குழந்தைகளுக்கான மல்டிகிரெயின் புரோட்டீன் தோசை:
Adai dosai for kids in Tamil
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குட்டி குழந்தைகளுக்கு திடமாக ஊற்றிய ஃப்ரெஷ் தோசையைக் காய்கறிகள் சேர்த்த சாம்பாருடன் சேர்த்துக் கொடுத்திருப்பீர்கள். ஆனால், சில குழந்தைகள் இதை விரும்பி சாப்பிட மறுப்பார்கள். கொஞ்சம் நூடுல்ஸ், அவ்வப்போது இட்லி, கஞ்சி எனக் கொடுக்கப் பழகியிருப்பீர்கள்தானே… ஆனால் இந்த புரோட்டீன் தோசையை செய்து கொடுத்தீருப்பீர்களா… தோசையை ஆவியில் வேகவைத்து எடுப்பதுபோலவே இந்த புரோட்டீன் தோசையையும் செய்ய முடியும். நிச்சயம்… இந்த தோசை குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும். அதேசமயம் ஊட்டச்சத்துகள் நிறைந்ததாகவும் இருக்கும்.
புரோட்டின் பேக்டு மல்டி கிரெயின் தோசை அல்லது அடை என்று இதைச் சொல்லலாம். இந்த டேஸ்டி, ஹெல்தி ரெசிபியை எப்படிச் செய்வது எனப் பார்ப்போமா…
மல்டிகிரெயின் புரோட்டீன் தோசை ரெசிபி செய்ய:
- அரிசி – 100 கிராம்
- கடலப்பருப்பு – 30 கிராம்
- துவரம் பருப்பு – 30 கிராம்
- உளுந்து – 20 கிராம்
- பெருங்காயம் – ஒரு சிட்டிகை
- பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 1 டேபிள்ஸ்பூன்
- உப்பு – சுவைக்கு ஏற்ப
செய்முறை
- மேலே கொடுக்கப்பட்ட அனைத்துப் பருப்பு வகைகளையும் அரிசியையும் நன்றாகக் கழுவி, அலசி 2 மணி நேரத்துக்கு ஊற வைத்துக்கொள்ளுங்கள்.
- ஊறவைத்த பருப்பு வகைகள், அரிசி ஆகியவற்றை ஒன்றாக கலந்து மாவுப்பதம் அளவுக்கு அரைத்துக்கொள்ளவும். அதை இரண்டு மணி நேரம் வரை அப்படியே மாவைப் புளிக்க விட்டுவிடவும்.
- பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, பெருங்காயம், உப்பு ஆகியவற்றை மாவில் கலந்து கொள்ளவும். நீங்கள் விருப்பப்பட்டால் இதில் வெங்காயம், கொத்தமல்லி சேர்க்க தேவையில்லை. அப்படியே ப்ளெயினாகவும் மாவைக் கலந்து கொள்ளலாம்.
- சூடான தவாவில் சற்று தடிமனான தோசையாக, அதாவது அடை போல கெட்டியாக சுட்டுக் கொள்ளவும். ஓரங்களில் நெய் அல்லது வெண்ணெய் விட்டு இருபுறமும் பொன்னிறமாகச் சுட்டு எடுக்கலாம்.
- அவ்வளவுதான். மல்டிகிரெயின் புரோட்டீன் தோசை ரெடி.
இந்த புரோட்டீன் தோசையை இன்னும் சுவையாக, சத்துள்ளதாக மாற்ற வேண்டும் எனில் லிட்டில் மொப்பெட் சத்து மாவுப் பொடி மிக்ஸை ஒரு டேபிள்ஸ்பூன் அளவுக்கு கலந்து கொண்டு தோசை செய்தால் அந்த நாளே ஸ்பெஷல்தான்.
குழந்தைகளுக்கான சிறந்த ஊட்டச்சத்து உணவாக அமைய கூடும். இந்தத் புரோட்டீன் தோசையை சட்னி, சாம்பாருடன் தொட்டுச் சாப்பிடலாம்.
பெரிய குழந்தைகளுக்குகூட காலை உணவாகவோ, மதிய உணவுக்கோ செய்து தரலாம். இனி, தோசை மட்டும் சாப்பிட்டு போரடிக்காமல் இந்த புரோட்டீன் தோசையும் செய்து சாப்பிட கொடுங்கள்.
உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால், எங்களின் Newsletterக்கு Subscribe செய்யுங்கள்.
நிச்சயம் எங்களின் பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு எங்களை கூகுல்+, ட்விட்டர், பின்இன்ட்ரஸ்ட் போன்ற சமூக தளங்களில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்துக்கு லைக் போடுங்க.தொடர்ச்சியான அப்டேட்களைத் தெNewsletterரிந்து கொள்ளுங்கள்
Leave a Reply