Instant Rice and Nuts Porridge for Babies:குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் நிறைவடைந்த உடன் முதல் முதலாக உணவு கொடுப்பதற்கு ஏற்ற சத்தான ரெசிபி தான் இந்த இன்ஸ்டன்ட் அரிசி மற்றும் ஓட்ஸ் கஞ்சி.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளுக்கு 6 மாத காலம் முடிவடைந்தவுடன் முதல் உணவு கொடுப்பது என்பது உண்மையில் அம்மாக்களுக்கு சவாலான விஷயம்தான். குழந்தைகள் முதன்முதலாக உணவை சுவைக்க ஆரம்பித்த உடன் ஆர்வமாக உணவினை வாங்கி வாங்கி உண்பார்கள்.
அந்த சமயத்தில் அம்மாக்களுக்கு சத்தான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் குழந்தைகளுக்கு அந்த உணவு ஏற்றுக்கொள்ளுமா? அவற்றை எப்படி கொடுக்கலாம் ?என்ற பல சந்தேகங்கள் இருக்கும்.
மேலும் நாம் கொடுக்கும் உணவு குழந்தைகளுக்கு ஜீரணமாகுமா? என்ற பலவகையான குழப்பங்களுடன் இருப்பர்.நாம் வழக்கமாக கொடுக்கும் பாரம்பரிய உணவுகளுடன் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான இந்த மாதிரியான சுவையான உணவுகளையும் கொடுத்தால் அவர்கள் விரும்பி உண்பர்.
மேலும் இந்த இன்ஸ்டன்ட் உணவு வகைகளை தயாரித்து வைத்துக் கொண்டால் குழந்தைகளுக்கு தேவையான உணவினை நாம் எளிதில் தயாரித்துக் கொள்ளலாம்.
இந்த இன்ஸ்டன்ட் நட்ஸ் அரிசி பொடியில் அரிசி மற்றும் பல வகையான நட்ஸ்களின் சத்துகளும் கலந்து இருப்பதால் குழந்தைகளுக்கு தேவையான புரதம் அதிகளவில் கிடைப்பதோடு குழந்தைகள் விரும்பி உண்பர்.
இதனை குழந்தைகளுக்கு சத்தான காலை உணவாக கொடுக்கலாம். மேலும் இதில் நாம் தேவைப்பட்டால் பழங்கள் மற்றும் காய்கறிகளையும் சேர்த்துக் கொடுக்கலாம். வாழைப்பழம், ஆப்பிள், சர்க்கரைவள்ளிக் கிழங்கு,கேரட் போன்றவற்றினை மசித்து கஞ்சியோடு சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்து பார்க்கலாம்.
இந்த இன்ஸ்டன்ட் கஞ்சி குழந்தைகளுக்கு எளிதான உணவான காய்கறிகள்,பழங்கள் போன்றவற்றை தனித்தனியாக அறிமுகப்படுத்திய பின்பு இதனை அறிமுகப்படுத்தலாம்.
Instant Rice and Nuts Porridge for Babies:
குழந்தைகளுக்கு இந்த இன்ஸ்டன்ட் அரிசி மற்றும் நட்ஸ் கஞ்சி கொடுப்பதில் உள்ள நன்மைகள்:
- அரிசியில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளன எனவே குழந்தைகளுக்கு தேவையான எனர்ஜியை தரவல்லது.
- இதில் வைட்டமின் சி மற்றும் தயமின் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன.
- அரிசி உணவானது குழந்தைகளுக்கு செரிமானமாவதற்கு எளிதாகவும் இருக்கும். அதோடு மட்டுமல்லாமல் நம் உணவில் உள்ள மற்ற சத்துக்களையும் கிரகித்துக் கொள்ள இந்த அரிசி உணவானது உதவும்.
- இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் பிற சத்துக்களும் அடங்கியுள்ளன மேலும் நம் சருமத்திற்கும் பொலிவு சேர்க்கின்றது.
நட்ஸ்கள் எனப்படும் உலர் கொட்டைகளை உண்பதால் ஏற்படும் நன்மைகள்:
- நட்ஸ்கள் எனப்படும் உலர் கொட்டைகளில் குழந்தைகளுக்கு தேவையான ஆரோக்கியமான கொழுப்புகள் ஒமேகா 3s மற்றும் கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளன.
- குழந்தைகளுக்கு வருங்காலத்தில் கேன்சர் வராமல் தடுப்பதோடு மட்டுமல்லாமல் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த வல்லது.
- இவற்றில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள்,மினரல்கள் மற்றும் நார்ச் சத்துக்கள் நிறைந்திருப்பதால் குழந்தைகளின் ஆரோக்கியமான எடை வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- நட்ஸ்களில் காணப்படும் கொழுப்புகள் வருங்காலத்தில் இதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.
- இவற்றில் உள்ள நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி போன்றவை குழந்தைகளுக்கு உணவு நன்றாக செரிமானம் ஆவதற்கு உதவுகின்றது.
- உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான புரோட்டீன்கள்,மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவையும் நிறைந்துள்ளன.
Instant Rice and Nuts Porridge for Babies:
- அரிசி -ஒரு கப்
- நிலக்கடலை -கால் கப்
- பாதாம்- 2-3
- பிஸ்தா-2-3
- முந்திரிப்பருப்பு -2-3.
செய்முறை
- கடாயினை மிதமான தீயில் வைத்து மேலே சொன்ன பருப்புகளை எல்லாம் லேசாக பொன்னிறமாகும் வரை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து எடுக்கவும்.
- ஒரு அகலமான தட்டில் அவற்றை ஆறவிடவும்.
- ஜாரில் போட்டு நன்கு பவுடராக ஆகும்வரை அரைத்து எடுக்கவும்.
- பவுடரை காற்றுப்புகாத டப்பாவில் வைத்து அடைக்கவும்.
- ஒரு பவுலில் 3 டேபிள் ஸ்பூன் பவுடருடன் நன்கு கொதிக்க வைத்த வெந்நீரை ஊற்றி கட்டிகளில்லாமல் நன்கு கலக்கவும்.
- சில நிமிடங்களுக்கு ஓரமாக மூடி வைக்கவும்.
- குழந்தைகளுக்கான அரிசி நட்ஸ் கஞ்சி ரெடி.
குழந்தைகளுக்கு கஞ்சி செய்ய நம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் அரிசியையே பயன்படுத்தலாம். நாம் தொலைதூர பயணங்கள் செய்யும்போது பிளாக்கில் நன்கு கொதிக்க வைத்த தண்ணீரை எடுத்து வைத்துக்கொண்டால் போதும்.
இந்த பவுடரை வைத்து குழந்தைகளுக்கு தேவையான உணவினை எளிதாக தயார் செய்து கொள்ளலாம். குழந்தைகளுக்கு ஒரு வயது வரை இனிப்பு சுவை சேர்க்க கூடாது என்பதால் எந்த இனிப்பும் இதில் சேர்க்கப்படவில்லை.
குழந்தைகளுக்கு நீங்கள் இனிப்புச்சுவை வேண்டும் என்று விரும்பினால் வாழைப்பழம் மற்றும் ஆப்பிள் போன்றவற்றை மசித்து இந்த கஞ்சியில் சேர்த்து கொடுக்கலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
குழந்தைகளுக்கு இன்ஸ்டன்ட் கஞ்சியினை கொடுக்கலாமா?
ஆம். இதில் எவ்வித பிரிசர்வேட்டிவ் சேர்க்கப்படவில்லை என்பதால் குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம். ஆனால் நன்கு கொதிக்க வைத்த தண்ணீரை சேர்த்துக்கொண்டு கலந்து கொடுக்க வேண்டும்.
குழந்தைகளின் உடல் எடை அதிகரிப்பதற்கு எந்த வகையான கஞ்சிகள் கொடுக்கலாம்?
அரிசி நட்ஸ் கஞ்சி, ராகி கஞ்சி, ஓட்ஸ் கஞ்சி,சத்துமாவு கஞ்சி ஆகியவை குழந்தைகளின் உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கச் கூடியவை.
6 மாத குழந்தைக்கு கொடுக்கலாமா?
ஆறு மாத குழந்தைகளுக்கு நீங்கள் தனியாக காய்கறிகள் பழங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்திய பின்பு இந்த இன்ஸ்டன்ட் கஞ்சியினை தாராளமாக கொடுக்கலாம்.
ஒரு வயதிற்கு முன்பாக நட்ஸ்கள் கொடுக்கலாமா?
கொடுக்கலாம். ஆனால் நன்கு அரைத்து பவுடர் ஆக்கி ஏதாவது ஒரு உணவில் நீங்கள் அதனை கலந்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு ஏதேனும் அலர்ஜி ஏற்படுகின்றதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கான இன்ஸ்டன்ட் அரசி நட்ஸ் கஞ்சி
Ingredients
- அரிசி – 1 கப்
- நிலக்கடலை – கால் கப்
- பாதாம்-2-3
- பிஸ்தா-2-3
- முந்திரிப்பருப்பு -2-3.
Notes
- கடாயினை மிதமான தீயில் வைத்து மேலே சொன்ன பருப்புகளை எல்லாம் லேசாக பொன்னிறமாகும் வரை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து எடுக்கவும்.
- ஒரு அகலமான தட்டில் அவற்றை ஆறவிடவும்.
- ஜாரில் போட்டு நன்கு பவுடராக ஆகும்வரை அரைத்து எடுக்கவும்.
- பவுடரை காற்றுப்புகாத டப்பாவில் வைத்து அடைக்கவும்.
- ஒரு பவுலில் 3 டேபிள் ஸ்பூன் பவுடருடன் நன்கு கொதிக்க வைத்த வெந்நீரை ஊற்றி கட்டிகளில்லாமல் நன்கு கலக்கவும்.
- சில நிமிடங்களுக்கு ஓரமாக மூடி வைக்கவும்.
- குழந்தைகளுக்கான அரிசி நட்ஸ் கஞ்சி ரெடி
Leave a Reply