Aval Kanji For Babies in Tamil – Travel Food
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
வீட்டிலே அரிசி அவல் பொடி மிக்ஸ் தயாரிப்பது எப்படி?
அரிசி அவல் 6-வது மாத குழந்தையிடமிருந்தே தொடங்கலாம். சிறு குழந்தைகள் சாப்பிட அரிசி அவல் ஏற்றது. 6 மாதத்துக்குப் பிறகு திட உணவுகள் கொடுக்கத் தொடங்கும்போதிலிருந்தே குழந்தைகளுக்கு அவல் கொடுத்து பழகலாம்.
அவல் பொடி மிக்ஸ்

- அவல் – 100 கிராம்
- சிறு பயறு – 30 கிராம்
செய்முறை
- அவல், சிறு பயறு ஆகியவை தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும்.
- வறுத்த பொருட்களைத் தனித் தனியாக எடுத்து அரைத்துக்கொள்ளவும்.
- அரைத்தவற்றை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.
- உலர்ந்த, காற்று புகாத டப்பாவில் இவற்றைப் போட்டு சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.
- குழந்தைக்கு உணவு தயாரிக்கும் முன் இந்த அவல் பொடி மிக்ஸை எடுத்துக் கிண்ணத்தில் போட்டு, அதில் வெந்நீர் ஊற்றி கலந்து கொள்ளவும். மேலும், சுவையைக் கூட்ட பழக்கூழைக் கலந்து கொள்ளலாம்.

குழந்தையின் பசி, சாப்பிடும் அளவு பொறுத்து 1-3 ஸ்பூன் வரை இந்தப் பொடி மிக்ஸை கலந்து சாப்பிட கொடுக்கலாம்.

100 கிராமில் உள்ள ஊட்டச்சத்துகள்
கலோரிகள் 346
புரதம் 10.73 g
இரும்புச்சத்து 16.28 mg
கரோட்டீன் 38 μg
இதுபோன்ற எளிமையான, குறைந்த பொருட்களில் செய்யகூடிய ஈஸி இன்ஸ்டன்ட் பொடி மிக்ஸ், பயணத்துக்கு தேவைப்படுகின்ற சிம்பிள் ரெசிபிகள் அனைத்தையும் இந்த லிட்டில் மொப்பெட் பிளாகில் நீங்கள் காணலாம். மேலும் குழந்தைகளுக்கு தேவையான, அனைத்து பயனுள்ள தகவல்களையும் இந்த பிளாகில் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.

![6 மாத குழந்தைக்கான உணவு முறைகள் [6 months baby food chart in tamil] 6 months baby food chart](https://tamil.mylittlemoppet.com/wp-content/uploads/2017/09/feature-150x150.jpg)









Leave a Reply