Carrot Cheese Omelette in Tamil : இப்பொழுதெல்லாம் மூன்று நேரம் சமைக்க வேண்டும் என்கின்ற நிலை மாறி குழந்தைகளுக்கு பிடித்தவாறு எவ்வாறு சமைக்க வேண்டும் என்று யோசிப்பதே அம்மாக்களுக்கு பெரிய சவால் ஆகிவிட்டது.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
சத்துள்ள உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று அம்மாக்கள் ஆசைப்பட்டாலும் அதை குழந்தைகள் சாப்பிட மறுக்கும் பொழுது அம்மாக்களுக்கு கவலையுடன் கோபமும் வருகின்றது.
அதற்காக நாம் அப்படியே விட்டு விட முடியாது அல்லவா? அதற்காக தான் குழந்தைங்களுக்கு அந்த உணவினை எப்படி எல்லாம் கொடுத்தால் பிடிக்குமோ அந்த மாதிரியான சுவையான ரெசிபிகளை நாம் குழந்தைகளுக்கு செய்ய சொல்லி அறிமுகப்படுத்தி வருகின்றோம்.
அந்த வகையில் இன்று நாம் பார்க்க போகும் ஸ்நாக்ஸ் ரெசிபி மினி கேரட் சீஸ் ஆம்லெட். முட்டை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு ஏற்ற ரெசிபி தான் இந்த மினி கேரட் சீஸ் ஆம்லெட்.
இதில் முட்டையின் நற்குணங்கள் மட்டுமல்லாமல் கேரட் மற்றும் சீஸ் இரண்டுமே கலந்திருப்பதால் குழந்தைகளுக்கு நன்மை அளிப்பதுடன் அவர்களின் உடல் எடை ஆரோக்கியமாக அதிகரிக்க இது உதவும். மேலும் குழந்தைகளுக்கு நாள் முழுவதும் விளையாடுவதற்கு தேவையான ஆற்றலை இந்த ரெசிபி அளிக்கும்.
Carrot Cheese Omelette in Tamil
Carrot Cheese Omelette in Tamil
இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் இதில் நிறைந்திருக்கும் நன்மைகளை பார்க்கலாம்:
கேரட்டின் நன்மைகள்:

- கேரட்டில் இயற்கையாகவே வைட்டமின் ஏ எனப்படும் சத்து உள்ளதால் இது கண் பார்வைக்கு நன்மை அளிக்கக் கூடியது.
- இதில் நிறைந்துள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது.
சருமம் மினுமினுப்பாக கேரட் உதவுகின்றது. - இதில் இயற்கையாகவே இனிப்புச் சத்து உள்ளதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
சீஸ் நன்மைகள்:

- சீசில் இயற்கையாக இருக்கும் கால்சியம் சத்து எலும்புகளுக்கு பலம் அளிக்கக்கூடியது.
- இதில் நிறைந்துள்ள நல்ல கொழுப்புகள் மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- உடல் எடை ஆரோக்கியமாக அதிகரிக்க உதவுகின்றது.
முட்டையின் நன்மைகள்:
- இது நிறைந்துள்ள புரோட்டின் குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- முட்டையில் நிறைந்துள்ள Choline எனப்படும் பொருள் குழந்தைகளை மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- சிறிதளவு சாப்பிட்டாலே குழந்தைகளுக்கு வயிறு நிரம்பிய திருப்தியை தரும்.
Carrot Cheese Omelette in Tamil
- முட்டை-1
- துருவிய கேரட்- 2 டே.பூன்
- துருவிய சீஸ்- 1 டே.ஸ்பூன்
- நெய் அல்லது பட்டர்- 1/2 டீ.ஸ்பூன்.
Carrot Cheese Omelette in Tamil
செய்முறை
- முட்டையை பவுலில் உடைத்து நன்றாக முறை வரும் அளவிற்கு கலக்கவும்.
- அதில் துருவிய கேரட் மற்றும் சீஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- ஒரு கடாயில் நெய் அல்லது பட்டர் ஊற்றி சூடாக்கவும்.
- கலக்கி வைத்த முட்டையை சிறு சிறு ஆம்லெட்டுகளாக ஊற்றவும்.
- பொன்னிறம் வரும் வரை காத்திருந்து புரட்டி போடவும்.
- மறுபுறம் வெந்தவுடன் குழந்தைகளுக்கு கொடுக்கவும்.
எட்டு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு நீங்கள் பிங்கர் புட்ஸ் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த ஆம்லெட்டுகளை சிறிது சிறிதாக வெட்டி குழந்தைகளை சாப்பிட வைக்கலாம்.
எட்டு மாத குழந்தைகளுக்கு கொடுக்கின்றீர்கள் என்றால் இதற்கு முன்னால் முட்டை கொடுத்தீர்களா என்பதை உறுதி செய்த பின்னர் மூன்று நாள் விதிமுறையை கணக்கில் கொண்டு இதனை கொடுக்கலாம்.
இதனை சிறிய குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் போன்று செய்து கொடுக்கலாம். நாம் வழக்கமாக செய்து கொடுக்கும் முட்டைக்கு பதிலாக இதனை கொடுக்கும் பொழுது குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
மேலும் இதை செய்யும் நேரமும் மிகவும் எளிது என்பதால் சற்று என்ற குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Carrot Cheese Omelette in Tamil

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1.7 மாத குழந்தைகளுக்கு இந்த ஆம்லெட்டை கொடுக்கலாமா?
உங்கள் குழந்தைகளுக்கு ஏற்கனவே நீங்கள் முட்டை கொடுத்து பழக்கப்படுத்தி இருந்தால், குழந்தைகள் அருகில் இருந்து நன்றாக மசித்து இந்த ஆம்லெட்டை கொடுக்கலாம்.
2. உப்பு சேர்க்கலாமா?
ஒரு வயதிற்கு கீழே அப்பு சேர்க்கக்கூடாது
3.சீஸ் சேர்க்காமல் செய்யலாமா?
நீங்கள் சீஸ் கொடுக்க விரும்பவில்லை என்றால் வீட்டிலேயே தயாரித்த பன்னீர் சேர்த்து குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.
மினி கேரட் சீஸ் ஆம்லெட்
Ingredients
- முட்டை-1
- துருவிய கேரட்- 2 டே.பூன்
- துருவிய சீஸ்- 1 டே.ஸ்பூன்
- நெய் அல்லது பட்டர்- 1/2 டீ.ஸ்பூன்











Leave a Reply