Nungu in Tamil:கோடை காலம் வந்தால்தான் நுங்கு என்ற வார்த்தை நம் நினைவிற்கு வரும். என்னதான் விதவிதமான குளிர்பானங்கள் தென்பட்டாலும் நம் பாரம்பரிய பானங்களான இளநீர்,பதநீர்,நுங்கு போன்றவை மக்களின் கவனங்களை தற்பொழுது ஈர்த்து வருகின்றன.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அதற்கு காரணம் நம் பாரம்பரிய பானங்களின் மருத்துவ குணங்களை மக்கள் தற்பொழுது உணர ஆரம்பித்திருக்கின்றனர். அதில் பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளும் விரும்பி உட்கொள்வது நுங்கு.
நுங்கின் தோலில் சத்துக்கள் அதிகம் இருந்தாலும் தோலை நீக்கிவிட்டு சதைப்பகுதியை உண்பதற்கு தான் அனைவரும் விரும்புவோம். ஆனால் துவர்ப்பாக இருக்கும் நுங்கின் தோலில் தான் பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் பி மற்றும் சி போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.எனவே பெரியவர்கள் நுங்கினை உட்கொள்ளும் போது அதனை தோலோடு சேர்த்து உட்கொள்வது சிறந்தது.
ஆனால் குழந்தைகளுக்கு அப்படி அல்ல தோலினை நீக்கி ஜெல்லி போன்று இருக்கும் சதை பகுதியினை கொடுத்தால் விரும்பி உண்பர். இப்பொழுது நுங்கின் சதைப்பகுதியை வைத்து வித்தியாசமாக குழந்தைகளுக்கு பாயாசம் எப்படி செய்து தரலாம் என்பதை காணலாம்.
வழக்கமாக ஒரே மாதிரியாக தருவதைக் காட்டிலும் இப்படி வித்தியாசமாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பர்.
அதற்குமுன் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்ட நுங்கின் நன்மைகளை காணலாம்.
Nungu in Tamil:
Nungu benefits in Tamil:
நுங்கின் மருத்துவ குணங்கள்
- நுங்கு உட்கொள்வதன் கோடைகாலத்தில் நம் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளும்.
- உடல் வெப்பத்தை தணிக்க வல்லது.
- வயிற்றுப்புண்ணுக்கு நல்ல மருந்தாக அமைகின்றது.
- கோடை காலத்தில் ஏற்படும் அம்மை போன்ற நோய்களை தடுத்து உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றது.
- குழந்தைகள் இதனை உட்கொள்ளும்போது வயிற்றில் நல்ல பசியைத் தூண்டும்.
- மலச்சிக்கல் வராமல் தடுக்கக்கூடியது.
- கோடைகாலத்தில் ஏற்படும் நாவறட்சியை தவிர்த்து தாகத்தை தணிக்க வல்லது.
- நுங்கில் உள்ள ரசாயன பொருட்கள் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கக்கூடியது.
- அல்சர்,இரைப்பை மற்றும் குடல் புண் உள்ளவர்களுக்கு நுங்கு ஒரு சிறந்த மருந்து.
- கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி ,நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டல் ஏற்படாமல் தடுக்கும் மருத்துவ குணம் வாய்ந்தது நுங்கு.
- நுங்கின் தோலினை வேர்க்குரு உள்ள இடங்களில் தடவினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
- உடலிலுள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது.
- ரத்தசோகை வராமல் தடுக்க வல்லது.
- நுங்கு -4
- பால் -2 கப்
- வெல்லத்தூள் – 3 டேபிள்.ஸ்பூன்
- டிரை ஃப்ரூட்ஸ் பவுடர் -2 டீஸ்பூன்
- குங்குமப்பூ -இம்மியளவு.
செய்முறை
1.குங்குமப்பூவை பாலில் சேர்த்து மிதமான தீயில் பால் பாதியாக வற்றும் அளவிற்கு சூடாக்கவும்.
2.அடுப்பினை அணைத்து பாலினை ஆறவைக்கவும்.
3.ஆற வைத்த பாலுடன் வெல்லத்தூள் மற்றும் டிரை ஃப்ரூட்ஸ் பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.
4.நுங்கின் தோலை நீக்கி பொடியாக நறுக்கியோ அல்லது மிக்ஸியில் அரைத்தோ பாலுடன் சேர்க்கவும்.
5.நன்கு கலக்கவும்.
தேவைப்பட்டால் சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறலாம் அல்லது இதமாகவும் பரிமாறலாம்.
பாரம்பரிய உணவுகளின் நன்மைகளை குழந்தைகளுக்கு புரிய வைத்து அடுத்த சந்ததியினருக்கு பாரம்பரிய உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வது பெற்றோராகிய நமது கடமை.
குழந்தைகளுக்கு உணவுப்பொருட்களை ஒரே மாதிரியாக கொடுப்பதைக் காட்டிலும் இப்படி சற்று வித்தியாசமாக செய்து கொடுத்தால் உணவின் மீதான நாட்டமும் அவர்களுக்கு அதிகரிக்கும்.
ஒருமுறை உணவினை உட்கொள்ளும் குழந்தைகள் திரும்ப திரும்ப நம்மிடம் வாங்கி ஆர்வமாக உட்கொள்ள ஆரம்பிப்பார்கள். அதுதானே நமக்கும் வேண்டும். இந்த ரெசிபியை குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள் உங்கள் குழந்தைகள் திரும்பவும் நிச்சயம் கேட்பார்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
நுங்கினை எப்பொழுது குழந்தைகளுக்கு கொடுக்கலாம்?
குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முடிந்தவுடன் நுங்கினை கொடுக்க ஆரம்பிக்கலாம்.
நுங்கு உடல் நலத்திற்கு ஆரோக்கியமானதா ?
நுங்கில் பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் பி மற்றும் சி போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.மேலும் பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியது.
நுங்கினை தினமும் சாப்பிடலாமா?
உங்கள் உடல் நலத்திற்கு ஒத்துகொள்ளுமென்றால் தினமும் சாப்பிடலாம்.வெயில் காலத்தில் தினமும் உட்கொள்ளுவது உடல் நலத்திற்கு நல்லது என்றாலும் அளவோடு உட்கொள்ளுவதே சிறந்தது.
குழந்தைகளுக்கு நுங்கினை எவ்வாறு கொடுக்க வேண்டும்?
ஆறு மாத குழந்தைகளுக்கு நன்கு அரைத்து கொடுக்க வேண்டும்.எட்டு மாத குழந்தைகளுக்கு சிறு சிறு துண்டுகளாக கொடுக்கலாம்.ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைக்கு நுங்கு பாயாசம் போன்ற போன்று வித விதமான ரெஸிபிகளாக கொடுக்கலாம்.
கோடைக்கேற்ற நுங்கு பாயாசம்
Ingredients
- நுங்கு-4
- பால் -2 கப்
- வெல்லத்தூள் - 3 டேபிள்.ஸ்பூன்
- டிரை ஃப்ரூட்ஸ் பவுடர் -2 டீஸ்பூன்
- குங்குமப்பூ -இம்மியளவு
Instructions
- குங்குமப்பூவைபாலில் சேர்த்து மிதமான தீயில் பால் பாதியாக வற்றும் அளவிற்கு சூடாக்கவும்.
- அடுப்பினைஅணைத்து பாலினை ஆறவைக்கவும்.
- ஆற வைத்தபாலுடன் வெல்லத்தூள் மற்றும் டிரை ஃப்ரூட்ஸ்பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.
- நுங்கின்தோலை நீக்கி பொடியாக நறுக்கியோ அல்லது மிக்ஸியில் அரைத்தோ பாலுடன் சேர்க்கவும்.
- நன்குகலக்கவும்
கோடைக்கேற்ற நுங்கு பாயாசம்
Ingredients
- நுங்கு-4
- பால் -2 கப்
- வெல்லத்தூள் - 3 டேபிள்.ஸ்பூன்
- டிரை ஃப்ரூட்ஸ் பவுடர் -2 டீஸ்பூன்
- குங்குமப்பூ -இம்மியளவு
Instructions
- குங்குமப்பூவைபாலில் சேர்த்து மிதமான தீயில் பால் பாதியாக வற்றும் அளவிற்கு சூடாக்கவும்.
- அடுப்பினைஅணைத்து பாலினை ஆறவைக்கவும்.
- ஆற வைத்தபாலுடன் வெல்லத்தூள் மற்றும் டிரை ஃப்ரூட்ஸ்பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.
- நுங்கின்தோலை நீக்கி பொடியாக நறுக்கியோ அல்லது மிக்ஸியில் அரைத்தோ பாலுடன் சேர்க்கவும்.
- நன்குகலக்கவும்
Leave a Reply