apple dates smoothie:குழந்தைகளுக்கு வழக்கமான காலை உணவு கொடுத்து அவர்களுக்கு போர் அடித்து விட்டது என்று நீங்கள் நினைத்தால் இந்த ஆரோக்கியமான ஆப்பிள் பார்லி ஸ்மூத்தி ரெசிபியை நீங்கள் வீட்டில் முயற்சி செய்யலாம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
பொதுவாக காலை உணவானது குழந்தைகளுக்கு ஒரு நாள் முழுவதும் விளையாடுவதற்கு தேவையான எனெர்ஜியினை கொடுக்கவல்லது. இதற்கு முன் நாம் பல வகையான பழக்கூழ், காய்கறிக்கூழ், இட்லி மற்றும் தோசை வகைகளை பார்த்திருப்போம்.
ஆனால் கோடை காலத்துக்கு ஏற்றவாறு குழந்தைகளுக்கு சத்தான காலை உணவு நீங்கள் கொடுக்க வேண்டும் என்று விரும்பினால் இந்த ஸ்மூத்தியானது உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும்.
இதில் ஆப்பிள்,பார்லி மற்றும் பேரிச்சை போன்ற சத்தான உணவு வகைகள் அடங்கி இருப்பதால் ஒரு டம்ளர் கொடுத்தாலே குழந்தைகளுக்கு சத்தான காலை உணவு சாப்பிட்டது போன்ற உணர்வினை ஏற்படுத்தும்.
apple dates smoothie:
Apple dates smoothie
- ஆப்பிள்- 1
- பார்லி – 3 டேபிள்.ஸ்பூன்
- பால் அல்லது தேங்காய் பால் – 2 கப்
- டேட்ஸ் -2
- கோக்கோ பவுடர் -1 டீஸ்பூன் (தேவைப்பட்டால்)
Apple dates smoothie
செய்முறை
- ஆப்பிளினை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- ஆப்பிள்,டேட்ஸ்,பார்லி,பால் மற்றும் கோக்கோ பவுடர் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் எடுத்துக் கொள்ளவும்.
- பட்டைத்தூள் தூவி குழந்தைகளுக்கு பரிமாறவும்.
- ஹெல்த்தியான ஸ்மூத்தி ரெடி.
ஆப்பிள் பார்லி டேட்ஸ் ஸ்மூத்தி
ஆப்பிள் பார்லி கஞ்சி உண்பதால் ஏற்படும் நன்மைகள்:
- ஆப்பிள் பழத்தில் நார்ச்சத்துக்கள்,பைட்டா கெமிக்கல்கள்,ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் ஆகியவை நிறைந்து காணப்படுகின்றன.
- ஆப்பிளில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் எளிதில் செரிமானமாக கூடியது. மேலும் மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியது.
- ஆப்பிள் உட்கொள்வதால் எதிர்காலத்தில் நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.
- ஆப்பிளில் வைட்டமின் ஏ,சி போன்றவை காணப்படுவதால் கண் பார்வைக்கு மிகவும் நல்லது.
- பார்லியில் இயற்கையாகவே இருக்கும் ஊட்டச்சத்துக்கள் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும் தன்மை உடையது .
- நார் சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும் இது ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கக்கூடியது.
- பார்லியில் வைட்டமின் சி உள்ளதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க கூடியது.
- அன்றாட உணவில் பார்லியை சேர்ப்பதால் பித்தப்பை கற்கள் வராமல் தடுக்கலாம்.
- பேரிச்சையில் இயற்கையாகவே இரும்புச்சத்து அதிகம் என்பதால் ரத்த சோகை வராமல் தடுக்கலாம்.மேலும் குழந்தைகளின் உணவுக்கு இயற்கையாகவே இனிப்பு சுவையினை அளிக்க வல்லது.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை அறிய 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
குழந்தைகளுக்கு ஆப்பிளினை எப்பொழுது கொடுக்க ஆரம்பிக்கலாம்?
குழந்தைகளுக்கு ஆறு மாதம் காலம் முடிவடைந்த உடன் ஆப்பிளை வேக வைத்து மசியலாக கொடுக்க ஆரம்பிக்கலாம்.
காலை உணவுக்கு பதில் ஆப்பிள் டேட்ஸ் பார்லி ஸ்மூத்தியை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?
ஆம்.இதில் ஆப்பிள்,டேட்ஸ் மற்றும் பார்லி போன்ற சத்தான உணவுகள் கலந்து இருப்பதால் குழந்தைகளுக்கு காலை உணவிற்கு மாற்றாக தாராளமாக இந்த டிரிங்கினை கொடுக்கலாம்.
ஸ்மூத்தியை எந்த வயதில் இருந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்?
இதனை எட்டு மாத காலத்திலிருந்து குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பிக்கலாம்.
பார்லி குழந்தைகளுக்கு நல்லதா?
பார்லியில் நார்சத்துக்கள் நிறைந்துள்ளது .மேலும் ஏராளமான விட்டமின்கள் அடங்கியுள்ளதால் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடியது. எனவே தாராளமாக குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்கலாம்.
ஆப்பிள் பார்லி டேட்ஸ் ஸ்மூத்தி
Ingredients
- · ஆப்பிள்-1
- · பார்லி– 3 டேபிள்.ஸ்பூன்
- · பால்அல்லது தேங்காய் பால் – 2 கப்
- · டேட்ஸ்-2
Notes
- ஆப்பிளினை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- ஆப்பிள்,டேட்ஸ்,பார்லி,பால் மற்றும் கோக்கோ பவுடர் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் எடுத்துக் கொள்ளவும்.
- பட்டைத்தூள் தூவி குழந்தைகளுக்கு பரிமாறவும்.
- ஹெல்த்தியான ஸ்மூத்தி ரெடி.
Leave a Reply