ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
உங்கள் குழந்தைக்கு என்ன உணவைக் கொடுப்பது, குழந்தையை எப்படிச் சாப்பிட வைப்பது என்பது குறித்தும் ஒரு முடிவுக்கு நிச்சயம் வந்திருப்பீர்கள்… இந்தக் கால கட்டத்தில் உங்கள் குழந்தைக்கு பல் முளைப்பது, சாப்பிட அடம் பிடிப்பது போன்ற காரணங்களால் உணவு நேரம் என்பது அம்மாக்களுக்கும் குழந்தைகளுக்கும் கூட போரடிக்ககூடிய ஒன்றாக மாறி இருக்கும்.
அதனால், இனி வரும் நாட்களில் குழந்தையை ஆர்வமாக சாப்பிட வைக்க என்ன செய்வது என்பது குறித்தும் அவர்களின் உணவு நேரத்தை மகிழ்ச்சியானதாக மாற்ற என்ன செய்வது என்பது குறித்தும் பார்க்கலாம்…
உணவில் வித்தியாசம் காட்டுங்கள் :
குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவில் வித்தியாசம் காட்டுங்கள். ஒரே சுவையை தராமல் பல்வேறு சுவைகளில் அவர்களுக்கு உணவு கொடுங்கள். ஒரு வாரத்தில் ஒரே வகையான காய்கறி மற்றும் பழங்களைக் கொடுக்க வேண்டாம். உங்கள் குழந்தை ஒரு உணவை நன்றாக சாப்பிடுகிறது என்றால் அதுதான் அதற்கு பிடித்த உணவு என நினைத்து தினமும் அதையே நாம் கொடுப்போம். இதுதான் நாம் செய்யும் மிகப்பெரிய தவறு. ஒரே வகையான உணவை நீங்கள் உங்கள் குழந்தைக்குக் கொடுப்பதால், அது போரடிக்கும் உணவாக மாறிப்போய் அனைத்து உணவுகளையும் குழந்தைகள் தவிர்க்க ஆரம்பித்து விடும்.
முறையான இடைவெளியில் உணவைக் கொடுங்கள் :
குறைவான உணவாக இருந்தாலும் அதனை இடைவெளி விட்டு கொடுத்து வாருங்கள். ஒரே நேரத்தில் அனைத்து உணவையும் சாப்பிட வேண்டும் என நினைக்காதீர்கள். ஒரு நாளைக்கு விதவிதமான உணவுகளை இடைவெளி விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுங்கள். இதன் மூலம் குழந்தை நீங்கள் நினைக்கும் உணவைச் சாப்பிடுவதோடு விதவிதமான உணவுகளில்இருந்து அனைத்து சத்துகளும் குழந்தைக்குச் சென்றடையும்.
கூழ் வகைகள் கொடுப்பதை நிறுத்துங்கள் :
எல்லா உணவுகளையும் கூழ் போல தருவதை நிறுத்த வேண்டிய நேரம் இது. இப்போது குழந்தைக்குப் பற்கள் முளைத்திருக்கும். மேலும், புதிதாகப் பற்கள் முளைக்க அவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு இருக்கும் நேரம் என்பதால் அவர்கள் வாயில் மெல்லும் வகையிலான உணவுகளைச் சாப்பிட வேண்டும். எல்லா உணவுகளையும் நீங்கள் கூழ் போல கொடுத்தால் அவர்களால் வாயில் உணவை மென்று சாப்பிடுவதில் சிரமம் ஏற்படும். எனவே உணவைக் கொஞ்சம் மசித்த வடிவில் தரலாம்; ஆனால், கூழாக மாற்றி விடவேண்டாம்.
சாப்பிடும் நேரத்தை மகிழ்ச்சியான நேரமாக மாற்றுங்கள் :
குழந்தைகள் சாப்பிடும் நேரத்தை கதை சொல்லும் நேரமாக மாற்றுங்கள். முயல், ஆமை கதைகள் கூறிக் கொண்டும், விமானம் பறக்கும் கதைகளை சொல்லியும் குழந்தைக்கு உணவைக் கொடுங்கள். சில குழந்தைகளை உயரமான சேர்களில் உட்கார வைத்து உணவை கொடுக்கும்போது அவர்கள் பயத்தால் அழுது கொண்டே உணவைச் சாப்பிட மறுப்பார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு தோட்டம், வீட்டின் அறைகள், அவர்கள் விளையாடும் இடம், பால்கனியில் உட்கார வைத்தும், அக்கம் பக்கத்தில் உள்ள இடங்களுக்கு அழைத்துச் சென்று விளையாடிக் கொண்டு உணவைக் கொடுங்கள்.
உணவில் மாற்றங்கள் அவசியம் :
பல் வளர்ச்சி ஏற்படும் காலகட்டம் இது. அதனால் பழக்கூழ்களை அப்படியே கொடுக்காமல் அதனை உறைய வைத்து கட்டிகளாகவோ அல்லது குச்சிகள் போன்ற தோற்றத்திலோ கொடுக்கலாம். மேலும் தாய்ப்பாலையும் உறைய வைத்து குச்சிகள் போன்ற வடிவத்தில் தரலாம். இதனால், குழந்தைகள் அதனை எளிதாக சாப்பிட முடியும்.
இதையெல்லாம் நீங்கள் பின்பற்றினால் குழந்தைக்கு உணவைக் கொடுப்பதில் உள்ள பிரச்னைகளைச் சரி செய்துவிடலாம். இதன்பிறகு நீங்கள் உணவு அட்டவணையைப் பின்பற்றலாம். 9-வது மாத உணவு அட்டவணை என்பது எளிதான ஒன்றுதான். 8-வது மாத உணவு அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொடுத்திருக்கிறோம்.
குழந்தையின் 8-வது மாதத்திற்கான உணவு அட்டவணையைப் பார்க்க கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்தால் நீங்கள் அதனை முழுமையாக தெரிந்துகொள்ள முடியும்.
குழந்தைகளுக்கு உணவைக் கொடுக்கும்போது என்னென்ன பொருட்கள் தேவை என்பதை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்…
எந்த ஒரு புது உணவைக் கொடுப்பதாக இருந்தாலும் 3 நாள் விதிமுறையைப் பின்பற்றுங்கள்…
9 மாத குழந்தைக்கான உணவு அட்டவணை :
முதல் வாரம் :
நாள் | காலை உணவு | காலை நேர ஸ்நாக்ஸ் | மதிய உணவு | மாலை நேர ஸ்நாக்ஸ் | இரவு உணவு |
திங்கள் | வேகவைத்த தோசை | காய்கறி சூப் | சாதம் | ஆப்பிள் துண்டுகள் | வீட்டில் தயாரித்த சத்து மாவு |
செவ்வாய் | ரவை கீர் | வேகவைத்த முட்டையின் மஞ்சள் கரு/ நறுக்கிய காய்கறி துண்டுகள் | பொங்கல் | திராட்சை ஜூஸ் | ஓட்ஸ் கஞ்சி |
புதன் | இட்லி | ஆப்பிள் ஜூஸ் | கேரட் சாதம் | நறுக்கிய கேரட் துண்டுகள் | கோதுமை பாதாம் கஞ்சி |
வியாழன் | ஓட்ஸ் | பான்கேக் | பிரெட் ஸ்டிக் | நெய் சாதம் | மசித்த சப்போட்டா பழம் |
வெள்ளி | சத்து மாவு கஞ்சி | பரங்கிக்காய் | ரவா ஸ்டிக் | ப்ளேவர்டு பொங்கல் | வாழைப்பழ ஸ்நாக்ஸ் |
சனி | கோதுமை கீர் | யோகர்ட் | காய்கறி சாதம் | வாழைப்பழம் | பொங்கல் |
ஞாயிறு | வாழைப்பழ பான் கேக் | வேகவைத்த முட்டையின் மஞ்சள் கரு/ நறுக்கிய பழத் துண்டுகள் | தக்காளி சாதம் | சர்க்கரைவள்ளிக் கிழங்கு துண்டுகள் | ப்ரெளன் ரைஸ் கஞ்சி |
இரண்டாம் வாரம் :
நாள் | காலை உணவு | காலை நேர ஸ்நாக்ஸ் | மதிய உணவு | மாலை நேர ஸ்நாக்ஸ் | இரவு உணவு |
திங்கள் | கேழ்வரகு கஞ்சி | சீஸ் | பரங்கிக்காய் சாதம் | பப்பாளி பழத் துண்டுகள் | கோதுமை கஞ்சி |
செவ்வாய் | ஆப்பிள் பான் கேக் | முட்டையின் மஞ்சள் கரு/பிரெட் துண்டுகள் | சர்க்கரைப் பொங்கல் | பீட்ரூட் துண்டுகள் | சாதம் |
புதன் | ஓட்ஸ் கஞ்சி | ஆப்பிள் ஸ்மூத்தி | மிளகு நெய் சாதம் | பிரெட் துண்டுகள் | வேகவைத்த தோசை |
வியாழன் | வீட்டில் தயாரித்த அரிசி கஞ்சி | சிக்கன் அல்லது காய்கறி சூப் | கீரை சாதம் | நறுக்கிய பேரிக்காய் துண்டுகள் | வீட்டில் தயாரித்த சத்து மாவு கஞ்சி |
வெள்ளி | பான் கேக் | சீஸ் துண்டுகள் | மசாலா பொங்கல் | சேப்பக்கிழங்கு துண்டுகள் | மசித்த ரொட்டி வகை |
சனி | ஓட்ஸ் வாழைப்பழ கஞ்சி | யோகர்ட் | உருளைக் கிழங்கு சாதம் | கிவி பழ ஜூஸ் | கோதுமை கஞ்சி |
ஞாயிறு | சோயா பனீர் உணவு | வேகவைத்த சிக்கன் அல்லது நறுக்கிய காய்கறி துண்டுகள் | காய்கறி சாதம் | பிரெட் துண்டுகள் | இட்லி |
மூன்றாம் வாரம் :
நாள் | காலை உணவு | காலை நேர ஸ்நாக்ஸ் | மதிய உணவு | மாலை நேர ஸ்நாக்ஸ் | இரவு உணவு |
திங்கள் | ராகி ஷீரா | கேரட் பால்ஸ் | சாதம் | பிரெட் துண்டுகள் | பார்லி கஞ்சி |
செவ்வாய் | வீட்டில் தயாரித்த சத்து மாவு கஞ்சி | மிளகு கலந்த முட்டை அல்லது ஃப்ரைடு ஆப்பிள் | பாலக்கீரை சாதம் | தக்காளி ஜூஸ் | வேக வைத்த தோசை |
புதன் | கோதுமை பான் கேக் | பேக் செய்யப்பட்ட உருளைக் கிழங்கு | முட்டை மஞ்சள் கரு சாதம் | அரிசி ஸ்நாக் பார் | பல மாவுகளில் செய்யப்பட்ட ரொட்டி |
வியாழன் | ஓட்ஸ் கஞ்சி | வாழைப்பழத் துண்டுகள் | நெய் சாதம் | தக்காளி ஜூஸ் | ரவை கஞ்சி |
வெள்ளி | கேழ்வரகு தோசை | சிக்கன் அல்லது காய்கறி சூப் | காய்கறி சாதம் | ஆரஞ்ச் பழத் துண்டுகள் | ஜவ்வரிசி கீர் |
சனி | மினி இட்லி | வாழைப்பழ யோகர்ட் | ப்ளேவர்டு பொங்கல் | காலிஃப்ளவர் ஃப்ரை | ஓட்ஸ் கஞ்சி |
ஞாயிறு | பான் கேக் | சீஸ் | சுரைக்காய் சாதம் | கேழ்வரகு லட்டு | சாதம் |
நான்காம் வாரம் :
நாள் | காலை உணவு | காலை நேர ஸ்நாக்ஸ் | மதிய உணவு | மாலை நேர ஸ்நாக்ஸ் | இரவு உணவு |
திங்கள் | பாஸ்தா | நறுக்கிய பழத் துண்டுகள் | தக்காளி சாதம் | சோளம் பச்சைப்பட்டாணி துண்டுகள் | கேரட் பான் கேக் |
செவ்வாய் | காய்கறி தோசை | வாழைப்பழ ஸ்மூத்தி | மசாலா பொங்கல் | பாலக் கீரை சூப் | ஓட்ஸ் கஞ்சி |
புதன் | கேழ்வரகு கேக் | சீஸ் | பரங்கிக்காய் சாதம் | பட்டர் ஃப்ரூட் மசித்தது | வீட்டில் தயாரித்த அரிசி கஞ்சி |
வியாழன் | வாழைப்பழ பான் கேக் | கலக்கிய முட்டை அல்லது பரங்கிக்காய் பால்ஸ் | சிக்கன் அல்லது சாதாரண சாதம் | பழங்கள் அல்லது பழச்சாறு | காய்கறி வேக வைத்த நீர் |
வெள்ளி | வீட்டில் தயாரித்த சத்துமாவு கஞ்சி | பேரிக்காய் / யோகர்ட் | சுரைக்காய் சாதம் | பனீர் கீர் | கோதுமை பாதாம் கஞ்சி |
சனி | பழங்கள் மற்றும் ஓட்ஸ் கஞ்சி | சிக்கன் ஃப்ரை அல்லது காய்கறி துண்டுகள் | சர்க்கரைப் பொங்கல் | ஆப்பிள் ஸ்மூத்தி | மசாலா தோசை |
ஞாயிறு | முட்டை சேர்க்காத பான் கேக் | பீட்ரூட் அல்வா | காய்கறி சாதம் | சீஸ் | காய்கறி துண்டுகள் |
உங்கள் குழந்தைக்கு 8 மற்றும் 9 மாதங்களுக்கான உணவு அட்டவணை தேவையெனில் இங்கே கிளிக் செய்யுங்கள்.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து உணவிலும் நீங்கள் உலர் தானிய பொடியை சேர்த்து கொடுத்தால் சத்துகள் கிடைக்கும். சுவையும் அதிகரிக்கும்.
உங்கள் குழந்தையின் உணவில் எப்போது மசாலா பொருட்களைச் சேர்க்கலாம் என்பது உள்ளிட்ட பயனுள்ள தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.
எங்கள் பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் எங்களை பேஸ்புக், கூகுள் பிளஸ், ட்விட்டர், பின்ட்ரஸ்ட் ஆகியவற்றில் பின் தொடருங்கள்…
Leave a Reply