Amla Juice in Tamil: வெயில் காலம் இப்பொழுது தனது உக்கிரத்தை காமிக்க ஆரம்பித்து விட்டது. அக்னி நட்சத்திரம் வருவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதைவிட அதிகமாக இருக்கின்றது என்று பலரும் சொல்லி நாம் கேட்டு வருகின்றோம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அடிக்கும் வெயிலினை நாம் எதுவும் செய்ய முடியாது என்றாலும் கேள்விக்கேற்றவாறு நம் உடல் நலனை பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். அதைவிட முக்கியம் குழந்தைகளின் உடலை வெயில் காலத்தில் பத்திரமாக பார்த்துக் கொள்வது என்பதாகும்.
ஏனென்றால் கோடை காலத்தில் உடல் சூட்டின் காரணமாக எண்ணற்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. குளிர் காலத்தில் சளி இருமல் என்ற தொல்லை என்றால் கோடை காலத்தில் உடல் சூட்டினால் ஏற்படும் தொந்தரவு ஒருபுறம் இருக்கும்.
Amla Juice in Tamil:

எனவே அதை சமாளிக்கும் விதமாக குழந்தைகளின் உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது முக்கியமாகும். அதற்காக கடைகளில் விதவிதமாக விற்கும் பானங்களை வாங்கி கொடுப்பதை காட்டிலும் வீட்டிலேயே ஆரோக்கியமாக பானம் செய்து கொடுப்பதை சிறந்தது.
வீட்டிலேயே பழச்சாறு செய்வது நல்லது என்ற விழிப்புணர்வு தற்பொழுது அனைவருக்கும் வந்துவிட்டது. அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருக்கும் பானம் எளிமையான புதினா நெல்லிக்காய் ஜூஸ்.
ஒரு பெரிய நெல்லிக்காயில் ஆப்பிளில் இருப்பதை விட பல மடங்கு சத்துக்கள் இருக்கின்றது என ஆய்வுகள் சொல்கின்றன. அத்தகைய நெல்லிக்காய் ஜூஸினை அடிக்கடி குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் வெயில் காலத்திற்கு நல்லதாகும்.
நான் இப்போது கூறப்போகும் ரெசிபியில் நெல்லிக்காயுடன் புதினாவும் சேர்ந்திருப்பதால் குழந்தைகளுக்கு பிடித்த சுவையுடன் இருக்கும். ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் இதன் நன்மைகளை பார்க்கலாம்:
Amla Juice in Tamil:
Amla Juice in Tamil:
- நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. எனவே இதை அடிக்கடி எடுத்துக் கொண்டார் உடலில் சளி இருமல் போன்ற பிரச்சினைகள் கூட ஏற்படாது.
- நெல்லிக்காயில் நிறைந்துள்ள நார்சத்துக்கள் உடலில் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கின்றன.
- நெல்லிக்காயில் ஆன்டி ஆக்ஸிடெண்ட் இவை ஆரோக்கியமான சருமத்திற்கும், கூந்தல் வளர்ச்சிக்கும் துணை புரிகின்றன.
- கூந்தலின் வேர்களை நன்கு பராமரித்து கூந்தல் மினுமினுப்பாக வளர உதவுகின்றது.
- மேலும் இதில் உள்ள வைட்டமின் ஏ கூர்மையான கண் பார்வைக்கு உதவுகின்றது.
- மூளை சுறுசுறுப்பாக இயங்குவதற்கும் இவை உதவுகின்றன.
- மேலும் நெல்லிக்காயில் ஆண்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் என்பதால் செல்கள் சிலை உடையாமல் தடுப்பதற்கு உதவுகின்றன.
Amla Juice in Tamil:
- நெல்லிக்காய்- 2.-3
- புதினா இலைகள்- 1 கொத்து
- தேன்- 1 டேபிள் ஸ்பூன்
- குளிர்ந்த நீர்- 1 கப்
Amla Juice in Tamil:
செய்முறை
- நெல்லிக்காயின் கொட்டைகளை நீக்கி சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.
- மிக்சியில் வெட்டிய நெல்லிக்காய், புதினா இலைகள், தேன், அரை கப் தண்ணீர் ஆகியவற்றை ஊற்றவும்.
- நன்கு அரைக்கவும்.
- வடிகட்டியில் நெல்லிக்காய் ஜூஸை மட்டும் தனியாக பிழிந்து எடுக்கவும்.
- மீதமுள்ள அரை கப் தண்ணீரை ஊற்றி பரிமாறவும்.
நெல்லிக்காய் நற்குணங்களும் புதினாவின் நற்குணங்களும் சேர்ந்து இனிப்பு சுவையும் கலந்து குழந்தைகளுக்கு பிடித்த வித்தியாசமான சுவையுடன் இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
குழந்தைகளின் சுவைக்கு ஏற்றவாறு தேவைப்பட்டால் நீங்கள் தேனை இன்னும் கொஞ்சம் ஊற்றி கொடுக்கலாம். பெரியவர்களுக்கு என்றால் தேன் இல்லாமல் அப்படியே குடிப்பது சிறந்தது.
Amla Juice in Tamil:
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Amla Juice in Tamil:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
நெல்லிக்காய் குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?
நெல்லிக்காயில் எண்ணற்ற நன்மைகள் இருப்பதால் குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம்.
புதினாவிற்கு பதிலாக கருவேப்பிலை சேர்க்கலாமா?
பெரியவர்களுக்கு என்றால் கருவேப்பிலை சேர்த்து கொடுக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு கொடுக்கும்பொழுது புதினா நல்ல சுவையினை கொடுக்கும் என்பதால் புதினா சேர்த்து செய்வதை சிறந்தது.
புதினா மற்றும் கருவேப்பிலை சேர்க்காமல் செய்யலாமா?
புதினா மற்றும் கருவேப்பிலை சேர்க்காமல் நெல்லிக்காய் மற்றும் சேர்த்து செய்யலாம்.
Leave a Reply