குழந்தைகளைச் சாப்பிட வைப்பதே சவாலான விஷயம்தான். அதிலும் ஆரோக்கிய உணவுகளைச் சாப்பிடக் கொடுப்பதில் தொடங்கும் போராட்டத்துக்கு முடிவே இல்லை. ஆரோக்கிய உணவை அறிமுகப்படுத்துவதில் நாம் நிறைய மெனக்கெட வேண்டும். கலர்ஃபுல்லாகவும் புதுமையாகவும் இருந்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். கடைகளில் கிடைக்கும் பேக்கிங் உணவுகளைவிட வீடுகளில் தயாரிக்கப்படும் கிச்சடி உணவே ஆரோக்கியமானது. தரமானதும்கூட. இது நமக்குத் தெரியும். குழந்தைகளுக்குத் தெரியுமா என்பதுதான் கேள்வி. குழந்தைகளுக்குத் தெரிந்தது உணவின் தோற்றமும் சுவையும்தான். அழகான தட்டில் அலங்கரித்த உணவாகக் கிச்சடியைக் கொடுத்தால், குழந்தைகள் ஆர்வத்துடன் சாப்பிட முன் வருவார்கள். பக்குவமும் இதற்கு முக்கியம். ஆப்பிள் கிச்சடியை ஏன் உங்கள் குழந்தைகளுக்குத் தர வேண்டும் என்பதைப் பார்க்கலாம் வாங்க.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
கிச்சடி என்பது ஒரு சரிவிகித உணவு. ஏனெனில் அரிசியில் உள்ள கார்போஹைட்ரேட் சத்துகளும் பருப்பில் உள்ள புரதச்சத்துகளும் சேர்ந்து குழந்தைகளுக்குத் தேவையான போஷாக்கைத் தரும். மேலும் இதில் சேர்க்கப்படும் ஆப்பிளிலிருந்து நுண்ணூட்ட சத்துக்களைப் பெற முடியும்.
ஆப்பிளில் ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் இருப்பதால், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கிச்சடியில் சாதாரண வெள்ளை அரிசி பயன்படுத்தப்படுவதால் எளிதில் செரிமானமாகும்.
குளுட்டன் ஒத்து கொள்ளாதவர்களுக்கு உணவில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கும். அவர்களுக்குகூட இந்த ஆப்பிள் கிச்சடியைக் கொடுக்கலாம்.
குழந்தைகளின் வயிற்றுக்கு எந்த வித உபாதையும் ஏற்படுத்தாத தன்மை கிச்சடிக்கு உண்டு. இது லேசான உணவாக இருப்பதால் குழந்தைகளுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
மசாலா அதிகம் நிறைந்த உணவுகளைவிட கிச்சடியை நீங்கள் தாராளமாகக் கொடுக்கலாம்.
இதெல்லாம் ஓகே தான். ஆனால் தினமும் ஒரே வகையான கிச்சடியை உங்கள் செல்லக் குழந்தைக்குக் கொடுத்துக் கொண்டிருந்தால் அது நிச்சயம் அவர்களுக்குப் போரடித்து விடும் தானே… எனவே அவர்களின் கிச்சடியில் பல்வேறு விதமான ருசியைக் கூட்டுங்கள்… பழங்களின் கூழைச் சேர்த்து கிச்சடியை நீங்கள் புது விதமான ருசியில் தந்து பாருங்கள். உங்கள் குழந்தைகளுக்கு இந்தச் சுவை நிச்சயம் பிடிக்கும்
ஹெல்த்தி டேஸ்டி ஆப்பிள் கிச்சடி ரெசிபி :
- அரிசி – 100 கிராம்
- பாசிப்பருப்பு – 30 கிராம்
- ஆப்பிள் – 1
- பட்டைத் தூள் – கால் டீஸ்பூன்
செய்முறை :
1. முதலில் ஆப்பிள் கூழைத் தயாரித்துக் கொள்ளுங்கள்.
2. அரிசி மற்றும் பருப்பை 15 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும்.
3. அரிசி மற்றும் பருப்புடன் 250 மில்லி தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் வைத்து நன்றாக வேக விடவும்.
4. கிச்சடி ஆறிய பிறகு, ஆப்பிள் கூழ் மற்றும் பட்டைத்தூளைச் சேர்க்கவும். இந்த இரண்டு கலவையையும் நன்றாகக் கலந்து விடுங்கள்.
ஹெல்த்தியான டேஸ்டியான ஆப்பிள் கிச்சடி தயார்..!
பெரும்பாலான குழந்தைகளுக்கு உணவில் இயற்கையாக இருக்கும் இனிப்பு சுவையைச் சாப்பிட பிடிக்கும். அதனால் செயற்கையான உணவுகளைத் தவிர்த்து விட்டு இதுபோன்ற சத்துகள் நிறைந்த இனிப்பான உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொடுங்கள். புதுச்சுவையில் இருப்பதால், உங்கள் குழந்தையின் பிடித்த உணவாககூட இந்த ஆப்பிள் கிச்சடி மாறக் கூடும்.
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு எங்களை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்துக்கு லைக் போடுங்க.
Leave a Reply