொனட் பிரெஞ்ச் டோஸ்ட்
- வாழைப்பழம் – 1
- தேங்காய்ப்பால் – 1/4 கப்
- கோதுமை பிரெட்- 3-4
- சீரகத்தூள்- 1/4 டீ.ஸ்பூன்
- எண்ணெய் – தேவையானளவு
Banana Coconut French Toast
செய்முறை
1.வாழைப்பழத்தை பவுலில் போட்டு நன்கு மசிக்கவும்.அதனுடன் தேங்காய்ப்பால் மற்றும் சீரகத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
2.பிரெட் துண்டில் சுற்றியுள்ள தோலை நீக்கி முக்கோண வடிவில் நறுக்கி கொள்ளவும்.
3.வாழைப்பழ கலவையை பிரெட் துண்டின் மீது நன்றாக தடவவும்
4.தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றவும்.
5.பிரெட் துண்டுகள் பொன்னிறமாகும் வரை இரு புறமும் புரட்டி எடுக்கவும்.
6.சூடாக பரிமாறவும்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கான பூசணி அல்வா
வாழைப்பழத்தில் இயற்கையாகவே இனிப்பு சுவை இருப்பதால் அதுவே போதுமானது.குழந்தைகளுக்கு மேலும் இனிப்பு சுவை வேண்டுமென்றால் ஹோம் மேட் டேட்ஸ் சிரப்பை ஊற்றி கொடுக்கலாம்.குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் பொழுது திடீரென காலை உணவு வேண்டுமென்றால் இந்த பிரெட் டோஸ்டை செய்து கொடுக்கலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply