Broccoli Soup in Tamil: குழந்தைகள் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்ததும் அவர்களுக்கு நல்ல சுவையுடன் ஆரோக்கியமான சிற்றுண்டி நீங்கள் கொடுக்க வேண்டும் என நினைத்தால் அதற்கு இந்த பூண்டு ரோஸ்டட் ப்ரோக்கோலி சூப் நல்ல தேர்வாகும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ப்ரோக்கோலி என்பது இயற்கையிலேயே அபரிமிதமான சத்துக்கள் நிறைந்த ஒரு தாவர வகையாகும். ஆனால் இதனை குழந்தைகளுக்கு பொறியலாக செய்து கொடுக்கும் பொழுது பெரும்பாலான குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்.
ஆனால் அவர்களுக்கு இந்த மாதிரியான ஆரோக்கியமான சூப் கொடுத்துப் பாருங்கள். கண்டிப்பாக சாப்பிடுவார்கள். மேலும் இதில் கடையில் சேர்க்கப்படுவது போல் கிரீம் வகைகள், மாவுகள், பால் போன்றவை சேர்க்கப்படுவதில்லை என்பதால் குழந்தைகளுக்கு நன்மை அளிக்கக் கூடியது.
Broccoli Soup in Tamil:
Broccoli Soup in Tamil:
இந்த சூப்பினை எப்படி செய்வது என்று பார்ப்பதற்கு முன்னால் ப்ரோக்கோலி நிறைந்துள்ள நன்மைகளை பார்க்கலாம்:
ப்ரோக்கோலியில் இயற்கையாகவே வைட்டமின் சி நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது.
- இதில் நிறைந்துள்ள வைட்டமின் கே எனப்படும் சத்து ரத்தம் உறைதலுக்கு மிகவும் அவசியமாகும். மேலும் இது எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- ப்ரோக்கோலியில் நிறைந்துள்ள போலேட் எனப்படும் சத்தானது செல்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- இதில் நிறைந்துள்ள பொட்டாசியம் நரம்புகள் மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- நார் சத்துக்கள் அதிகம் என்பதால் மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியது.
- ப்ரோக்கோலியை உணவாக எடுத்துக் கொள்ளும் பொழுது வயிறு நிரம்பிய திருப்தியை கொடுக்கும் என்பதால் அதிகப்படியான உணவு எடுத்துக் கொள்ளாமல், குறைவான உணவிலேயே அதிக கலோரிகள் நம் உடலுக்கு கிடைக்கும். இதனால் தேவையற்ற கொழுப்புகள் உடலில் சேராது.
- இதில்நிறைந்திருக்கும் ஆன்டிஆக்சிடென்ட் முதலிலேயே சத்துக்கள் செல்கள் சிதைவடைவதில் இருந்து தடுக்கின்றது.
- இதில் இருக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நாள்பட்ட நோய்கள் உடலில் ஏற்படாமல் தடுக்கின்றது.
- இது நிறைந்திருக்கும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- இதில் இயற்கையாகவே உள்ள வைட்டமின் ஏ குழந்தைகளின் பார்வை திறனை மேம்படுத்த வல்லது
- இரும்பு சத்துக்கள் இதில் இருப்பதால் ரத்தத்திற்கு தேவையான ஆக்சிஜனை கொடுக்கின்றது. இதில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்,, உடல் நலனை காக்க உதவுகின்றது.
- இதில் தண்ணீர் சத்துக்கள் அதிகம் என்பதால் குழந்தைகளின் உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்கின்றது.
இது மட்டுமல்லாமல் இதில் குழந்தைகளின் உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய வெங்காயம், பூண்டு, மிளகுத்தூள் போன்றவை சேர்க்கப்படுவதால் குழந்தைகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியமான வளர்ச்சிக்கு துணை புரிகின்றது.
Broccoli Soup in Tamil
- பிரக்கோலி-1
- வெங்காயம்-1
- பிரியாணி இலை-1
- தண்ணீர்-500 மில்லியன்
- கடலை எண்ணெய்- ஒரு டீஸ்பூன்.
- பொடியாக நறுக்கிய பூண்டு-8.
- உப்பு மற்றும் மிளகு தூள்
- மொறுமொறுப்பான பிரெட் துண்டுகள்- தேவைப்பட்டால் மேலே தூவ
Broccoli Soup in Tamil
செய்முறை
- பிரக்கோலியை நன்றாக கழுவி சுடுதண்ணீரில் 2-3 நிமிடங்களுக்கு போடவும்.
- தண்ணீரை வடிகட்டவும்.
- ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றவும். அதில் ப்ரோக்கோலி நறுக்கிய வெங்காயம் , ப்ரோக்கோலி நறுக்கிய வெங்காயம் மற்றும் பிரியாணி இலை சேர்க்கவும்.
- ஐந்து நிமிடங்களுக்கு வேகவைத்து அனுப்பினை ஆப் செய்யவும். பிரியாணி இடையே வெளியே எடுத்து தண்ணீரை ஆற விடவும்.
- மிக்ஸியில் இதனை நன்றாக அரைக்கவும்.
- ஒரு கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். அதில் பொடியாக நறுக்கிய பூண்டினை போட்டு பொன்னிறமாக வரும் அளவிற்கு வறுக்கவும்.
- சிறிதளவு பூண்டினை மேலே தூவ எடுத்து வைத்துக் கொள்ளவும். அரைத்து வைத்த ப்ரோக்கோலி கலவையை அதில் ஊற்றவும்.
- தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும் கலவையை நன்கு கொதிக்க விடவும்.
- நன்கு வாசனை வந்ததும் அடுப்பை அணைக்கவும். மேலே மீதமுள்ள பூண்டு மற்றும் தேவைப்பட்டால் ரோஸ்ட் செய்த பிரட் துண்டுகள் தூவி பரிமாறவும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Broccoli Soup in Tamil:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:
ப்ரோக்கோலியை ஏன் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்?
ப்ரோக்கோலியில் குழந்தைகளுக்கு தேவையான முக்கிய வைட்டமின்களான வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே , ஃபோலேட், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே குழந்தைகளுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதுடன், குழந்தைகளின் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கின்றது.
ப்ரோக்கோலியை எவ்வாறு உண்ண செய்யலாம்?
ப்ரோக்கோலியை மேலே கொடுக்கப்பட்டது போன்று சூப்பாக செய்து கொடுக்கலாம். மேலும் குழந்தைகளுக்கு விருப்பமான உணவு பொருட்கள் ஆனா பாஸ்தா, நூடுல்ஸ் போன்றவை செய்து கொடுக்கும் பொழுது இதனை போட்டு கொடுக்கலாம்.
Leave a Reply