ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
வயது – குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்
குழந்தைகளுக்கான அரிசி கஞ்சி
- அரிசி – 3 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – 9 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
- அரிசியை 15 முதல் 20 நிமிடம் வரை ஊறவைக்கவும்.
2. இதனை நன்றாக கழுவி தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வேக வைக்கவும்.
3. அரிசி நன்றாக வெந்த பிறகு சூடாக இருக்கும் போதே கரண்டி அல்லது மத்தால் மசிக்கவும்.
4. கூடுதலாக உள்ள தண்ணீரை வடித்துவிடுங்கள். கூடுதல் சுவைக்கு கொஞ்சம் சீரகத்தூளை சேர்த்துக் கொள்ளலாம்..
தெரிந்து கொள்ள வேண்டியது:
முதலில் சாதாரண அரிசியை பயன்படுத்துங்கள். இது குழந்தைக்கு ஒத்துக் கொண்ட பிறகு ப்ரெளன் ரைஸை பயன்படுத்துங்கள்.
சாதாரண அரிசியுடன் ஒப்பிடும் போது ப்ரெளன் ரைஸ் குழந்தைகளின் வயிற்றுக்கு ஒருவித மந்தமான சூழலை உருவாக்கும்.
அரிசி உணவுகள் குழந்தைகளுக்கு சில நேரம் மலச்சிக்கலை உருவாக்கலாம். ஒருவேளை மலச்சிக்கல் ஏற்பட்டால் உடனே அதனை நிறுத்திவிடுங்கள். சில மாத இடைவெளிக்கு பிறகு நீங்கள் அரிசி உணவை கொடுக்கலாம்..
ப்ரெளன் ரைஸில் செலினியம், மெக்னீசியம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் உள்ளிட்ட சத்துகள் அதிகம் இருக்கிறது.
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply