Vegetable Idli : நம் தமிழகத்தை பொறுத்தவரை காலை நேர உணவாக இருந்தாலும், இரவு நேர உணவாக இருந்தாலும் சட்டென்று நினைவுக்கு வருவது இட்லி மற்றும் தோசை தான். செய்வதற்கும் எளிது மற்றும் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது என்பதால் இட்லியை உலக அளவில் ஆரோக்கியமான மற்றும் எளிதான உணவாக தேர்ந்தெடுத்துள்ளனர். நம் வீடுகளிலும் பொதுவாக குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முடிந்தவுடன் முதலில் கொடுக்க ஆரம்பிக்கும் உணவு இட்லியாகத்தான் இருக்கும் குழந்தைகளுக்கு செரிமான பிரச்சனை வராமல் எளிதில் ஜீரணமாக கூடிய உணவு என்பதால் பெரியோர்கள் ஆரம்ப காலகட்ட முதலே இட்லியை கொடுத்து பழக்குவார்கள்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
சிறுவயதில் இட்லியை சாப்பிட குழந்தைகள், சற்று வளர்ந்ததும் இட்லி சாப்பிட்டு சலித்து போய் இட்லி வேண்டாம் என்று சொல்பவர்களே அதிகம் .அப்படி என்றால் குழந்தைகளுக்கு இதைத் தவிர நாம் வேறு என்ன செய்து கொடுப்பது என்றும் கேட்கும் அம்மாக்களை நான் நிறைய பார்த்திருக்கின்றேன். இட்லி, தோசையை தவிர்த்து வேறு ஏதேனும் டிபன் செய்வது கடினமாக இருக்கும் நேரத்தில் இட்லியை குழந்தைகளுக்கு வித்தியாசமாக எப்படி செய்து தரலாம் என்று பார்க்கலாம். அதற்கான ரெசிபி தான் இந்த கலர்ஃபுல் வெஜிடபிள் இட்லி. எந்த விதமான உணவாக இருந்தாலும் பார்ப்பதற்கு வண்ணமயமாக இருந்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்
மேலும் இதில் தயாரிப்பதற்கு மிகவும் எளிது. வீட்டில் ஏற்கனவே அரைத்து வைத்திருந்த இட்லி மாவு ரெடியாக இருந்தால் போதும் இதை ஒரே 10 நிமிடத்தில் எளிதாக செய்து முடித்துக் கொள்ளலாம். மேலும் இட்லியில் அரிசியும், உளுந்தும் கலந்திருப்பதால் எப்பொழுதுமே குழந்தைகளுக்கு நன்மை அளிக்கும் உணவாகும்.
Vegetable Idli
Vegetable Idli
அரிசி மற்றும் உளுந்து உண்பதால் ஏற்படும் நன்மைகள்
- உளுந்தில் இயற்கையாகவே கால்சியம் சத்து அதிகம் என்பதால் குழந்தைகளின் எலும்புகளை பலப்படுத்துவதில் உளுந்து முக்கிய பங்கு வகிக்கின்றது.
- அரிசி, உளுந்து ஆகிய இரண்டுமே எளிதில் செரிமானமாக கூடிய உணவு என்பதால் குழந்தைகளுக்கு உணவினை எளிதில் ஜீரணமாக செய்யும்.
- அரிசியில் இயற்கையாகவே வைட்டமின் பி, மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம். பட்டை தீட்டப்பட்ட அரிசியை விட, கைக்குத்தல் அரிசியானது மேலும் ஆரோக்கியமானது.
- அரிசியின் சுவை எப்பொழுதுமே அனைவரும் விரும்பும் வண்ணம் இருப்பதால் இதனை வைத்து எந்த உணவு சமைத்தாலும் நாவிற்கு இதமாக இருக்கும்.
- அரிசி உணவினை கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு எந்த விதமான அலர்ஜியும் ஏற்படாது.
- அவசர காலத்திற்கு குழந்தைகளுக்கு அரிசியை வைத்து விதவிதமான உணவுகள் செய்து கொடுக்கலாம் என்பதால் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அரிசி உணவு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
Vegetable Idli:
- இட்லி மாவு- 4 கப்
- நறுக்கிய வெங்காயம்- 1 கப்
- குடைமிளகாய்- ஒன்றரை டே.ஸ்பூன்
- நெய்- தேவையான அளவு
- கடுகு- ஒரு சிட்டிகை
- துருவிய கேரட்- 2 டே.ஸ்பூன்
- மஞ்சள் குடைமிளகாய்- ஒன்றரை டே.ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
Vegetable Idli
செய்முறை
- உளுந்து மற்றும் அரிசியை அரைத்து புளிக்க வைத்து இட்லி மாவை ரெடியாக தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
- கடாயில், நெய் ஊற்றி சூடானதும் கடுகை சேர்த்து தாளிக்கவும்.
- தயார் செய்து வைத்திருந்த அனைத்து காய்கறிகளையும் சேர்க்கவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளவும்.
- காய்கறிகளை பாதி அளவு வதக்கினால் போதும். இட்லியுடன் சேர்த்து நாம் வேகவைப்பதால், நன்கு வதக்க தேவையில்லை.
- வதக்கிய காய்கறிகளை ஆற வைத்து இட்லி மாவுடன் கலக்கவும்.
- எப்பொழுது போல் இட்லி சட்டியில் ஊற்றி இட்லிகளை வேக வைக்கலாம்.
இந்த ரெசிபியில் காய்கறிகள் சேர்த்துள்ளதால், குழந்தைகளுக்கு ஒரு வயதிற்கு மேல் கொடுக்க ஆரம்பிக்கலாம். இது தவிர உங்கள் குழந்தைகளுக்கு விருப்பமான காய்கறிகளையும் நீங்கள் சேர்த்து சமைக்கலாம். இந்த ரெசிபியானது செய்வதற்கும் மிக எளிது மேலும் ஆரோக்கியமான காய்கறிகளையும் குழந்தைகளுக்கு கொடுத்த திருப்தி நமக்கு ஏற்படும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை அறிய 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Vegetable Idli
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
குழந்தைகளுக்கு இட்லியுடன் எதனை சேர்த்து கொடுக்கலாம்?
குழந்தைகளுக்கு ஏழு மாதத்தில் இருந்தே இட்லி தாராளமாக கொடுக்கலாம். இட்லியுடன் தயிர், பருப்பு சூப் மற்றும் உப்பு மற்றும் வத்தல் சேர்க்காத சட்டியுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு இட்லி ஆரோக்கியமானதா?
இயற்கையாகவே அரிசி மற்றும் உளுந்து இரண்டுமே குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது என்பதால் இட்லி தாராளமாக கொடுக்கலாம். மேலும் இதில் காய்கறிகளும் சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கு தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். ஒரு வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும்பொழுது காய்கறி சேர்க்காமல் நாம் வீட்டில் எப்பொழுதும் செய்வது போல செய்து கொடுக்கலாம்.
இட்லி குழந்தைகளுக்கு செரிமானம் ஆகுமா?
இட்லி மாவினை புளிக்க வைத்து, நாம் ஆவியில் வேகவைத்து கொடுப்பதால் எளிதில் செரிமானம் ஆவதோடு மட்டுமல்லாமல் மலச்சிக்கல் பிரச்சனையும் குழந்தைகளுக்கு ஏற்படாது.
கலர்ஃபுல் வெஜிடபிள் இட்லி
Ingredients
- இட்லிமாவு- 4 கப்
- நறுக்கியவெங்காயம்- 1 கப்
- குடைமிளகாய்-ஒன்றரை டே.ஸ்பூன்
- நெய்-தேவையான அளவு
- கடுகு-ஒரு சிட்டிகை
- துருவியகேரட்- 2 டே.ஸ்பூன்
- மஞ்சள்குடைமிளகாய்- ஒன்றரை டே.ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்-தேவையான அளவு
Notes
- உளுந்து மற்றும் அரிசியை அரைத்து புளிக்க வைத்து இட்லி மாவை ரெடியாக தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
- கடாயில், நெய் ஊற்றி சூடானதும் கடுகை சேர்த்து தாளிக்கவும்.
- தயார் செய்து வைத்திருந்த அனைத்து காய்கறிகளையும் சேர்க்கவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளவும்.
- காய்கறிகளை பாதி அளவு வதக்கினால் போதும். இட்லியுடன் சேர்த்து நாம் வேகவைப்பதால், நன்கு வதக்க தேவையில்லை.
- வதக்கிய காய்கறிகளை ஆற வைத்து இட்லி மாவுடன் கலக்கவும்.
- எப்பொழுது போல் இட்லி சட்டியில் ஊற்றி இட்லிகளை வேக வைக்கலாம்.
Leave a Reply