Beetroot Benefits in Tamil: ஜாம் என்றாலே குழந்தைகளுக்கு அலாதி பிரியம் தான். பிரட்டில் ஆரம்பித்து சப்பாத்தி,பிஸ்கட்,தோசை என எல்லாவற்றிற்கும் ஜாம் கேட்கும் குழந்தைகள் எல்லோர் வீட்டிலும் உண்டு. குழந்தைகள் ஏதோ சாப்பிட்டால் பரவாயில்லை என்று ஜாமினை வாங்கி கொடுக்கும் பெற்றோர்களும் நம்மில் ஏராளம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அதேநேரம் பிரசர்வேடிவ்ஸ் மற்றும் கலர் கலந்த ஜாமினை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கின்றோம் என்ற நெருடலும் அம்மாக்களின் மனதில் ஏற்படும் என்பது தட்ட முடியாத உண்மை. பழங்களின் கலவை என கலர் கலராய் பழங்களின் படத்தினை ஜாம் பாட்டில்களில் ஒட்டினாலும் துளியளவு கூட அதில் பழங்கள் சேர்க்கப்படவில்லை என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.
ஆனாலும் வேறு வழியில்லாமல் வாங்கி கொடுக்கிறோம். இப்பொழுது உங்கள் கவலைகளுக்கெ ல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் ரெசிபி தான் இந்த பீட்ரூட் ஜாம். குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது மட்டுமல்லாமல் ஜாமீன் நிறத்தையும் காம்ப்ரமைஸ் செய்யாத ஒரு அசத்தலான ரெசிபி தான் இந்த பீட்ரூட் ஜாம்.
இதையும் படிங்க:ஹெல்தி கீரை பான் கேக்
Beetroot Benefits in Tamil:
- பீட்ரூட் -2
- நாட்டுச்சர்க்கரை – ¼ கப்
- லெமன் ஜூஸ்- 1 டீ. ஸ்பூன்.
குழந்தைகளுக்கான பீட்ரூட் ஜாம்
செய்முறை
1.பீட்ரூட்டை நன்கு கழுவி தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.
2.ஒரு பானில் போட்டு ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.
3.மூடியால் மூடி 5 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.
4.மிக்சி ஜாரில் பீட்ரூட் ,லெமன் ஜுஸ் சேர்க்கவும்.
5.நன்றாக அரைக்கவும்.
6.கலவையினை பானில் ஊற்றி நன்றாக கிளறவும்.
7.நாட்டுச்சர்க்கரை சேர்க்கவும்.
8.ஜாம் பதத்திற்கு வரும்வரை கிளறவும்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கான ராகி பால்
பீட்ரூட்டில் எண்ணிலடங்கா சத்துக்கள் உள்ளன என்பது நாம் அறிந்த ஒன்றுதான் என்றாலும் அவை என்னென்ன என்பதையும் எப்படி உடலுக்கு நன்மை பயக்கும் என்பதையும் ஒரு பார்வை பார்க்கலாம்.
- பீட்ரூட்டில் உடலுக்குத் தேவையான மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
- இரத்தத்தில் சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.
- பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை அழித்துவிடும்.
- உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.
- எலும்புகளை வலுவடைய செய்யும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
குழந்தைகளுக்கான பீட்ரூட் ஜாம்
Ingredients
- 2 பீட்ரூட்
- ¼ கப் நாட்டுச்சர்க்கரை
- 1 டீ. ஸ்பூன் லெமன்ஜூஸ்
Instructions
- 1.பீட்ரூட்டைநன்கு கழுவி தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டவும்.
- 2.ஒருபானில் போட்டுஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.
- 3.மூடியால்மூடி 5 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.
- 4.மிக்சிஜாரில் பீட்ரூட் ,லெமன் ஜுஸ் சேர்க்கவும்.
- 5.நன்றாகஅரைக்கவும்.
- 6.கலவையினைபானில் ஊற்றி நன்றாக கிளறவும்.
- 7.நாட்டுச்சர்க்கரைசேர்க்கவும்.
- 8.ஜாம் பதத்திற்கு வரும்வரை கிளறவும்.
Leave a Reply