வேகவைத்து மசித்த பீன்ஸ் அல்லது பீன்ஸ் கூழ்
(குழந்தையின் 7 வது மாதத்தில் இருந்து தரலாம்)
Table of Contents
hide
குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்!!!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
- ப்ரெஞ்ச் பீன்ஸ் – 10
- உருளைக்கிழங்கு – பாதி
- வெண்ணெய் – அரை ஸ்பூன் (8 மாதங்களுக்கு பிறகு தரலாம்)
- சீரகத்தூள் – சிறிது
செய்முறை:
- பீன்ஸை நன்றாக கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- அதேபோல் உருளைக்கிழங்கையும் தோல் உரித்து சின்ன சின்ன துண்டுகளாக்கி கொள்ளவும்.
- இரண்டையும் ஒரு பாத்திரத்தில் வைத்து தண்ணீர் நிரப்பிய குக்கருக்குள் வைத்து 4 முதல் 5 விசில்கள் விடவும்.
- பீன்ஸில் உள்ள பச்சை நிறம் அப்படியே இருக்க வேண்டும் என நினைத்தால் சிறிது மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
- பீன்ஸ் நன்றாக வெந்த பிறகு அதனை கைகளால் மசித்து கொள்ளுங்கள்.
- ஒரு கடாயில் வெண்ணெய் விட்டு இந்த கலவையை அதனுடன் சேர்த்து பிரட்டிக் கொள்ளுங்கள். தேவையெனில் ஆலிவ் ஆயில் பயன்படுத்தலாம்.
- ருசிக்காக சீரகப்பொடியை சேர்த்து குழந்தைக்கு கொடுங்கள்.
- உருளைக்கிழங்கிற்கு பதிலாக கேரட் கூட நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் பீன்ஸ் உடன் எந்த காய்கறிகளையும் நீங்கள் சேர்த்து தரலாம்.
தெரிந்து கொள்ள வேண்டியது :
- கடைகளில் பீன்ஸ் வாங்கும் போது அது அடர் பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். எளிதில் ஒடியும் தன்மையுள்ள பீன்ஸ் நல்லது. கறைகள் மற்றும் கருந்திட்டுகள் உள்ள பீன்ஸ்களை வாங்க வேண்டாம்.
- வாயுத் தொல்லையை ஏற்படுத்தக் கூடியது பீன்ஸ் என்பதால் பெற்றோர் இதனை குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு முன் கவனத்தில் கொள்ளுங்கள்.
- தாவரத்தில் இருந்து பெறப்படும் நுண்ணுயிர் சத்துகள், தாதுப்பொருட்கள், வைட்டமின் ஏ, பி1, பி6, சி உள்ளிட்ட சத்துகள் உள்ளன.
- மேலும் இதில் அளவுக்கதிகமான நார்ச்சத்தும், உயிர் வளியேற்ற எதிர்ப்பொருளும் இருக்கிறது.
“வாயுத் தொல்லையை ஏற்படுத்தக் கூடியது பீன்ஸ் என்பதால் பெற்றோர் இதனை குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு முன் கவனத்தில் கொள்ளுங்கள்”
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply