Dates Badam Aval Payasam: குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் அதேசமயம் உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கச் செய்யும் ரெசிபிதான் இந்த டேட்ஸ் பாதாம் அவல் பாயாசம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
பேரிச்சையானது குழந்தைகளுக்கு தே வையான இரும்புச் சத்தினை உள்ளடக்கியது.ஆனால் அதை குழந்தைகளுக்கு தினமும் கொடுக்கும் பொழுது சில குழந்தைகள் சாப்பிட அடம் பிடிப்பர். குழந்தைகளுக்கு பிடித்த ஆரோக்கியமான பாதாமுடன் அவலும் சேர்த்து தரும்பொழுது கண்டிப்பாக அவர்களுக்கு பிடிக்கும். டேட்ஸ்,அவல் மற்றும் பாதாம் ஆகியவை வீட்டிலேயே இருக்கும் பொருட்கள் என்பதால் நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து முடிக்கலாம்.
பேரிச்சையில் இயற்கையாகவே இரும்புச்சத்துகளும்,ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் நிறைந்திருப்பதால் ரத்த ஓட்டத்தை சீராக்க வல்லது. டிரை புரூட்ஸ் எனப்படும் உலர் பழங்களில் புரோட்டீன்கள்,வைட்டமின்கள் நிறைந்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது. மேலும் அவலில் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்திருப்பதால் குழந்தைகளுக்கு தேவையான எனர்ஜியை அளிக்கவல்லது.
நார்ச்சத்துகள் நிறைந்த இந்த ரெசிபியை குழந்தைகளுக்கு தரும்பொழுது ஆரோக்கியமானதாக மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு வயிறு நிரம்பிய திருப்தியை தரும். குழந்தைகளுக்கு தரும் போது முதலில் சிறியதாக கொடுத்த பின்பு படிப்படியாக அதிகரிக்கலாம். குழந்தைகளுக்கு ஒரு வயது வரை மாட்டுப்பால் தரக் கூடாது என்பதால் பாலுக்கு பதிலாக தண்ணீர் சேர்த்து இந்த ரெசிபியை செய்யலாம்.
ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பாலில் சேர்த்து பாயாசம் தயாரிக்கலாம்.குழந்தைகள் மட்டுமல்லாமல் பண்டிகை காலங்களில் பெரியோர்களும் எளிதாக செய்து ருசித்து சாப்பிட கூடிய ரெசிபி தான் இந்த டேட்ஸ் பாதாம் அவல் பாயாசம்.

டேட்ஸ் பாதாம் அவல் பாயாசம்
தேவையானவை
- டேட்ஸ் நறுக்கியது -3
- பாதாம் -3
- உலர் திராட்சை- 1 டே ஸ்பூன்
- அவல் – ¼ கப்
- பால் – ½ கப்
Dates Badam Aval Payasam:
செய்முறை
1.ஒரு பவுலில் பாதாம்,டேட்ஸ் மற்றும் உலர் திராட்சையை எடுத்துக்கொள்ளவும்.
2.தண்ணீர் சேர்த்து ஒரு நாள் இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
3.அவலை நன்றாக கழுவி 10 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
4.எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும்.
5.ஒரு பானில் அரைத்த கலவையுடன் அரை கப் பால் சேர்த்து நன்றாக கிளறவும்.
குறிப்பு : 8 மாத குழந்தைகளுக்கு பாலிற்கு பதிலாக தண்ணீர் சேர்க்கவும்.
6.கலவையை மிதமான தீயில் வைத்து 5 முதல் 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
7.இதமாக பரிமாறவும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
டேட்ஸ் பாதாம் அவல் பாயாசம்
Ingredients
- 3 டேட்ஸ்நறுக்கியது -3
- 3 பாதாம்
- 1 டே.ஸ்பூன் உலர்திராட்சை
- ¼ கப் அவல்
- ½ கப் பால்
Instructions
- செய்முறை 1. ஒருபவுலில் பாதாம்,டேட்ஸ் மற்றும் உலர் திராட்சையை எடுத்துக்கொள்ளவும்.2. தண்ணீர்சேர்த்து ஒரு நாள் இரவுமுழுவதும் ஊறவைக்கவும்.3. அவலைநன்றாக கழுவி 10 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.4. எல்லாவற்றையும்மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும்.5. ஒருபானில் அரைத்த கலவையுடன் அரை கப் பால்சேர்த்து நன்றாக கிளறவும். குறிப்பு : 8 மாத குழந்தைகளுக்கு பாலிற்குபதிலாக தண்ணீர் சேர்க்கவும்.6. கலவையைமிதமான தீயில் வைத்து 5 முதல் 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும். 7. இதமாகபரிமாறவும்.
Leave a Reply